ஒப்போ என்கோ X2 TWS: ரூ.10,000 க்குள் இதை விட சிறந்த தீபாவளி பரிசு கிடைக்காது!

|

தீபாவளி பண்டிகைக் காலம் நெருங்கி விட்டது, நம் அன்புக்குரியவர்களுக்கான சிறந்த பரிசை வாங்க நாம் அனைவருமே மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம். அப்படியாக, நம்முடைய பலரின் ஷாப்பிங் பட்டியலிலும் உள்ள ஒரு தயாரிப்பு என்றால் - அது TWS இயர்பட்ஸ் தான்!

ஒப்போ என்கோ X2 TWS: இதை விட சிறந்த தீபாவளி பரிசு கிடைக்காது!

நீங்கள் சரியான இயர்பட்ஸில் முதலீடு செய்யும் பட்சத்தில், அந்த கையடக்க வயர்லெஸ் மியூசிக் பட்ஸ் ஆனது இணையற்ற வசதியை தருவதோடு சேர்த்து, நல்ல இசையை கேட்கும் அனுபவத்தையும் உறுதி செய்யும்!

இருப்பினும், OPPO, Sony, JBL, OnePlus, Apple மற்றும் பல முன்னணி நுகர்வோர் தொழில்நுட்ப பிராண்டுகளிடம் இருந்து, பரந்த அளவிலான தயாரிப்புகள் வாங்க கிடைப்பதால், ஒரு தரமான பிரீமியம் TWS இயர்பட்ஸை கண்டுபிடிப்பது சற்றே கடினம் தான்.

ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் உள்ள அனைத்து பிரீமியம் TWS இயர்பட்ஸையும் நாங்கள் முயற்சித்தோம், ஆனால் எங்களுக்குப் பிடித்தது OPPO Enco X2 தான்! எங்களைப் பொறுத்தவரை, Enco X2 தான் உங்கள் அன்பிற்கு உரியவர்களுக்கான சிறந்த தீபாவளிப் பரிசாகும். ரூ.10,000 க்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும் இந்த இயர்பட்ஸில் என்ன ஸ்பெஷல்? இதை ஏன் கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்? என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ ரெனோ8 ப்ரோ உடன் அறிமுகமான என்கோ எக்ஸ்2-ஐ இந்த 2022 ஆம் ஆண்டில், ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் சிறந்த TWS இயர்பட்ஸ் என்றே கூறலாம். ஏனென்றால் இது சிறந்த-இன்-கிளாஸ் ஆடியோ, நிகரற்ற ANC, காதுகளுடன் பொருந்தும் வசதி உடன் சேர்த்து மற்ற சில முக்கிய அம்சங்களையும் பேக் செய்கிறது.

ஒப்பிடமுடியாத சவுண்ட் குவாலிட்டி!

OPPO Enco X2-இன் ஒலி தரத்தை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. இந்த TWS இயர்பட்ஸால் உருவாக்கப்படும் ஒலி - மிகவும் ஈர்க்கக்கூடியது மற்றும் நன்றாக ட்யூன் செய்யப்பட்டுள்ளது. OPPO மற்றும் Dynaudio இணைந்து உருவாக்கிய கோஆக்சியல் டூயல்-டிரைவர் சிஸ்டத்தை உள்ளடக்கிய அதிநவீன வன்பொருளே இத்தகைய செயல்திறனுக்கு காரணம். கூடுதலாக, OPPO Enco X2 ஆனது குவாட்-மேக்னட் பிளானர் ட்வீட்டர்ஸ் மற்றும் அல்ட்ராலைட் லிக்விட் கிரிஸ்டல் மாலிகுலர் டயாபிராம்களையும் கொண்டுள்ளது. இந்த செட்டப், மிகவும் சமநிலையான ஒலியை உருவாக்குகிறது.

ஒப்போ என்கோ X2 TWS: இதை விட சிறந்த தீபாவளி பரிசு கிடைக்காது!

மேலும் இந்த இயர்பட்ஸை கனெக்ட் செய்துள்ள ஸ்மார்ட்போனில், வெறுமனே OPPO Enco X கிளாஸிக் சவுண்ட் ப்ரொபைலை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில், இந்த இயர்பட்ஸின் பரந்த சவுண்ட்ஸ்டேஜ் மற்றும் ரிச்சர் ஆடியோ உங்களை நிச்சயம் வியப்படைய வைக்கும். இதே விலையின் கீழ் வாங்க கிடைக்கும் பெரும்பாலான வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் புறக்கணிக்கும் தனித்துவமான சவுண்ட் ஃப்ரெக்வென்ஸி-ஐ Enco X2-இன் கீழ் ஒவ்வொரு நிமிடமும் அனுபவிக்கலாம்.

