பிரீமியம் தரத்தில் வெளிவந்த Oppo Enco Air 3 Pro இயர்பட்ஸ்! அடேங்கப்பா.. விலை இவ்வளவு தானா?
ஒப்போ (Oppo) நிறுவனம் இன்று இந்தியாவில் ஒப்போ ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் சேர்த்து, நிறுவனம் புதிதாக பிரீமியம் தரத்தில் புதிய Oppo Enco Air 3 Pro TWS இயர்பட்ஸ் சாதனத்தையும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
Oppo Reno 10 5G சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையின் கீழ் நிறுவனம் 3 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ (Oppo Enco Air 3 Pro) இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo Enco Air 2 Pro இயர்பட்ஸ்களை தொடர்ந்து இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இயர்போஸ்கள் 49dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடன் வருகிறது. இது 30 மணிநேர பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. முந்தைய மாடல் வழங்கிய 24 மணி நேர பிளே பேக் நேரத்தில் இருந்து கணிசமாக இந்த புதிய இயர்பட்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ இயர்போன்ஸ்கள் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளுடன் 2 வண்ண விருப்பங்களில் வாங்குவதற்கு கிடைக்கின்றன.
Oppo வழங்கும் புதிய ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ இயர்பட்ஸ்கள் க்ரீன் மற்றும் வைட் நிறங்களில் வருகிறது. இந்தியாவில், இவற்றின் விலை ரூ. 4,999 மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 11 (நாளை) முதல் Flipkart மற்றும் அதிகாரப்பூர்வ Oppo ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் வழியாக விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒப்போவின் என்கோ ஏர் 3 ப்ரோ ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் 12.4 மிமீ டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளது. இது 20 ஹெர்ட்ஸ் முதல் 40 கிலோஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வெண் வரம்பை வழங்குகிறது. இவை ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) அம்சத்துடன் வருகின்றன. இது பயனர்கள் கவனச்சிதறல் மற்றும் சுற்றுச்சூழல் குறுக்கீடு இல்லாத ஆடியோ அனுபவத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது.

இந்த இயர்பட்கள் 49dB ANC வரை வழங்க முடியும். இந்த புதிய ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ இயர்பட்ஸ் புளூடூத் ஆதரவு கொண்டது. Oppo Enco Air 3 Pro ஆனது 10m வரை இணைப்பு வரம்பை வழங்குகிறது. இது LDAC, AAC மற்றும் SBC புளூடூத் கோடெக்குகளை ஆதரிக்கிறது. இந்த இயர்பட்ஸ் புளூடூத் v5.3 இணைப்பு அம்சத்தில் இயங்குகிறது.
இந்த ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோவின் ஒவ்வொரு இயர்பட்ஸ் சாதனமும் 43mAh பேட்டரியையும், சார்ஜிங் கேஸ் 440mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. சார்ஜிங் கேஸ் USB Type-C சார்ஜிங் போர்ட்டைக் கொண்டுள்ளது. இயர்பட்ஸுடன் சார்ஜிங் கேஸ் முழுவதுமாக சார்ஜ் செய்ய 120 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. இதற்கிடையில், இயர்பட்ஸ்களை மட்டும் சார்ஜ் செய்தால், முழு சார்ஜ்க்கு 90 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.
ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ சார்ஜிங் கேஸ் உட்பட 30 மணிநேரம் வரையிலான மொத்த பின்னணி நேரத்தை வழங்குகிறது. Oppo Enco Air 3 Pro இயர்பட்ஸ்கள் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுக்கான IP55 மதிப்பீட்டில் வருகின்றன. நாளை முதல் வெறும் ரூ.4,999 என்ற விலையில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழியாக வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








