நீங்களுமா: ஒப்போ ஏ 54, எஃப் 19 விலை அதிகரிப்பு- பட்ஜெட் விலையில் இருந்துச்சு., இப்போ?

|

இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விலை அதிகரிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு பிராண்ட் நிறுவனங்களும் தங்களின் சாதனங்கள் விலையை அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கும் விலை உயர்வு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது ஒப்போவின் இந்த சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. ஒப்போ ஏ54 சாதனம் மற்றும் ஒப்போ எஃப்19 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலையின் விவரம் குறித்து பார்க்கலாம்.

ஒப்போ ஏ54 மற்றும் ஒப்போ எஃப் 19 விலை

ஒப்போ ஏ54 மற்றும் ஒப்போ எஃப் 19 விலை

ஒப்போ ஏ54 மற்றும் ஒப்போ எஃப் 19 விலை ரூ.1000 அதிகரிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஒப்போ ஏ54 ரூ.500 விலை உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக தற்போது விலை உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ.13,490 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,990 ஆக இருக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் வசதியோடு வரும் ஒப்போ எஃப் 19 ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ.18,990 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.19,990 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலை உயர்வு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்டேரி ப்ளூ, மூன்லைட் கோல்ட் மற்றும் கிரிஸ்டல் பிளாக் ஆகிய வண்ண விருப்பத்தில் வருகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

அதேபோல் புதுப்பிக்கப்பட்ட விலைக்கு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மாடலை வாங்கலாம். ஒப்போ எஃப் 19 ஸ்மார்ட்போன் வண்ண விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இது ஃப்ளூயிட் பிளாக், கிரிஸ்டல் சில்வர் மற்ரும் அமேசிங் வயலெட் ஆகிய வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இரண்டு சாதனங்களையும் அமேசானின் இதிகாரப்பூர்வ வலைதளத்தில் மூலம் வாங்கலாம்.

180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதம்

180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதம்

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தோடு வருகிறது. அதேபோல் 90.5 சதவீத டிஸ்ப்ளே டூ பாடி விகிதத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. மேலும் இதில் அட்ரினோ 619 ஜிபீயூ, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்போடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது.

48 எம்பி மெகாபிக்சல் கேமரா

48 எம்பி மெகாபிக்சல் கேமரா

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் முன்பக்கத்தின் மேல் இடது மூலையில் 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட்

மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட்

ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ColorOS 11சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.

ஒப்போ எஃப்19 சீரிஸ் ஸ்மார்ட்போன்

ஒப்போ எஃப்19 சீரிஸ் ஸ்மார்ட்போன்

ஒப்போ எஃப்19 சீரிஸ் ஸ்மார்ட்போனானது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 12என்எம் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ColorOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு, எல்இடி பிளாஸ்உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo increased the prices of its Budget Smartphone Oppo A54, Oppo F19

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X