ஓப்போ எஃப்7: இரு வகைகளில் வெளி வருகிறது?

  அடுத்து வரவுள்ள ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் குறித்து, ஓப்போ நிறுவனம் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், வரும் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில், மேலே குறிப்பிட்ட தேதியில் மும்பையில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சிக்கு, ஊடகங்களுக்கு இந்நிறுவனம் அழைத்து விடுத்துள்ளது. இந்நிலையில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் இரு வகைகளில் வெளியிடப்படலாம் என்பதை குறிக்கும் ஒரு புதிய போஸ்டர் தற்போது வெளியிட்டுள்ளது.

  ஓப்போ எஃப்7: இரு வகைகளில் வெளி வருகிறது?

  ஜிஎஸ்எம்ஏரினா பத்திரிக்கையில் ஸ்லேஸ்லீக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட போஸ்டரில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் இரு வகைகளில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயர்தர வகையானது 128ஜிபி உள்ளக நினைவகம் கொண்டதாகவும், சாதாரண வகையில் சிறப்பம்சங்கள் குறைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓப்போ எஃப்7 தொடர்பான இந்தப் போஸ்டரை, மற்றவர்கள் பயன்படுத்த மேற்கூறிய பத்திரிக்கை கட்டுப்பாடு விதித்துள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  25எம்பி ஏஐ-திறன் கொண்ட செல்ஃபீ கேமரா

  ஓப்போ எஃப்7-னின் இரு வகைகளிலும், 25எம்பி ஏஐ திறன் கொண்ட செல்ஃபீ கேமரா இருக்கும் என்று நம்பப்படுகிறது. சிறப்பான செல்ஃபீ படங்களுக்கு உதவும் வகையில், ஓப்போ எஃப்5-யைப் போலவே இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஓப்போ எஃப்5-யை போன்று இந்த செல்ஃபீ கேமராவிலும், தோலின் நிறம், பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு செல்ஃபீ படங்களை எடுக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

  ஈர்க்கக்கூடிய 128ஜிபி நினைவகம்

  ஏற்கனவே கூறியது போல, ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போனின் 128ஜிபி உள்ளக நினைவகத்தை கொண்ட உயர்தர வகையின் படம், சமீபகால டீஸராக வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நடுத்தர சந்தை பிரிவில் சேரும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு அதிகளவில் நினைவக கொள்ளளவை கொண்ட ஸ்மார்ட்போன்கள் கிடைப்பது சற்று சிரமம் தான் என்பது கவனிக்கத்தக்கது.

  ஐபோன் எக்ஸ் போன்ற நொட்ச் மற்றும் மெலிந்த பேசில்கள்

  ஓப்போ நிறுவனம் வெளியிட்ட முந்தைய டீஸர்களில் இருந்து, ஐபோன் எக்ஸில் மேலே நடுப்பகுதியில் டிஸ்ப்ளே நொட்ச் இருப்பது போல, இதிலும் இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும், டீஸர் காட்சிகளை வைத்து பார்த்தால், இந்த சாதனத்தின் இரு பக்கங்களிலும் மெலிந்த பேஸில்கள் இருப்பதை காண முடிகிறது.

  தற்போது கிடைத்துள்ள செய்திகளின் மூலம் இதில் 6.2 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே, 2280 x 1080 பிக்சல் எஃப்ஹெச்டி+ பகுப்பாய்வு மற்றும் 19:9 விகிதத்தில் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்த ஓப்போ எஃப்7-னின் திரைக்கும் பாடிக்கும் இடையே உள்ள விகிதம் 89.09% இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஐபோன் எக்ஸ்க்கு போட்டியா விவோ எக்ஸ்21 அறிமுகம்.!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Instagram Simple Tips and Tricks (TAMIL)

  Source 1

  Read more about:
  English summary
  A new poster of the Oppo F7 tips that the device might be announced in two variants. The standard variant of the device is said to be launched with 128GB of internal storage capacity while the F7 Youth is said to be an affordable one with toned-down specifications. We will get to know more details on March 26.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more