Home
News

பயனுள்ள அம்சங்களுடன் வெளிவந்த ஒப்போ பேண்ட் ஸ்டைல்., நம்பி வாங்கலாம்.!

ஒப்போ நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்றன. அதன்படி ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ பேண்ட் ஸ்டைல் சாதனத்தை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஃபிட்னெஸ் பேண்ட் ஆக்ஸிஜன் கண்காணிப்பு (SpO2) அம்சத்துடன் நிகழ் நேர இதயத் துடிப்பு கண்காணிப்புடன் வருகிறது #ActivateYourHealth.

பயனுள்ள அம்சங்களுடன் வெளிவந்த ஒப்போ பேண்ட் ஸ்டைல்., நம்பி வாங்கலாம்.!

மற்ற நிறுவனங்களின் பிட்னஸ் பேண்ட் சாதனத்தை விட ஒப்போ பேண்ட் ஸ்டைல் தனித்துவமான வசதிகள் மற்றும் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும். ஒப்போ நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை அடைய உதவும் பலஅம்சங்களைக் கொண்டுவருகிறது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் உடற்பயிற்சி செய்யும் போது இந்த சாதனம் அருமையாக உதவும்.

பயனுள்ள அம்சங்களுடன் வெளிவந்த ஒப்போ பேண்ட் ஸ்டைல்., நம்பி வாங்கலாம்.!

ஒப்போ பேண்ட் ஸ்டைல் ​​நிகழ் நேர இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் தூக்கக் கண்காணிப்புடன் வருகிறது. அதாவது இந்த சாதனம் உங்கள் இதய துடிப்பு மிக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்போது விழிப்பூட்டல்களை அனுப்பும். குறிப்பாக இதுபோன்ற அம்சங்கள் விலை உயர்ந்த சாதனங்களில் தான் இடம்பெறும். ஆனால் பட்ஜெட் விலையில் ஒப்போ நிறுவனம் ஒப்போ பேண்ட் ஸ்டைல் சாதனத்தை கொண்டுவந்துள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடங்க இந்த சாதனம் பெரிதும் உதவும் என்றே கூறலாம். இந்த சாதன்ததில் உள்ள ஆப்டிகல் இரத்த ஆக்ஸிஜன் சென்சார் ஆனது இரத்த ஆக்ஸிஜன் அளவை தொடர்ந்து கண்காணிப்பதை பார்க்க முடிகிறது. அதன்படி இந்த சென்சாரின் அளவீடுகள் மிகவும் துல்லியமானவை மற்றும் உங்கள் உடலின் ஆக்ஸிஜன் அளவை முழுமையாக சரிபார்க்க உதவுகிறது.

தூக்க கண்காணிப்பு வசதி
நிகழ்நேர இதய துடிப்பு மானிட்டர் மற்றும் தூக்க கண்காணிப்பு போன்ற வசதியுடன் வெளிவந்த புதிய ஒப்போ பேண்ட் ஸ்டைல் சாதனத்தை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை தெரிந்துகொள்ளவும், எத்தனை மணி நேரம் தூங்கினோம் என உறுதி செய்யப்பட்ட விரிவான அறிக்கையை தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக இதன் மூலம் தூக்கத்தின் தரத்தை நன்கு புரிந்துகொண்டு ஆரோக்கியமான தூக்கப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள முடியும்.

12 மிகவும் பயனுள்ள ஒர்க்அவுட் முறைகள்
ஒப்போ பேண்ட் ஸ்டைல் சாதனம் ஆனது மிகவும் பயனுள்ள ஒர்க்அவுட் முறைகளுடன் பொருத்தியுள்ளது. ஃபிட்னஸ் டிராக்கரில் ஃபேட் பர்ன் ரன் + அவுட்டோர் ரன், இன்டோர் ரன், அவுட்டேரா வால்க், அவுட்டோர் சைக்களிங், இன்டோர் சைக்களிங்,நீள்வட்டம், கிரிக்கெட், பூப்பந்து, நீச்சல், யோகா, சுவாச பயிற்சிகள் போன்ற 12 மிகவும் பயனுள்ள பயிற்சி முறைகளை வழங்குகிறது. கூடுதலாக,உங்கள் அன்றாட உடல் செயல்பாடு குறித்த விரிவான பகுப்பாய்வை வழங்க நாள் முழுவதும் தரவை இது பதிவுசெய்கிறது.

