Home
News

என்னாது இது.. ஓஹோ இது தான் ஆக்டாகோணல் கேமராவா? 1 இன்ச் Sony LYT-900 சென்சாருடன் வரும் Oppo Find X7 Pro..

ஒப்போ (Oppo) நிறுவனம் அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 ப்ரோ (Oppo Find X7 Pro) சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் விசித்திரமான கேமரா அமைப்புடன் காணப்பட்டுள்ளதாக லீக் தகவல் குறிப்பிடுகின்றன.

ஒப்போ (OPPO) நிறுவனம் ஒரு பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் நீண்ட காலமாக வேலை பார்த்து வருகிறது. ஒன்பிளஸ் 12 (OnePlus 12) சாதனத்திற்கு போட்டியாக இது களமிறக்கப்படலாம் என்றும் வதந்திகள் பரவி வந்தது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய எந்த தகவலும் இதுவரை லீக் (smartphone leaks) செய்யப்படாமல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

என்னாது இது.. ஓஹோ இது தான் ஆக்டாகோணல் கேமராவா? Oppo Find X7 Pro லீக்..

ஆனால், நீண்ட காலமாக பூட்டி வைக்கப்பட்டிருந்த ரகசியம் இன்று இணையத்தில் புகைப்படத்துடன் லீக் ஆகிவிட்டது. ஒப்போவின் அடுத்த சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன் சாதனமாக வெளிவர இருக்கும் மாடல் தான் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 ப்ரோ (Oppo Find X7 Pro). இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்க டிஸ்பிளே புகைப்படம் மற்றும் மிகவும் விதியசமான ஆக்டாகோணல் கேமரா பம்ப் (octagonal camera bump) புகைப்படம் இப்போது இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது.

மிகவும் வித்தியாசமான ஆக்டாகோணல் கேமரா பம்ப் ஸ்மார்ட்போன் (octagonal camera bump smartphone):

இதுவரை இந்த சாதனத்தின் சிறப்பம்ச விபரங்கள் கூட இணையத்தில் லீக் செய்யாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 ப்ரோ (Oppo Find X7 Pro) ஸ்மார்ட்போனின் அசல் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி, ஒப்போ ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ளது. இந்த புகைப்படம் நோவைஸ் ஏவொலுஷன் (Novice evaluation) என்ற பயனரால் வெய்போ (Weibo) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மிகவும் விதியசமான இந்த ஆக்டாகோணல் கேமரா பம்ப் (octagonal camera bump) அமைப்பு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குவாட் கேமரா அமைப்பிற்கான மிகவும் சரியான டிசைனாக தெரிகிறது. வெளியான லீக் தகவலில் இந்த ஆக்டாகோணல் கேமரா பம்ப் இல் டூயல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ சென்சார்கள் (dual periscope telephoto sensors) இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு சென்சார் IMX890 பெரிஸ்கோப் லென்ஸாக (IMX890 periscope lens) இருக்கலாம்.

என்னாது இது.. ஓஹோ இது தான் ஆக்டாகோணல் கேமராவா? Oppo Find X7 Pro லீக்..

1' இன்ச் சோனி LYT-900 சென்சார்(1-inch Sony LYT-900 sensor):

இந்த ஒப்போ போனின் மெயின் கேமரா 1 இன்ச் சோனி LYT-900 (1-inch Sony LYT-900) சென்சராக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக லீக் தகவல் குறிப்பிடுகிறது. இத்துடன் ஒரு IMX890 அல்ட்ராவைட் சென்சார் (IMX890 ultrawide sensor) இடம் பெரும் என்றும் லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரவிருக்கும் புதிய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32MP செல்பி கேமரா (IMX709 selfie camera) இடம்பெறுமென்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 ப்ரோ (Oppo Find X7 Pro) ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில், இது 2K ரெசொலூஷன் கொண்ட 6.6' இன்ச் அளவு கொண்ட AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு பிளாக்ஷிப் சாதனமாக வெளிவரும் என்பதனால் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 chipsets) இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 12 இன்று அறிமுகம் (OnePlus 12 launch today):

இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 ப்ரோ (Oppo Find X7 Pro) ஸ்மார்ட்போனின் அறிமுகம் வரும் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) சாதனத்துடன் போட்டியிட அதிக வாய்ப்புளள்து. தெரியாதவர்களுக்கு, ஒன்பிளஸ் நிறுவனம் இன்று அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 12 சாதனத்தை அறிமுகம் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find X7 Pro Spotted With Octagonal Camera Bump With 1 Inch Sony LPT-900 Sensor Online Leak
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X