Home
News

திணறடிக்கும் தள்ளுபடி.. OPPO-வின் 5ஜி போன்கள், டேப்லெட் வாங்க சரியான நேரம்.. அடிச்சி புடிச்சி வாங்குவீங்க!

ஒப்போ நிறுவனம் ஒப்போ சுதந்திர தின சேல் (Oppo Independence Day Sale) எனும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு அசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் ஒப்போ அறிவித்த சிறப்பு விற்பனை ஆனது வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறும்.

அதேபோல் இந்த சிறப்பு விற்பனை ஆனது ஒப்போ இ-ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சிறப்பு விற்பனை பல்வேறு வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எந்தெந்த போன்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.

OPPO-வின் 5ஜி போன்கள், டேப்லெட் வாங்க சரியான நேரம்..

அதாவது ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி, ஒப்போ ரெனோ 10 5ஜி, ஒப்போ எப்21எஸ், ஒப்போ எப்21எஸ் ப்ரோ 5ஜி, ஒப்போ எப்23 5ஜி, ஒப்போ ஏ17, ஒப்போ ஏ58, ஒப்போ ஏ78, ஓப்போ ஏ78 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஒப்போ நிறுவனம் அறிவித்த தகவலின்படி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போன்களை வாங்கும் பயனர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

மேலும் இஎம்ஐ விருப்பங்களிலும் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் ஒப்போ பேட் ஏர் எனும் டேப்லெட் மாடலுக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஒப்போ பேட் ஏர் மாடலை தற்போது ரூ.14,999-விலையில் வாங்க முடியும். மேலும் இப்போது இந்த ஒப்போ பேட் ஏர் மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த ஒப்போ பேட் ஏர் மாடல் (Oppo Pad Air) ஆனது 2000 x 1200 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 10.36-இன்ச் அளவிலான 2கே டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதேபோல் மெட்டல் பாடியுடன் வரும் ஒப்போ பேட் ஏர் ஆனது அளவீட்டில் வெறும் 6.94 மிமீ (தடிமன்) மட்டுமே உள்ளது. 10-இன்ச் டிஸ்பிளேவுடன் வரும் மிகவும் 'லைட்' ஆன மற்றும் மெல்லிய டேப்லெட்களில் இதுவும் ஒன்று.

ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இந்த டேப்லெட் இயக்கப்படுகிறது மற்றும் இது 6ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒப்போ நிறுவனத்தின் இந்த முதல் டேப்லெட் ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த லேயர் கலர்ஓஎஸ் 12 கொண்டு இயங்குகிறது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்/2.0 லென்ஸ் உடனான சிங்கிள் 8எம்பி ரியர் கேமராவை கொண்டுள்ளது இந்த ஒப்போ பேட் ஏர் மாடல். முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 5எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த மெல்லிய டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

OPPO-வின் 5ஜி போன்கள், டேப்லெட் வாங்க சரியான நேரம்..

டால்பி அட்மோஸ் ஆதரவுடனான குவாட் ஸ்பீக்கர்களுடன் வரும் இந்த ஒப்போ டேப்லெட் ஆனது 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 7100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. அதேபோல் இந்த டேப்லெட் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேசமயம் இந்த டேப்லெட் விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.

குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒப்போ பேட் ஏர் மாடல் ஆனது கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் ஒப்போ நிறுவனம் விரைவில் பல அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Independence Day sale: 10 percent discount on Oppo Reno10 Pro, Oppo A78 5G and other phones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X