Oppo F15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
ஓப்போ நிறுவனம் இந்தியாவில் அதன் ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சம் என்ன என்பதை பார்க்கலாம்.

புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்
புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் லயிட்டிங் ப்ளாக் மற்றும் யூனிகார்ன் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், குவாட் கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளே
ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் 6.3' இன்ச் கொண்ட 2400x1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்.டி பிளஸ் அம்சம் அமோலேட் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் களமிறங்கியுள்ளது.

ஸ்டோரேஜ்
ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 512 ஜிபி வரை அதன் ஸ்டோரேஜ் சேவையை அதிகரிக்க முடியும்.

கேமரா
புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன், 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட போர்ட்ரைட் லென்ஸை கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர் மற்றும் பேட்டரி
ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.1.2 சேவையில் இயங்குகிறது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யுடன் கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70 (எம்டி 6771 வி) பிராசஸருடன் களமிறங்கியுள்ளது. ஒப்போ எப் 15 VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங்கை சேவையை ஆதரிக்கும் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை
ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோர்களில் இன்று முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் ஜனவரி 24 ஆம் தேதி முதல் அதன் முதல்கட்ட விற்பனையைத் துவங்குகிறது. ஒப்போ எப் 15 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை வெறும் ரூ.19,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
{document1}ss


Click it and Unblock the Notifications