Vivid 1.1-இன்ச் ஃபுல் கலர் AMOLED டிஸ்பிளே
ஒப்போ பேண்ட் ஸ்டைல் சாதனம் ஆனது Vivid 1.1-இன்ச் ஃபுல் கலர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் முக்கியமான நுண்ணறிவுகளையும் தகவல்களும் பெறமுடியும். மேலும் இதன் திரையில் 2.5 டி வளைந்த-மேற்பரப்பு கீறல்-எதிர்ப்பு மென்மையான கண்ணாடி உள்ளது. இது சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்குகிறது. குறிப்பாக அனைத்து இடங்களில் இந்த சாதனத்தை மிக அருமையாக பயன்படுத்த முடியும். அதாவது வெளிப்புற ஒர்க்அவுட் நடைமுறைகளை மேற்கொள்ளும் போது கூட மிகவும் தெளிவான தகவல்களை இதன் டிஸ்பிளே மூலம் பெறமுடியும்.

பயனுள்ள அம்சங்களுடன் வெளிவந்த ஒப்போ பேண்ட் ஸ்டைல்., நம்பி வாங்கலாம்.!

ஒப்போ பேண்ட் ஸ்டைல் சாதனம் ஆனது 5ATM சான்றிதழ் பெற்ற வாட்டர் ப்ரூப் அம்சத்துடன் வெளிவருகிறது. எனவே நீச்சல் அமர்வுகளின்போதும் இந்த சாதனத்தை அணியலாம், இது 50 மீட்டர் ஆழத்திற்கு நீரை எதிர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒப்போ பேண்ட் ஸ்டைல் மாடல் 100 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு ஒப்போ நிறுவனம் அறிவித்த தகவலின்படி இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம். குறிப்பாக 1.5 மணி நேரத்தில் இதை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

தேவையான அனைத்து வசதியும் இதில் உள்ளது
இந்த புதிய ஒப்போ பேண்ட் சாதனத்தில் நமக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இடம்பெற்றுள்ளது. அதாவது இந்த பேண்ட் முக்கியமான தொலைபேசி அறிவிப்புகளை வழங்குகிறது, உள்வரும் அழைப்புகளுக்கு உங்களை எச்சரிக்கிறது, மேலும் ஒருமுறை கை தட்டினால் அழைப்புகளை நிராகரிக்கவும் உங்களை அனுமதிக்கிறது. பின்பு இந்த சாதனம் டைமர், ஸ்டாப்வாட்ச், அலாரங்கள், வானிலை அறிக்கையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் கொண்டு உங்களது ஸ்மார்ட்போனை இயக்க முடியும்.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களையும் கொண்டு வெளிவந்துள்ளது. அதாவது மற்ற நிறுவனங்களின் சாதனங்களை விட இந்த ஒப்போ பேண்ட் ஸ்டைல் சாதனத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

ஒட்டுமொத்தமாக ஒப்போ பேண்ட் ஸ்டைல் சாதனம் ஆனது உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது. பின்பு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த உங்கள் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி இலக்குகளை செயல்படுத்த உதவும் இந்த ஒப்போ பேண்ட் ஸ்டைல் மாடல்.

ஒப்போ எஃப் 19 புரோ + 5 ஜி மற்றும் ஒப்போ எஃப் 19 புரோ ஸ்மார்ட்போன்களுடன் இந்த ஒப்போ பேண்ட் ஸ்டைல் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. கண்டிப்பாக இந்த சாதனம் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயனுள்ள அம்சங்களுடன் வெளிவந்த ஒப்போ பேண்ட் ஸ்டைல்., நம்பி வாங்கலாம்.!

ஒப்போ பேண்ட் ஸ்டைல் சாதனம் ஆனது இந்தியாவில் ரூ.2,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் வலைத்தளத்தில் ஆரம்ப கால விற்பனையில் வெறும் ரூ.2,799 என்று விலையில் கிடைக்கிறது. அதாவது மார்ச் 8-ம் தேதியில் இருந்து ஒரு வாரத்திற்கு ஆன்லைனில் ரூ.2799 சிறப்பு விலையில் வாங்கலாம். இது ஒரு சிறந்த சலுகை ஆகும். OPPO F19Pro + 5G அல்லது OPPO F19 Pro சாதனங்களுடன் இந்த ஒப்போ பேண்ட் ஸ்டைல் சாதனத்தை கம்மி விலையில் வாங்க முடியும் #ActivateYourHealth.

Best Mobiles in India

English summary
OPPO Band Style: Ideal Fitness Band To Help You Achieve Your Fitness Goals: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X