மிரட்டலான அம்சங்களோடு Oppo Find X2 Pro, Oppo Find X2 அறிமுகம்!

|

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனை நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களோடு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Oppo find x2 மற்றும் Oppo find x2  pro

Oppo find x2 மற்றும் Oppo find x2 pro

Oppo find x2 மற்றும் Oppo find x2 pro இந்தியாவில் புதுமாடலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதுமாடல் ஸ்மார்ட்போனானது 120Hz அல்ட்ரா விஷன் டிஸ்ப்ளே மற்றும் ஹோல் பன்ச் வடிவமைப்போடு வருகிறது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் க்வால்காம் ஸ்நாப்டிராகன் 865 எஸ்ஓசி 5ஜி ஆதரவோடு கிடைக்கிறது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ பெரிஸ்ஹோப் வடிவமைப்பு லென்ஸ் உடன் 10 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் ஆதரவோடு வருகிறது. ஸ்மார்ட்போன் 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி பதிப்பு லம்போர்கினி வர்த்தகத்துடன் இணைந்து இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மாயன் சொன்ன பூமியின் இறுதிநாள் 2020 தான்! 8 வருடங்களுக்கு பிறகு நம்பமுடியாத கணக்கு!மாயன் சொன்ன பூமியின் இறுதிநாள் 2020 தான்! 8 வருடங்களுக்கு பிறகு நம்பமுடியாத கணக்கு!

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு

ஒப்போ ஃபைண்ட் ப்ரோ ஸ்மார்ட்போனானது ப்ளாக், ஓசன் செராமிக் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்டபோனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு உள்ளிட்ட வசதியோடு கிடைக்கிறது. அதேபோல் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிசன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இருப்பினும் இதன் விற்பனை தேதி குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை.

லம்போர்கினி எடிசன்

லம்போர்கினி எடிசன்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிசன் 3-டி ரிட்ஜ் ஃபோர் லேயர் கார்பன் பைபர் போன்ற பின்பற அமைப்பை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அதோடு இதில் ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிசன் லெதர் கேஷ், வயர்லெஸ் இயர்போன் வசதியோடு கிடைக்கிறது.

டூயல் சிம், ஆண்ட்ராய்டு 10

டூயல் சிம், ஆண்ட்ராய்டு 10

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ டூயல் சிம், ஆண்ட்ராய்டு 10, அல்ட்ராவிஷன் 120 Hz டிஸ்ப்ளே வசதி, கோர்னிங் கொரில்லா க்ளாஸ் 6 பாதுகாப்பு, ஆக்டோகோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓசி உள்ளிட்ட சலுகையோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோவில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இது 48 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ். இதன் கேமரா அமைப்பானது 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் உள்ளிட்ட மூன்று கேமரா வசதிகள் உள்ளது. செல்ஃபி எடுப்பதறக்கு பிரத்யேகமாக 32 மெகாபிக்சல் கேமார வசதி இதில் உள்ளது.

4260 எம்ஏஹெச் பேட்டரி

4260 எம்ஏஹெச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4260 எம்ஏஹெச் பேட்டரி, 65வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 512 ஜிபி வரை விரிவாக்க மைக்ரோ எஸ்டி கார்டு வசதி 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளோடு உள்ள இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போனானது டூயல் சிம் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓசி ஆதரவு மூன்று கேமரா வசதி உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா அமைப்போடு 32 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆதரவும் இதில் உள்ளது.

Airtel 'இப்படி' செய்திருக்க கூடாது! இனி 'இதை' செய்தால் அபராதம் நிச்சயம் - அதிரடி அறிவிப்பு!Airtel 'இப்படி' செய்திருக்க கூடாது! இனி 'இதை' செய்தால் அபராதம் நிச்சயம் - அதிரடி அறிவிப்பு!

4200 எம்ஏஹெச் பேட்டரி

4200 எம்ஏஹெச் பேட்டரி

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 5ஜி, ப்ளூடூத் ஆதரவு, 4200 எம்ஏஹெச் பேட்டரி 65 வாட்ஸ் சூப்பர் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Find X2 Pro, Find X2 Launched Today in India: Price, Specs and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X