கிளாஸ்-லீடிங் ANC

ஒரு தயாரிப்பு உயர்தர ஆடியோவை வழங்க வேண்டும் என்றால், அதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் கட்டாயம் இருக்க வேண்டும். எனவே தான் ஒவ்வொரு OPPO Enco X2 இயர்பட்களிலும் அதிக சிக்னல்-டூ-நியாஸ் ரேஷியோ உடன் இரண்டு நாய்ஸ்-கேன்சலேஷன் மைக்ரோஃபோன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. TWS இயர்பட்ஸ் பிரிவில் இப்படி ஒரு அம்சம் இருப்பது இதுவே முதல் முறை ஆகும். 50% செயல்திறன் ஊக்கத்துடன் ட்ரிபிள்-கோர் சிப்புடன் இதை இணைக்கும் போது, ​​4,000Hz (45dB) வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன் ஃப்ரெக்வென்ஸி-ஐ பெறுவீர்கள். இப்படியாகத்தான், இந்த 2022 இல் வாங்க கிடைக்கும் சிறந்த ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் இயர்பட்ஸ் என்கிற பட்டியலிலும் ஒப்போவின் என்கோ எக்ஸ்2 இடம்பெற்றுள்ளது.

OPPO Enco X2 வழங்குவது சிறந்த ஆடியோவை மட்டுமல்ல; அதற்கும் மேல! இதோடு OPPO Enco X2-வின் முக்கிய அம்சங்கள் முடிந்து விட்டது என்று நீங்கள் நினைத்தால்.. அது தவறு - இன்னும் நிறைய இருக்கின்ற; வாருங்கள் அவற்றை பற்றிப் பார்ப்போம்.

ஒப்போ என்கோ X2 TWS: இதை விட சிறந்த தீபாவளி பரிசு கிடைக்காது!

ஒப்போ என்கோ எக்ஸ்2 - வசதியின் உச்சம்!

TWS இயர்பட்ஸ்களில் சரியான இன்-இயர் பொருத்தத்தை கண்டறிவது சற்றே கடினம், ஆனால் ஒப்போ என்கோ எக்ஸ்2-வில் அந்த சிக்கலே இருக்காது; அதே சமயம் அழகியலிலும் எந்த சமரசமும் செய்யாது. இது மிகவும் வசதியான இன்யர் TWS இயர்பட்ஸ் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஒப்போ நிறுவனமானது, மனித காதுகளையும் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டி நடத்திய ஆய்வுகளையும் அடிப்படையாக கொண்டு கிட்டத்தட்ட 100 சுற்று மாற்றங்களை கடந்து Enco X2-ஐ வடிவமைத்துள்ளது.

இதன் விளைவாக, இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது பெரும்பாலான காதுகளுடன் சரியாக பொருந்துகின்றன மற்றும் நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் கூட அசௌகரியத்தை ஏற்படுத்தாமல் இருக்கின்றன. பெரும்பாலான போன் கால்களை வயர்லெஸ் இயர்பட்ஸ் மூலம் நிகழ்த்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், Enco X2-வின் வாய்ஸ் கால் செயல்திறனை நிச்சயம் நீங்கள் பாராட்டுவீர்கள். வாய்ஸ் பிக்கப்பிற்காக, இந்த TWS இயர்பட்ஸில் போன் கன்டெக்க்ஷன் சென்சார்கள் உள்ளன. இந்த மேம்பட்ட இன்பில்ட் சென்சார்கள் உங்கள் ஒலி அதிர்வுகளைத் துல்லியமாக கேப்சர் செய்து, சத்தம் மிகுந்த சூழல்களிலும் கூட தெளிவான குவாய்ஸ் கால் அனுபவத்தை உறுதி செய்கிறது.

வரையறைகளை உருவாக்கும் அம்சங்கள்

- OPPO Enco X2 TWS இயர்பட்ஸ் ஆனது அந்தந்த விலைப் பிரிவில் அதிக அளவிலான ஹை ரெசல்யூஷன் கொண்ட கோடெக்குகளை ஆதரிக்கின்றன, இதற்கு உங்களிடம் லேட்டஸ்ட் ரெனோ 8 சீரீஸ் ஸ்மார்ட்போன் அல்லது வேறு ஏதாவது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். மேலும் என்கோ எக்ஸ்2 ஆனது ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழையும் பெற்றுள்ளது மற்றும் LHDC-ஐ ஆதரிக்காத டிவைஸ்களுடன் பாரம்பரிய AAC மற்றும் SBC கோடெக்குகளை பயன்படுத்தியும் நன்றாக வேலை செய்யும்.

