8ஜிபி ரேம், ஆர்பிட் லைட் வசதி- ஒப்போ எஃப்21 ப்ரோ, ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்: விலை ரொம்ப சரி!
ஒப்போ எஃப்21 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி சாதனம் டிரிபிள் ரியர் கேமராக்கள் உடன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்போ என்கோ ஏர் 2 ப்ரோ சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ எஃப்21 ப்ரோ இந்திய விலை ரூ.22,999 ஆகவும் ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி இந்திய விலை ரூ.26,999 ஆகவும் இருக்கிறது. ஒப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது.

ஒப்போ சாதனங்களுடன் ஒப்போ இயர்பட்ஸ் அறிமுகம்
ஒப்போ எஃப்21 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ஏப்ரல் 12 (இன்று) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ எஃப்21 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டு சாதனங்களும் மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் 8 ஜிபி ரேம் வசதி உடன் வருகிறது. இந்த சாதனங்களின் பின்புறத்தில் ஆர்பிட் லைட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஒப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. ஒப்போ எஃப்21 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களுடன் ஒப்போ என்கோ ஏர் 2 ப்ரோ சாதனமும் வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்களாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒப்போ எஃப்21 ப்ரோ, ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி விலை
ஒப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த சாதனத்தின் இந்திய விலை ரூ.22,999 என கிடைக்கிறது. அதேபோல் ஒப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனானது காஸ்மிக் பிளாக் மற்றும் சன்செட் ஆரஞ்ச் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. அதேபோல் ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியம்ட் இந்திய விலை ரூ.26,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது காஸ்மிக் பிளாக் மற்றும் ரெயின்போ ஸ்பெக்ட்ரம் வண்ணங்களில் வருகிறது.

ஏப்ரல் 15 முதல் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்
ஒப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 15 முதல் விற்பனைக்கு வரும், அதேபோல் ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 21 முதல் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்போ எஃப்21 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான அறிமுக சலுகையாக 10% வங்கி கேஷ்பேக் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் வழங்கப்படுகிறது. ஒப்போ என்கோ ஏர் 2 ப்ரோ இயர்பட்ஸ் விலை ஆனது ரூ.3,499 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஒப்போ எஃப்21 ப்ரோ விவரக்குறிப்புகள்
ஒப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 கலர் ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) தீர்மானத்துடன் கூடிய அமோலெட் டிஸ்ப்ளே அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தோடு வருகிறது. ஹூட்டின் கீழ் இந்த ஒப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஒப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

64 எம்பி முதன்மை கேமரா
ஒப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனில் 64 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி மைக்ரோ ஷூட்டர் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆதரவோடு கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆர்பிட் லைட் மைக்ரோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. இது நோட்டிபிகேஷன் தெரிவிப்பு செயல்பாட்டையும், குறைந்த வெளிச்சத்தில் காட்சிகளை பதிவு செய்ய ஃபில் லைட்டாகவும் செயல்படுகிறது. கூடுதலாக பின்புற கேமரா அமைப்பானது எல்இடி ஃபிளாஷ் லைட்டையும் கொண்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என ஒப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்709 கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. ஒப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனில் 33 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்
ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு கலர் ஓஎஸ் 12 ஆதரவோடு வருகிறது. ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி அம்சம் மற்றும் 8 ஜிபி ரேம் ஆதரவோடு வருகிறது. ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 64 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் ஆதரவோடு வருகிறது.

33 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங் ஆதரவு
ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் இரட்டை ஆர்பிட் லைட் அம்சம் இருக்கிறது. ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என இதன் முன்புறத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி அம்சம் மற்றும் 33 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.


Click it and Unblock the Notifications