அடிச்சான் பாரு OPPO.. தீபாவளி ஆஃபர்னா இப்படி இருக்கணும்.. 8 போன்கள், 3 இயர்பட்ஸ் மீது அதிரடி விலை குறைப்பு!
தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி ஒப்போ இந்தியா வலைதளத்தில் ஒப்போ தீபாவளி மெகா சேல் 2023 என்கிற சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ வலைத்தளம் இதை "தீபாவளி போனான்ஸா" என்றும் குறிப்பிடுகிறது. இந்த விற்பனையில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
01. ஒப்போ ஏ58 (OPPO A58): இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் மீது 9% நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ தீபாவளி போனான்ஸா சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,499 க்கு பதிலாக ரூ.13,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.

02. ஒப்போ ஏ38 (OPPO A38): ஒப்போவின் இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் மீது 23% நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ தீபாவளி போனான்ஸா சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,999 க்கு பதிலாக ரூ.12,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
03. ஒப்போ ஏ18 (OPPO A18): இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் மீது 33% நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ தீபாவளி போனான்ஸா சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 க்கு பதிலாக வெறும் ரூ.9,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
04. ஒப்போ ஏ78 5ஜி (OPPO A78 5G): ஒப்போவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் மீது 13% நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ தீபாவளி போனான்ஸா சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ரூ.21,999 க்கு பதிலாக ரூ.18,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.

05. ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் 5ஜி (OPPO Reno10 Pro+ 5G): இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனின் மீது 8% நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ தீபாவளி போனான்ஸா சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ரூ.59,999 க்கு பதிலாக ரூ.54,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
06. ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி (OPPO Reno10 Pro 5G): ரெனோ 10 சீரீஸின் கீழ் அறிமுகமான இன்னொரு மாடலான இது ஒப்போ தீபாவளி போனான்ஸா சிறப்பு விற்பனையின் கீழ் 11% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அசல் விலையான ரூ.44,999 க்கு பதிலாக ரூ.39,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.

07. ஒப்போ ரெனோ 10 5ஜி (OPPO Reno10 5G): ரெனோ 10 சீரீஸின் வெண்ணிலா வேரியண்ட் ஆன ஒப்போ ரெனோ 10 5ஜி மாடலானது ஒப்போ தீபாவளி போனான்ஸா சிறப்பு விற்பனையின் கீழ் 15% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. தற்போது இது ரூ.38,999 க்கு பதிலாக ரூ.32,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
08. ஒப்போ எஃப்23 5ஜி (OPPO F23 5G): இந்த மிட்-ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போனின் மீது 20% நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ தீபாவளி போனான்ஸா சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ரூ.28,999 க்கு பதிலாக வெறும் ரூ.22,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
ஒப்போ ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமே நேரடி தள்ளுபடிகள் கிடைக்கிறதா என்று கேட்டால்.. இல்லவே இல்லை. ஒப்போ தீபாவளி போனான்ஸாவின் கீழ் ஒப்போ டேப்லெட் மற்றும் இயர்பட்ஸ் மாடல்கள் மீதும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ பேட் ஏர் (OPPO Pad Air) டேப்லெட் ஆனது 56% தள்ளுபடியை பெற்று ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.29,999 ஆகும்.

இதேபோல ஒப்போ என்கோ ஏர் 2 ப்ரோ (OPPO Enco Air2 Pro) இயர்பட்ஸ் ஆனது 30% தள்ளுபடியை பெற்று ரூ.4,999 க்கு பதிலாக ரூ.3,499 க்கு வாங்க கிடைக்கிறது. ஒப்போ என்கோ பட்ஸ்2 (OPPO Enco Buds2) இயர்பட்ஸ் ஆனது 62% தள்ளுபடியை பெற்று ரூ.1,499 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.3,999 ஆகும்.


Click it and Unblock the Notifications