மிரட்டலான அம்சங்களுடன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3.. எப்போ அறிமுகம்?
மிரட்டலான அம்சங்களுடன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று சமீபத்திய டிப்ஸ்டர் தகவல் தெரிவித்துள்ளது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உடன் அண்ட்ராய்டு 11 இல் இயங்கும் புதிய கலர்ஓஎஸ் பதிப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த ஸ்மார்ட்போனுடன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 நியோ, மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 லைட் ஆகிய மாடல்களும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 உடன் வெளிவரும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த புதிய மாடல்கள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ் தொடரின் சமீபத்திய மாடல்களாக அறிமுகப்படுத்தப்படலாம்.
சமீபத்தில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 போனின் மாடல் எண்ணை PEDM00 கொண்டு AIDA64 மற்றும் AnTuTu பயன்பாடுகள் கீக்பெஞ்ச் பட்டியலில் காணப்பட்டது. AIDA64 பட்டியல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் ஸ்மார்ட்போன் "கோனா" என்ற குறியீட்டு பெயரில் ஒரு சிப்செட் இருப்பதையும் காட்டுகிறது. கோனா என்ற பெயர் கடந்த காலங்களில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் தொடர்புடையது .
இருப்பினும், ட்விட்டர் பயனரால் பகிரப்பட்ட ஸ்கிரீன் ஷாட் மூலம் காட்டப்பட்டுள்ளபடி, AnTuTu பட்டியல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உடன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ஐ தெளிவாகக் காட்டுகிறது . அந்த பட்டியல் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 உடன் கலர்ஓஎஸ் 11.2 ஐ பரிந்துரைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 1,080x2,412 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளேயுடன், 12.6 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் கொண்டிருக்கிறது.
கீக்பெஞ்ச் பட்டியலும் இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் மதிப்பெண் 4,280 மற்றும் மல்டி கோர் ஸ்கோர் 12,843 ஆகியவற்றைப் பெற்றது என்பதைக் காட்டுகிறது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 போனின் இன்னும் பல சுவாரசிய தகவல்களை வரும் வாரங்களில் நாம் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications