Home
News

ஸ்பெஷலா ஒரு போன் இந்தியாவில் அறிமுகமாக ரெடி ஆகிறது.. புதிய ஒப்போ F19s பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒப்போ நிறுவனம் இந்த ஆண்டின் துவக்கத்தில் 2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இதில் ஒப்போ F19 புரோ மற்றும் F19 புரோ + 5G ஆகிய இரண்டு மாடல்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒப்போ நிறுவனம் F19 வரிசையில் மேலும் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்து, தனது பட்டியலை விரிவுபடுத்துவதாக வதந்தி பரவியுள்ளது. இம்முறை ஒப்போ F19s என்ற மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று புளூடூத் SIG சான்றளிக்கப்பட்ட தகவல் தெரிவிக்கிறது.

புளூடூத் SIG பக்கத்தில் வெளியான தகவல் என்ன சொல்கிறது?

புளூடூத் SIG பக்கத்தில் வெளியான தகவல் என்ன சொல்கிறது?

புளூடூத் SIG பக்கத்தில் காணப்படும் தகவலின் படி, CPH2223 என்ற சான்றளிக்கும் அதிகார மாதிரி குறியீட்டை வெளிப்படுத்தும் மாடல் ப்ளூடூத் 5.0 இணைப்பை உறுதிப்படுத்துவதைக் காட்டுகிறது. இது தவிர F19s பற்றி வேற எந்த தகவலும் அந்த பட்டியலில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், முந்தைய கசிவுகளின் படி, ஒப்போ F19 எஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது இந்தியாவில் ரூ. 18,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ எஃப் 19, ஒப்போ எஃப் 19 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ்

ஒப்போ எஃப் 19, ஒப்போ எஃப் 19 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ்

புதிய ஸ்மார்ட்போன் ஒப்போ எஃப் 19, ஒப்போ எஃப் 19 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களுடன் அதே வரிசையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் Oppo F19s ஸ்மார்ட்போனின் வெளியீட்டுக் காலவரிசையை சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Oppo F19s ஒரு சிறப்பு பதிப்பு ஸ்மார்ட்போனா?

Oppo F19s ஒரு சிறப்பு பதிப்பு ஸ்மார்ட்போனா?

இந்த தகவல் வேறு ஒரு டிப்ஸ்டர் கசிவின் வழியாக வெளிவந்துள்ளது. வரவிருக்கும் Oppo F19s ஒரு சிறப்பு பதிப்பு ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் என்று வெளியீடு தொழில் ஆதாரங்களில் இருந்து அறிந்துகொள்ளப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தவிர, அறிக்கை எந்த விவரங்களையும் பகிரவில்லை. பெயர் குறிப்பிடுவது போல, வரவிருக்கும் Oppo F19s நிலையான ஒப்போ F19 போன்ற அம்சங்களையும் விலைக் குறியையும் வழங்கக்கூடும்.

Oppo F19 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

Oppo F19 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

தெரியாதவர்களுக்கு, Oppo F19 ஸ்மார்ட்போன் 6.43' இன்ச் முழு எச்டி 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட AMOLED டிஸ்பிளே 20: 9 விகிதத்துடன் உள்ளது. சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் உடன் அட்ரினோ 610 ஜிபியு மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இயல்புநிலை சேமிப்பகத்தால் இயக்கப்படுகிறது. ஒப்போ F19s சாதனமும் இதே சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. கேமராவை பொறுத்த வரை 48 எம்பி முதன்மை சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

ஒப்போ எப்19 எஸ் ஸ்பெஷல் எடிஷன் அம்சங்கள் எப்படி இருக்கும்?

ஒப்போ எப்19 எஸ் ஸ்பெஷல் எடிஷன் அம்சங்கள் எப்படி இருக்கும்?

இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக கூடுதல் சேமிப்பு விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய ஒப்போ எப்19 எஸ் ஸ்பெஷல் எடிஷன் அம்சங்கள் ஒப்போ எப்19 மாடலில் உள்ளதைப் போன்றே வழங்கப்படலாம். ஒப்போ எப்19 மாடலில் 6.43 இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 ஐ ColorOS 11.1 உடன் இயக்குகிறது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியை பேக் செய்கிறது.

ஒப்போ F19s விலை இந்தியாவில் என்னவாக இருக்கும்?

ஒப்போ F19s விலை இந்தியாவில் என்னவாக இருக்கும்?

முன்பக்கத்தில், இது 16 எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி மற்றும் இணைப்பிற்காக 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் மற்றும் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக, தரமான ஒப்போ எஃப் 19 தற்போது நாட்டில் ரூ. 18,990 விலையில் கிடைக்கிறது. இதே விலை பிரிவில் அல்லது இதற்கு மிக அருகில் உள்ள விலை பிரிவில் ஒப்போ F19s அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo F19s Launch Imminent As It Bags Bluetooth SIG Certification : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X