ஓப்போ எப்3 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஓப்போ எப்3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தபோது ரூ.19,990-க்கு விற்பனை செய்யப்பட்டது, ஆனால் இப்போது அறிவித்த விலைகுறைப்பை அடுத்து ரூ.16,990-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash
|

ஓப்போ ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஓப்போ எப்3 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, விலைகுறைக்கப்பட்ட இந்த ஓப்போ எப்3 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற வலைதளங்களில் மிக எளிமையாக வாங்க முடியும்.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வெளிவருகிறது இந்த ஓப்போ எப்3 ஸ்மார்ட்போன் மாடல், மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

ஓப்போ எப்3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தபோது ரூ.19,990-க்கு விற்பனை செய்யப்பட்டது, ஆனால் இப்போது அறிவித்த விலைகுறைப்பை அடுத்து ரூ.16,990-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

5.5 அங்குல முழு எச்டி

5.5 அங்குல முழு எச்டி

ஒப்போ எப்3 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு, 1920 x 1080 பிக்சல்கள் என்ற திரை
தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல முழு எச்டி 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

செயலி:

செயலி:

மேலும் இந்த சாதனம் மாலி டி860-எம்பி2 உடன் 1.5ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஆக்டா-கோர் மீடியாடெக் எம்டி6750டி செயலி மூலம் இயக்கப்படுகிறது,மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 4 ஜிபி ரேம்:

4 ஜிபி ரேம்:

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கும்
ஆதரவும் வழங்குகிறது.

 120 டிகிரி பரந்த-கோண லென்ஸ் :

120 டிகிரி பரந்த-கோண லென்ஸ் :

ஒப்போ எப்3 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி ஒரு இரட்டை முன்பக்க கேமரா அமைப்புடன் வருகிறது.
16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 8-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் க்ரூப்பீகளுக்கான 120 டிகிரி பரந்த-கோண லென்ஸ் கொண்டுள்ளது.

 கலர்யூஐ 3.0

கலர்யூஐ 3.0

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான நிறுவனத்தின் கலர்யூஐ 3.0 கொண்டு இயங்கும் இந்த சாதனம் 3200எம்ஏஎச் நீக்கமுடியாத பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

 கைரேகை சென்சார் :

கைரேகை சென்சார் :

முன்பக்கம் எதிர்கொள்ளும் கைரேகை சென்சார் ஏற்றப்பட்டு வரும் இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில்: 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ) ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில், 153.3 x 75.2 x 7.3 மிமீ மற்றும் 153 கிராம் எடையுள்ளதாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F3 Price in India Slashed ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X