தேதியை குறிச்சு வச்சுக்கோங்க: மார்ச் 8 அறிமுகமாகும் ஒப்போ எஃப்19 ப்ரோ- விலை என்ன தெரியுமா?

|

ஒப்போ எஃப்19 ப்ரோ 6.4 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களோடு மார்ச் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒப்போ எஃப்19 ப்ரோ

ஒப்போ எஃப்19 ப்ரோ

ஒப்போ எஃப்19 ப்ரோ இந்தியாவில் மார்ச் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் இந்தியாவில் ஒப்போ எஃப்19 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 8 ஆம் தேதி அறிமுகம்

மார்ச் 8 ஆம் தேதி அறிமுகம்

பிளிப்கார்ட் மொபைல் ஆப் பேனர் மூலமாக இந்தியாவில் ஒப்போ எஃப்19 ப்ரோ வெளியீட்டு தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 8 ஆம் தேதி இரவு 7 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்

ஒப்போ எஃப்19 ப்ரோ வெளியீட்டு தேதியை போலவே பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு இருக்கிறது.

ஏஐ கலர் போர்ட்ரெய்ட் வீடியோ

ஏஐ கலர் போர்ட்ரெய்ட் வீடியோ

ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன் தட்டையான டிஸ்ப்ளே மேல் இடது மூலையில் துளை பஞ்ச் கட்அவுட் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒப்போ எஃப்19 ப்ரோ ஏஐ கலர் போர்ட்ரெய்ட் வீடியோ பயன்முறையுடன் வரும் என்பது தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்

இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்

ஒப்போ எஃப்19 ப்ரோ குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கும் எனவும் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மீடியாடெக் ஹீலியோ பி95 எஸ்ஓசி செயலி

மீடியாடெக் ஹீலியோ பி95 எஸ்ஓசி செயலி

ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி95 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும் எனழும் 30 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4310 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. டிப்ஸ்டரில் வெளியான தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,000 என்ற விலையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo F19 Pro Launching in India at March 8 With 6.4 Inch AMOLED Display

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X