- ஒப்போ Enco X2 TWS இயர்பட்ஸ் ஆனது டூயல் இணைப்புகளை ஆதரிக்கிறது, இதை ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுடன் கனெக்ட் செய்யலாம். அதாவது ஒரே நேரத்தில், ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் உடன் இதை இணைக்கலாம்; இசையை அனுபவிக்கலாம் அல்லது போன் கால்களை நிகழ்த்தலாம்.

ஒப்போ என்கோ X2 TWS: இதை விட சிறந்த தீபாவளி பரிசு கிடைக்காது!

- நீங்கள் உங்கள் காதுக்கு ஏற்ற ஆடியோவைப் பெறுவதை உறுதிசெய்ய, ஒப்போ நிறுவனம் இதில் பெர்சனலைஸ்டு சவுண்ட் டெக்னாலஜியை பொருத்தியுள்ளது. கோல்டன் சவுண்ட் என்பது லீக்கேஜ் காம்பென்ஸேஷன், இயர் கேனல் காம்பென்ஸேஷன், மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சவுண்ட் பூஸ்ட்-ஐ ஒருங்கிணைக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். HeyMelody ஆப்பின் வழியாக இந்த அம்சத்தை இயக்கும் போது, சவுண்ட் அவுட்புட் மாற்றியமைக்கப்படும்; ​உங்களுக்கான சிறந்த இசை கேட்கும் அனுபவம் உறுதி செய்யப்படும். இந்த அம்சம் வேறு எந்த பிரீமியம் TWS இயர்பட்களிலும் இல்லை!

- கடைசியாக, ஒப்போ Enco X2 இயர்பட்ஸ் ஆனது IP54 தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறனையும் கொண்டுள்ளன. எனவே இதை வெளிப்புற உடற்பயிற்சிகளின் போதும் கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

சிறந்த இன்-கிளாஸ் பேட்டரி லைஃப்

ஒப்போ என்கோ எக்ஸ்2-வின் நீண்ட நேர பேட்டரி லைஃப் எங்களை ஆச்சரியப்படுத்தியது என்றே கூறலாம். இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 40 மணிநேரம் வரையிலான பிளே டைமை (இயர்பட்ஸ் + சார்ஜிங் கேஸ்) வழங்குகிறது. மேலும், Enco X2 ஆனது OPPO-வின் நன்கு அறியப்பட்ட ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. நம்பினால் நம்புங்கள், வெறும் 5 நிமிட சார்ஜ் மூலம், இந்த இயர்பட்ஸ்களால் 2 மணிநேர பிளேபேக்கை வழங்க முடியும்.

ஒப்போ என்கோ X2 TWS: இதை விட சிறந்த தீபாவளி பரிசு கிடைக்காது!

OPPO Enco X2 மீது கிடைக்கும் சலுகைகள்

ஒட்டுமொத்தமாக, Enco X2 ஆனது விலையை மீறிய அம்சங்களையும், செயல்திறனையும் வழங்கும் ஒரு இயர்பட்ஸ் என்பதிலும், இதே விலைப்பிரிவின் கீழ் உள்ள அனைத்து போட்டியாளர்களையும் விட சிறப்பாக உள்ளது என்பதிலும் சந்தேகமே வேண்டாம். நீங்கள் ஒரு பிரீமியம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை தேடுகிறீர்களானால், உங்கள் பட்ஜெட் ரூ.10,000 என்றால், OPPO Enco X2-வை தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம். இந்த TWS இயர்பட்ஸ் ஆனது, தற்போது OPPO-வின் தீபாவளி சீசன் விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இந்த இயர்பட்ஸ் வழங்கும் உயர்தர ஆடியோ அனுபவத்திற்கு விலையே இல்லை என்பதால், இந்த பண்டிகைக் காலத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் அளிக்கும் ஒரு அற்புதமாக பரிசு - OPPO Enco X2 தான்!

Best Mobiles in India

English summary
OPPO Enco X2 TWS The Best Diwali Gift For Your Loved Ones That Too Just Under 10k

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X