இனி டிஸ்ப்ளேக்கு மேல இல்ல கீழ இருக்கும்- ஓப்போவின் புதிய தொழில்நுட்பம்!

|

ஒப்போ அண்டர்-ஸ்க்ரீன் கேமரா தீர்வு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அமைப்பானது புதிய வடிவமைப்பு மற்றும் ஏஐ வழிமுறைகளில் பல புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. ஒப்போ இன்று தனது அடுத்த தலைமுறை சாதனமான அண்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய ஒப்போ சாதனம் திரை கீழ் கேமரா தீர்வுடன் வர இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் கீழ் முன்புற கேமராவுடன் வர இருக்கிறது. நிலைத்தன்மையோடு இந்த கேமரா அம்சம் வரும்.

இனி டிஸ்ப்ளேக்கு மேல இல்ல கீழ இருக்கும்- ஓப்போவின் புதிய தொழில்நுட்பம்

ஒப்போ அண்டர்-ஸ்கிரீன் கேமரா தீர்வு நிலையான திரை தரம் மற்றும் கேமரா படத் தரம் ஆகியவைகளின் சமநிலையோடு வருகிறது. திரையின் கீழ் வரும் கேமரா அம்சங்கள் ஆனது அதன் வளர்ச்சியின் தொடக்கத்தில் இருந்த திரையின் கீழ் கேமரா என்ற தொழில்நுட்பத்தை பாதித்த பல சவால்களை தீர்க்கிறது.

திரையின் கீழ் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா அம்சங்களானது இதுவரை இருந்த சீரற்ற காட்சி தரம், திரையின் மூலம் ஏற்பட்ட கேமராவால் ஏற்பட்ட தடை ஆகிய சிக்கலை தீர்க்க அனுமதிக்கிறது. அதுமட்டுமின்றி கேமராவின் பட தரம் மற்றும் தயாரிப்பு நம்பகத்தன்மையை இந்த முறைமை மேம்படுத்துகிறது.

ஒப்போ மேம்படுத்தப்பட்ட திரையின் கீழ் கேமரா தீர்வை வழங்குவதன் மூலம் முழுத்திரை அனுபவத்தை அனுபவிக்க முடியும். காட்சிக்கு ஒப்போவின் அடுத்த தலைமுறை கீழ்-திரை கேமரா தீர்வு அமைப்பு ஆனது ஏஐ வழிமுறைகளில் பல புதுமைகலை அறிமுகப்படுத்த உள்ளது.

காட்சிக்கு, ஒப்போவின் அடுத்த தலைமுறை கீழ்-திரை கேமரா தீர்வு அமைப்பு வடிவமைப்பு மற்றும் AI வழிமுறைகளில் பல புதுமைகளை அறிமுகப்படுத்துகிறது. புதிய தீர்வு கேமரா பகுதியில் 400 பிபிஐ உயர்தர காட்சியை உறுதி செய்ய அனுமதிக்கும் என கூறப்படுகிறது.

இனி டிஸ்ப்ளேக்கு மேல இல்ல கீழ இருக்கும்- ஓப்போவின் புதிய தொழில்நுட்பம்

ஒப்போவின் புதிய அம்சமானது பாரம்பரிய திரை வயரிங் அனுபவத்தை வழங்குகிறது. வயரிங் அகலத்தை 50% குறைத்து துல்லியமான உற்பத்தி செயல்முறை மேற்கொள்கிறது. இது மென்மையான காட்சி அனுபவத்துடன் மிகச்சிறந்த காட்சி தரத்தை அளிக்கிறது.

கேமராவுக்கு மேலே உள்ள திரை பகுதியில் ஒப்போ தனியுரிமை திரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒப்போவின் இந்த தொழில்நுட்பம் திரையின் நிறமாற்றத்தையும் பிரகாசத்தையும் துல்லியமாக வழங்க அனுமதிக்கிறது. கூடுதலாக இ-புக் தர அனுபவத்தையும் வழங்குகிறது. இதில் துல்லியமான காட்சி மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை வழங்குகிறது. வண்ணங்களின் மேம்பட்ட பிரதிநிதித்துவம் ஆகியவற்றை அனுமதிக்கிறது.

இது சீரான மற்றும் மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. பிரத்யேக ஆப்டிமைசேஷன் அல்காரிதம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் ஓப்போவின் அடுத்த தலைமுறை அனுபவத்தை வழங்க இருக்கிறது. கேமராவை பொறுத்தவரை இமேஜிங் ஏஐ வழிமுறைகள் உருவாக்கியுள்ளன. இது மங்கலான காட்சி உள்ளிட்ட பல குறைகளை தீர்க்க அனுமதிக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Going to Unveil the Under Screen Camera Solution

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X