8000mAh பேட்டரி உடன் புதிய ஸ்மார்ட்போன்.. எந்த கம்பெனி போன்னு சொன்னா ஷாக் ஆகிடுவீங்க!
7000mAh பேட்டரிக்கே இங்கே பலரும் ஷாக் ஆகினர். இந்த 2025 ஆம் ஆண்டில் 7000mAh பேட்டரி கொண்ட ஒன்பிளஸ் மற்றும் ஷாவ்மீ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் என்று வெளியான தகவலே உங்களுக்கு ஷாக்கிங் ஆக உள்ளதென்றால்.. 8000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களின் அறிமுகம், நிச்சயம் அதைவிட பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
இப்போதைக்கு எந்தெந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவிலான பேட்டரிகளை கொண்டுள்ளன? ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரியை கொண்டுள்ளது, ஐக்யூ 13 5ஜி (iQOO 13 5G) ஸ்மார்ட்போன் ஆனது 6100mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இதேபோல ஷாவ்மீ 15 ப்ரோ (Xiaomi 15 Pro) மாடலும் 6100mAh பேட்டரியை கொண்டுள்ளது. சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடல் 6000mAh பேட்டரி உடன் அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாகவே ஒன்பிளஸ் மற்றும் ஷாவ்மீ ஆகிய இரண்டும் 7000mAh பேட்டரிகளை கொண்ட ஸ்மார்ட்போன்களில் பணியாற்றுவதாக தகவல் வெளியானது.
இப்போது "கூட்டு நிறுவனங்கள்" ஆன ஒப்போ (Oppo) மற்றும் ஒன்பிளஸ் ஆகிய இரண்டும் புதிய 8000mAh திறன் கொண்ட பேட்டரியில் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போ (Weibo) வழியாக டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் பகிர்ந்துள்ள சமீபத்திய தகவலின்படி, ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் 8000mAh பேட்டரியை உருவாக்குகின்றன.
ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் குழுக்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவான உகா லேப் (Ouga Lab) ஆனது ஒரு புதிய பேட்டரியை சோதிக்கிறது. இது 8000mAh திறன் கொண்ட புதிய சிலிக்கான்-கார்பன் பேட்டரி என்று கூறப்படுகிறது. இது சுமார் 80W இல் சார்ஜ் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மேம்பட்ட சிலிக்கான் கார்பன் (Si/C) பேட்டரி தொழில்நுட்பத்தின் மூலம் தங்கள் போட்டியாளர்களை விட ஒருபடி மேல உள்ளனர் என்றே கூறலாம். ஆனாலும் கூட 8000mAh பேட்டரி உடன் வரும் முதல் ஒப்போ அல்லது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் எது என்பது குறித்த தகவல் தெளிவாக இல்லை.
உண்மையிலேயே மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்ட பேட்டரியை அறிமுகப்படுத்த இந்நிறுவனங்கள் முடிவு செய்து இருந்தால்.. ஒன்பிளஸ் 13 சீரீஸ் (OnePlus 13 Series) அல்லது ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரீஸ் (Oppo Find X8 Series) போன்ற பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸின் அடுத்த மாடல்களில் இது வரக்கூடும் என்று நாம் ஊகிக்கலாம்.
சமீபத்தில், ஒன்பிளஸ் நிறுவனமானது இன்ஸ்டாகிராம் (Instagram) நிறுவனத்துடன் உடன் கூட்டு சேர்ந்து, அதன் ஒன்பிளஸ் 13 மாடலில் புதிய நைட் மோட் அம்சத்தை (New Night Mode Feature) கொண்டு வந்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு இந்த அம்சம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிற்கு மட்டும் பிரத்யேகமாக இருக்குமா அல்லது ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) அல்லது கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போன்ற மாடல்களுக்கும் கொண்டுவரப்படுமா என்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை.
ஒன்பிளஸ் 13-க்கான இன்ஸ்டாகிராம் நைட் மோட் எப்படி வேலை செய்யும்? ஒன்பிளஸ் 13 வைத்துள்ள பயனர்கள், தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இன்ஸ்டாகிராம் ஆப்பை அதன் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும். பின்னர் இன்ஸ்டாகிராமில் உள்ள இன்-ஆப் கேமராவில் புதிய மூன் ஐகானை காண்பீர்கள். இந்த ஐகான் - நைட் மோட் ஆனது தானாகவே இயக்கப்பட்டிருப்பதை குறிக்கிறது மற்றும் லோ-லைட் புகைப்படங்களை எடுக்க ஒன்பிளஸ் 13 தயாராக உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
நைட் மோட் இயக்கப்பட்டதும், பயனர்கள் ஷட்டர் பட்டனை கிளிக் செய்யலாம். பின்னர் கேமரா ஆப் குறிப்பிட்ட படத்தை கேப்சர் செய்யும் போது, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை ஓரிரு வினாடிகள் 'ஸ்டில்' ஆக வைத்திருக்கவும். இமேஜ் செயலாக்கப்பட்டதும், அதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்யலாம் அல்லது போஸ்ட் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








