Home
News

இருக்கு., பெரிய சர்ப்ரைஸ் இருக்கு: மர்மமான ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸமார்ட்போன் விரைவில்- அம்சங்கள் இதுவா?

இந்த ஆண்டு பல முதன்மை ஸ்மார்ட்போன் வெளியீடுகளை சந்தித்திருக்கிறோம். 2021 ஆம் ஆண்டின் மீதமுள்ள பாதியில் அதிகாரப்பூர்வமாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் டீனா மூலமாக சான்றிதழை பெற்றிருக்கிறது. அறியப்படா ஒப்போ ஸ்மார்ட்போன் ஐக்யூ 8 சீரிஸ் உட்பட பிற சாதனத்துக்கு எதிராக டாப் ஆஃப்லைன் வன்பொருளுடன் காணப்படுகிறது. புதிய மர்மமான ஒப்போ ஸ்மார்ட்போன் குறித்து எதிர்பார்க்கப்படும் தகவல்களை பார்க்கலாம்.

மர்மமான ஸ்மார்ட்போனாக ஒப்போ

மர்மமான ஸ்மார்ட்போனாக ஒப்போ

சீன மொபைல் அங்கீகார தளமான டீனா-க்கு வருகை தந்த சமீபத்திய மர்மமான ஸ்மார்ட்போனாக ஒப்போ இருக்கிறது. அதில் PEYM00 என்ற மாடல் எண்ணைக் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வ மோனிகர் இன்றி ஒப்போ என பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போனுக்கு வலைத்தளம் சான்றிதழ் வழங்குவது இது முதல்முறை அல்ல.

அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் குறிப்பிட்ட விவரங்கள்

அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் குறிப்பிட்ட விவரங்கள்

வலைதளம் பொதுவாக அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் குறிப்பிட்ட விவரங்களை பட்டியலில் காணப்பட்ட சிறிது நேரத்தில் அறிவிக்கும். அதன்படி ஒப்போ PEYM00 ஸ்மார்ட்போனும் உள்ளடக்கம். டீனா பட்டியல் தற்போது PEYM00 ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகளையும் வெளிப்படுத்தியது. இருப்பினும் படங்கள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. மோனிக்கர் முன்னோக்கி எடுத்துச் செல்லும் எதிர்பார்க்கப்படும் தகவல்களை பார்க்கலாம்.

ஒப்போ PEYM00 என்ற மாடல்எண்

ஒப்போ PEYM00 என்ற மாடல்எண்

ஒப்போ PEYM00 தற்போது வரையறுக்கப்பட்ட தளங்களில் காணப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவலை எப்போது அறிவோம் என்பது கடினமாகும். பிராண்ட் முற்றிலும் ஒரு புதிய வரிசையை அறிமுகப்படுத்துமா அல்லது ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனான ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் மற்றும் ரெனோ சீரிஸ் வரிசைகளில் அறிமுகப்படுத்துமா என கூற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

ஒப்போ PEYM00 அதிகாரப்பூர்வமாக அட்டவணையில் அனைத்து முக்கிய அம்சங்களுடன் டீனா பட்டியலில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் செயலியுடன் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இது 3ஜிகாஹெர்ட்ஸ் கிளாக் வேகத்தை கொண்டுள்ளது. ஆன்லைன் அறிக்கைகளில் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் அல்லது டைமன்சிட்டி 1200 செயலியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு செயலிகளும் நவீனகால முதன்மை சாதனங்களுடன் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் ப்ரீமியம் தர ஒப்போ சாதனம் வருவது உறுதி. ஒப்போ PEYM00 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 1080x2400 பிக்சல்கள் தீர்மானத்துடன் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே அளவைக் கொண்டுள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் அல்லது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் கேமரா விவரக்குறிப்புகள்

ஸ்மார்ட்போனின் கேமரா விவரக்குறிப்புகள்

அதேபோல் மர்மமான ஒப்போ ஸ்மார்ட்போனின் கேமரா விவரக்குறிப்புகள் டீனா பட்டியலில் வெளிப்படுத்தப்படுகின்றன. இதன் பின்புற பேனலில் 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார் இடம்பெறும். அதேபோல் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலம் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இடம்பெறுகின்றன.

4400 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

4400 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி ஸ்னாப்பர் இடம்பெறும் என கூறப்படுகிறது. பஞ்ச் ஹோல் அமைப்போடு இதுவரும் என தெரிவிக்கப்படுகிறது. டீனா பட்டியலில் கூறப்பட்டுள்ளபடி இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மற்றும் பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் அடங்கும் என கூறப்படுகிறது. இது 5ஜி நெட்வொர்க் ஆதரவோடு, ப்ளூ பிளாக் மற்றும் சில்வர் வண்ண விருப்பங்களில் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo Flagship Smartphone Cleared its Certification in TENAA With PEYMOO Model Number
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X