30 மணிநேர பேட்டரி ஆயுள்- அட்டகாச ஓப்போ என்கோ இயர்பட்ஸ்: விலை என்ன தெரியுமா?

|

ஒப்போ என்கோ ஃப்ரீ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 10 மிமீ டைனமிக் டிரைவர் மற்றும் டிரிபிள் கோர் நாய்ஸ் ரத்து சிப் அம்சத்தோடு வருகிறது. மேலும் இது அதிகபட்சமாக 42டெசிபல் நாய்ஸ் ரத்து அம்சத்தோடு இந்தய இயர்பட்ஸ் வருகிறது. ஒப்போ ரெனோ 6 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ என்கோ ஃப்ரீ 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை குறித்து பார்க்கையில் இதன் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.7000 என இருக்கிறது. மேலும் இது கேலக்ஸி வைட் மற்றும் எக்ஸ்ட்ரீம் நைட் பிளாக் வண்ண விருப்பங்களில் வருகிறது.

ஒப்போ என்கோ ஃப்ரீ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள்

ஒப்போ என்கோ ஃப்ரீ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள்

ஒப்போ என்கோ ஃப்ரீ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 10 மிமீ டைனமிக் டிரைவர் மற்றும் டிரிபிள் கோர் நாய்ஸ் ரத்து அம்சத்தோ வருகிறது. மேலும் இந்த இயர்பட்ஸ்-ல் அதிகபட்சமாக 42 டிபி நாய்ஸ் ரத்து அம்சத்தை கொண்டிருக்கிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஆனது ஆண்ட்ராய் மற்றும் ஐஓஎஸ் சாதனங்களுடன் இணைப்பதற்கு ஏஏசி கோடெக் ப்ளூடூத் 5.2 இணைப்பு ஆதரவு உள்ளது.

இயர்பட்ஸ் பேட்டரி அம்சம்

இயர்பட்ஸ் பேட்டரி அம்சம்

இயர்பட்ஸ் பேட்டரி அம்சத்தை பொறுத்தவரை சமீபத்திய இயர்பட்ஸ்களாக 41 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. மேலும் இது ஏஎன்சி ஆஃப் உடன் 6.5 மணிநேர ப்ளே பேக் அம்சத்தை வழங்குகிறது. மேலும் இது ஏஎன்சி 4 மணிநேர ஆயுளை வழங்குகிறது. மேலும் இந்த சாதனமானது 480 எம்ஏஎச் வசதி உள்ளது. இது ஏஎன்சி இல்லாமல் மொத்தம் 30 மணிநேர பேட்டரி ஆயுள், ஏஎன்சி 20 மணிநேர அம்சத்தோடு வருகிறது.

ஒரே கிளிக்கில் சுற்றுப்புற ஒலிகளை நீக்கலாம்

ஒரே கிளிக்கில் சுற்றுப்புற ஒலிகளை நீக்கலாம்

இயர்பட்ஸ்கள் டேனிஷ் ஆடியோ நிறுவனம் டைன்ஆடியோ டியூன் ஆதரவோடு வருகிறது. மேலும் இது குறைந்த லேட்டன்சி கேமிங் பயன்முறையோடு வருகிறது. அதேபோல் ஏஐ அழைப்பு சத்த குறைப்பு ஆதரவுக்கு மூன்று மைக்ரோஃபோன்களை கொண்டிருக்கிறது. ஹெட்ஃபோன்களை கழற்றாமல் பயனர்கள் ஒரே கிளிக்கில் சுற்றுப்புற ஒலிகளை கேட்க அனுமதிக்கும் வெளிப்படையான பயன்முறை அம்சத்தை கொண்டுள்ளது. அதேபோல் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போனுக்கு ரிமோட் ஷட்டராகவும் இயர்போன்கள் செயல்படுகிறது என்பது இதன் கூடுதல் அம்சமாகும்.

டச் கட்டுப்பாடு அம்சம்

டச் கட்டுப்பாடு அம்சம்

இது மியூசிக் கட்டுப்பாடுக்கான டச் கட்டுப்பாடு அம்சம் இருக்கிறது. இது மாட்டுவதற்கான கண்டறியும் சென்சார் இருக்கிறது, அதாவது நீங்கள் இயர்பட்ஸ்களை காதுகளில் இருந்து கலட்டும் போது தாமாக இசை நிறுத்தப்படும். பின்புறத்தில் இரண்டு காந்தம் இருக்கிறது இரண்டு இயர்பட்ஸ்களின் பின்புற காந்தங்களையும் ஒட்டும்போது தாமாக போனுடன் இணைப்பு கட் செய்யப்படுகிறது. பிரித்தவுடன் தாமாகவே போன் உடன் இணைகிறது. அதுமட்டுமின்றி இதில் ஐபி 54 சான்றழிக்கப்பட்ட வாட்டர் மற்றும் தூசி ரெசிஸ்டென்ட் அம்சம் இதில் இருக்கிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Enco Free 2 True Wireless Earbuds Launched With Triple Core Noise Reduction Chip.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X