Home
News

ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன்: இதோ அம்சங்கள்!

ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதத்தில் சந்தைக்கு வர இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஒப்போ எஃப் 19 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப் 19 ப்ரோ+ ஸ்மார்ட்போன்கள் இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொடரின் நிலையான ஒப்போ எஃப் 19 ஸ்மார்ட்போன் நாட்டில் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சாதனத்தின் வெளியீடு குறித்து இலங்கையில் நிறுவனம் டீஸ் செய்துள்ளது. சர்வதேச சந்தையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும். இந்த எஃப்19 ஸ்மார்ட்போனானது மிகவும் மலிவு விலை சாதனமாகும்.

ஒப்போ எஃப் 19 ஸ்மார்ட்போன்

ஒப்போ எஃப் 19 ஸ்மார்ட்போனானது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்தியா விலை மற்றும் அம்சங்கள் குறித்து டிப்ஸ்டர் இஷன் அகர்வால் வெளியிட்ட கசிவு தகவல்களை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வரும் என அறிக்கை தகவல் கூறுகிறது. விலை குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,000 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

ஒப்போ எஃப் 19 கசிந்த அம்சங்கள்

ஒப்போ எஃப் 19 கசிந்த அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியவில்லை. டீசர் படத்தின்படி, இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தின் மேல் இடது மூலையில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புற கேமரா அமைப்பில் 48 எம்பி முதன்மை கேமரா இருக்கும் என கூறப்படுகிறது. கேமரா அமைப்பின் பிற சென்சார்கள் தெளிவாக தெரியவில்லை.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ஒப்போ எஃப் 19 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குறைந்த சக்தி வாய்ந்த அமோலெட் பேனல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. ஒப்போ எஃப் 19 ப்ரோ 4ஜி இணைப்பு ஆதரவோடு வருகிறது.

4310 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

4310 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ எஃப் 19 ஸ்மார்ட்போன் எஃப் 19 ப்ரோவுடன் ஒத்த சில அம்சங்களை கொண்டிருக்கிறது. ஒப்போ எஃப் 19 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4310 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி குவாட் கேமரா அமைப்புடன் 16 எம்பி செல்பி கேமராவுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Oppo F19 Smartphone May Launching Soon: Expected Price and Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X