Home
News

பிளிப்கார்ட்: நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஒப்போ எப்7 .!

ஒப்போ எப்7 ஒரு 6.23 அங்குல முழு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் திரை விகிதம் 19.9 ஆகும்.

By Prakash S

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் எனும் தலைப்பில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், டிவி போன்ற பல்வேறு மின்சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த வகையில் பிரபல ஸ்மார்ட்போன் ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்: நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஒப்போ எப்7

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.22,900-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் மூலம் ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு 21,900-க்கு விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் வரும் மே 13-ம் தேதி முதல் துவங்கும் என பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனில் ரியல்-டைம் சென்சார் எச்டிஆர் தொழில்நுட்பம் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த சென்சார் சிறந்த
அழகு விளைவுகளை உண்டாகும் அதற்கு கேமராவின் ஏஐ பியூட்டி 2.0 தொழில்நுட்பம் கைகொடுக்கும். இது வெறுமனே ஒரு கிளிக்கை நிகழ்த்தாது, இந்த
தொழில்நுட்பம் ஆனது உங்கள் முகத்தில் உள்ள 296 புள்ளிகளை துல்லியமான முறையில் அங்கீகரித்து, அது சார்ந்த பகுப்பாய்வை நிகழ்த்தி செல்பீக்களை கைப்பற்றும்.

ஒப்போ எப்7-ன் வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே வகையானது, ஒரு ஸ்மார்ட்போனின் எல்லைகளை தள்ளுகிறது என்றே கூறலாம். ஒப்போ எப்7 ஒரு 6.23 அங்குல முழு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் திரை விகிதம் 19.9 ஆகும்.

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவானது, ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளின்கீழ் இயங்கும் 25எம்பி கேமராவாகும். இதன் சக்திவாய்ந்த சென்சார் சிறந்த அழகு விளைவுகளை உண்டாகும் அதற்கு கேமராவின் ஏஐ பியூட்டி 2.0 தொழில்நுட்பம் கைகொடுக்கும். ஒப்போ எப்7 கேமராவில் புதிய சென்சார் எச்டிஆர் தொழில்நுட்பம் மற்றும் விவிட் பயன்முறையும் இடம்பெற்றுள்ளது. கூறப்படும் 'சென்சார் எச்டிஆர்' தொழில்நுட்பமானது செல்பீக்களை மேம்படுத்த உதவும்.

பிளிப்கார்ட்: நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஒப்போ எப்7

ஒப்போ எப்7 நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 5.0 கொண்டு இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 8.1.0 ஓரியோ அடிப்படையிலான ஒரு பயனுள்ள மென்பொருளாகும்.இதில் ஸ்பிலிட் ஸ்கிரீன், கேம் அக்ஸலரேஷன், க்ளோன் ஆப்ஸ், தீம் ஸ்டோர் போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய ஒப்போ எப்7 ஆனது பேஸ் அன்லாக் அம்சமும் கொண்டுள்ளது.

ஒப்போ எப்7 ஒரு 3400எம்ஏஎச் பேட்டரி அலகுடன் ஆதரிக்கப்படுகிறது மற்றும் மூன்று கவர்ச்சிகரமான நிற வகைகளில் - சோலார் ரெட், மூன்லைட் சில்வர் மற்றும் சிறப்பு டயமண்ட் பிளாக் பதிப்பு - வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Oppo F7 Available For Rs 1000 During Flipkart Big Shopping Days Sale; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X