Home
News

iPhone, Samsung, OnePlus-லாம் இந்த போனுக்கு முன்னாடி ஜுஜூபி.! உலகின் பெஸ்ட் கேமரா போன்னே இதானாம்!

உலகத்திலேயே பெஸ்ட் கேமரா அம்சம் கொண்ட போன் எது என்ற கேள்வியை கேட்டால், உடனே எல்லோரும் ஆப்பிள் ஐபோன், சாம்சங், ஒன்பிளஸ் தான் கெத்து.. மத்தது எல்லாம் வெத்துனு டயலாக் விடுவாங்க.. ஆனா, இது எதுவுமே பெஸ்ட் கேமரா போன் இல்லையாம்.

கேட்கவே ஷாக்கிங்கா இருக்குல.. ஆனா இது தான் உண்மை என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகத்தின் பெஸ்ட் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் சாதனம் எது என்ற விபரம் இப்போது இணையத்தில் ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது. லேட்டஸ்ட் ஐபோன், உயர் தெளிவு திறன் கொண்ட சாம்சங் சாதனம், ஸ்பெஷலாக டியூன் செய்யப்பட்ட ஒன்பிளஸ் கேமரா என்று எல்லாமே லிஸ்டில் பின்னாடி சென்றுவிட்டது.

iPhone, Samsung, OnePlus-லாம் இந்த போனுக்கு முன்னாடி ஜுஜூபி.!

யாருமே எதிர்பார்த்திடாத ஒரு பிராண்ட் இப்போது உலகின் மிகச் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக தேர்வாகியுள்ளது. DXOMARK என்ற கேமரா பெஞ்ச்மார்க்கிங் தளத்தின் தகவல் படி, உலகத்தின் மிக சிறந்த ஸ்மார்ட்போன் கேமராவை கொண்ட சாதனமாக OPPO Find X6 Pro தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆம், ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இந்த ஸ்மார்ட்போனில் தான் உலகத்தின் மிகச் சிறந்த கேமரா அம்சம் இருக்கிறதாம்.

Oppo Find X6 Pro ஸ்மார்ட்போன் ஆனது DXOMARK இன் மூலம் வழங்கப்பட உலகின் மிகச் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன் விருதை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் மிக சிறந்த கேமராவை கொண்ட ஸ்மார்ட்போன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக, அல்ட்ரா பிரீமியம் பிரிவில் நடத்தப்பட்ட போட்டியில் இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் விருதைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

OPPO நிறுவனம் கடந்த மாதம் சீனாவில் Oppo Find X6 உடன் Oppo Find X6 Pro சாதனத்தை அறிமுகப்படுத்தியது. DXOMARK இன் தகவல்படி, இந்த ஸ்மார்ட்போனின் மொத்த கேமரா மதிப்பெண் 153 புள்ளிகளைப் பெற்றுள்ளது. சிறந்த கேமரா ஸ்மார்ட்போன் என்ற பட்டியலில் ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மற்றும் கூகுள் நிறுவனத்தின் கூகிள் பிக்சல் 7 ப்ரோ போன்றவை பங்குபெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

iPhone, Samsung, OnePlus-லாம் இந்த போனுக்கு முன்னாடி ஜுஜூபி.!

இந்த சாதனம், ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கொடிகட்டிப் பறக்கும் 2 மிக பெரிய ஜாம்பவான்களை வீழ்த்தி, முறியடித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பலதரப்பட்ட கேமரா சோதனைகளின் அடிப்படியில் இந்த விருது Oppo Find X6 Pro-விற்குக் கிடைத்துள்ளது. போட்டோ மற்றும் வீடியோ தரம், லோ-லைட் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் என்று பல விதங்களில் அணைத்து போன்களின் கேமராவும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இறுதியில் Oppo Find X6 Pro வெற்றி பெற்றுள்ளது.

இந்த புதிய Oppo Find X6 Pro சாதனத்தின் கேமரா சிறப்பாசம் பற்றி பேசுகையில், இது OIS உடன் 50MP பிரைமரி சென்சார், 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிக்காக 32MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களை Hasselblad நிறுவனம் சிறப்பாக டியூன் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே Hasselblad அம்சம் ஒன்பிளஸ் சாதனத்திலும் உள்ளது. ஆனால், ஒன்பிளஸ் முதலிடம் பிடிக்கவில்லை.

Best Mobiles in India

English summary
OPPO Find X6 Pro has been awarded the worlds best camera smartphone by DXOMARK
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X