ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த Oppo F19s வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது..

|

இந்தியாவில் Oppo F19s வெளியீட்டுத் தேதி செப்டம்பர் 27 ஆம் தேதி என்று பிளிப்கார்ட் தனது தளத்தில் ஒரு பிரத்தியேக பட்டியல் மூலம் புதன்கிழமை வெளிப்படுத்தியது. வெளியீட்டுத் தேதியை உறுதி செய்ய ஒப்போ தனித்தனியாக ஒரு ட்வீட்டை வெளியிட்டது. Oppo F19s ஸ்மார்ட்போன் 33W ஃப்ளாஷ் சார்ஜ் வேகமான சார்ஜிங் மற்றும் மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. இந்த சாதனம் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் வரும் மற்றும் இரண்டு வண்ண விருப்பங்களை உள்ளடக்கியது. தனித்தனியாக, Oppo F19s கீக்பெஞ்சில் தோன்றியதாகக் கூறப்படுகிறது, இது அதன் முக்கிய குறிப்புகள் சிலவற்றைப் பரிந்துரைத்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த Oppo F19s வெளியீட்டுத் தேதி..

Oppo F19s இந்தியா அறிமுக விவரங்கள்
ஃப்ளிப்கார்ட் ஒரு மைக்ரோசைட்டை உருவாக்கி அதில் ஒப்போ எஃப் 19 எஸ் சாதனத்தின் வெளியீட்டு தேதியை வெளிப்படுத்தியுள்ளது. ஃபோன் கிலோவிங் பிளாக் மற்றும் கிலோவிங் வைட் நிறங்களில் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது. ஒப்போவின் இந்த வெளியீட்டு திங்கள், செப்டம்பர் 27 அன்று பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும் என்பதை ஒரு ட்வீட் மூலம் வெளியிட்டுள்ளது.

Oppo F19s எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்
ஒப்போ F19s சாதனம் வடிவமைப்பு மற்றும் மூன்று பின்புற கேமராக்கள் மூலம் வரும் என்பதை உறுதிப்படுத்த ட்விட்டர் டீஸர்கள் விபரங்கள் காண்பிக்கிறது. ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் ரெண்டர்களில் ஒன்று, போன் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் கொண்டுள்ளது என்று கூறுகிறது. மேலும், இந்த சாதனத்தில் 33W ஃப்ளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி இருப்பதாக டீஸ் செய்யப்பட்டுள்ளது. Oppo F19s ஸ்மார்ட்போன் 7.95 மிமீ தடிமன் கொண்ட ஒரு 3D வளைந்த உடலைக் கொண்டிருக்கும் என்று ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் டீஸர் கூறுகிறது.

Oppo F19s கீக்பெஞ்ச் தகவல் என்ன சொல்கிறது?

டீசர்களைத் தவிர, ஒப்போ எஃப் 19 எஸ் இன் விவரக்குறிப்புகள் கீக்பெஞ்ச் பட்டியலால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் CPO2223 மாதிரி எண்ணுடன் பட்டியலிடப்பட்டுள்ளது, இது ஒப்போ F19 எஸ் இருப்பதாக நம்பப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் ஒரு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் உள்ளது என்று வெளியான விபரம் கூறியுள்ளது. ஒப்போ எஃப் 19 எஸ் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது என்று பட்டியல் தெரிவிக்கிறது. முந்தைய வதந்திகள் Oppo F19s 6.43' இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Flipkart பிக் பில்லியன் டேஸ் 2021 விற்பனையில் வாங்க கிடைக்கும் ஒப்போ சாதனங்கள்

ஒப்போ எஃப் 19 எஸ், ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5 ஜி தீபாவளி பதிப்பு மற்றும் ஒப்போ என்கோ பட்ஸ் உண்மையான வயர்லெஸ் ஸ்டீரியோ ( TWS) இயர்போன்களின் நீல வண்ண மாறுபாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஃப்ளிப்கார்ட் இரண்டு புதிய சாதனங்களையும் ஒப்போ F19s பட்டியலுடன் "coming soon" டேக் உடன் பதிவு செய்துள்ளது. Flipkart பிக் பில்லியன் டேஸ் 2021 விற்பனையில் இது வரும் அக்டோபர் 7 ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறித்து.

Flipkart பிக் பில்லியன் டேஸ் 2021 விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்ஸ் சாதனங்கள் மீது ஏராளமான சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் இணையத்தை நிரப்பி வருகிறது.ஒப்போ தொடர்பான கூடுதல் செய்திகள் மற்றும் தகவல்கள் பற்றி அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். இத்துடன், தொழிநுட்பம், அறிவியல், விண்வெளி மற்றும் பூமி தொடர்பான சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் பதிவின் கீழ் இருக்கும் செய்திகளை பார்வையிடுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Oppo F19s Launch Date in India Set for September 27 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X