Just In
- 15 min ago
Poco F4 5G போன் வாங்கப் போறீங்களா? முதல்ல இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க.!
- 30 min ago
Google-ல கூடிய சீக்கிரம் "இது" காணாமல் போய் விடும்; முடிஞ்சா யூஸ் பண்ணிக்கோங்க!
- 3 hrs ago
Web Series-களை இவ்ளோ ஈஸியா Download செய்யலாமா? அட இது தெரியாம போச்சே!
- 3 hrs ago
ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!
Don't Miss
- News
அலறும் அசாம்.. வடியாத மழை வெள்ளம் - உயிரிழப்பு 135 ஆக உயர்வு
- Finance
3 முத்தான பங்குகள்.. முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?
- Movies
’பூ’ ராமு எனும் அற்புத கலைஞன்..வீதி நாடகத்திலிருந்து திரைத்துறை வரை
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்படா கல்யாணம் நடக்கும்னு வெறிபிடிச்சு அலைவாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
விமானத்தில் மட்டும் ஒரு சிலர் டீ, காபி குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா? இந்த சின்ன தப்பை செய்தால் அவ்ளோதான்!
- Sports
இந்த முறை முற்றிலும் மாற்றம்.. இந்தியா vs இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டி.. எங்கு? எப்படி பார்ப்பது?
- Travel
புனேவில் ஒரு நாள் சுற்றுலா – 2 மணி நேர பயண தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளின் லிஸ்ட் இதோ!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ரூ.12,500-க்கு ஒப்போ ஏ57 (2022) அறிமுகம்: மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி, 5000 எம்ஏஎச் பேட்டரி!
மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி சிப்செட் வசதியோடு ஒப்போ ஏ57 (2022) அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1 ஆதரவு மூலம் இயக்கப்படுகிறது. ரூ.12,500 என்ற இந்திய விலை மதிப்பில் அறிமுகமான இந்த சாதனம் 13 எம்பி பிரதான கேமரா உடன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் க்ளோயிங் பிளாக் மற்றும் க்ளோயிங் க்ரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ஒப்போ ஏ57 (2022)
ஒப்போ ஏ57 (2022) சாதனமானது தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஒப்போ ஏ57 (2022) அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 6.56 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 8 எம்பி செல்பி கேமரா 13 எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு கிடைக்கிறது.

ஒப்போ ஏ57 (2022) விலை மற்றும் கிடைக்கும் தன்மை
ஒப்போ ஏ57 (2022) சாதனம் தாய்லாந்தில் 5499 டிஎச்பி என அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.12,500 ஆகும். இந்த சாதனமானது ஒளிரும் பிளாக் மற்றும் ஒளிரும் பச்சை வண்ண விருப்பங்களில் விற்கப்படும். இந்த சாதனம் ஷாப்பி, ஜேடி, லஜாடா மற்றும் திஸ்ஷாப்.காம் ஆகியவற்றில் வாங்குவதற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பிற சந்தைகளில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படுமா என்ற விவரத்தை நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.

ஒப்போ ஏ57 (2022) சிறப்பம்சங்கள்
ஒப்போ ஏ57 (2022) சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது இரட்டை சிம் கொண்ட ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1 மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 6.56 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,612 பிக்சல்கள்) தீர்மானத்துடன் கூடிய எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஆதரவுடன் 3 ஜிபி ரேம் இணைக்கப்பட்டிருக்கிறது. புகைப்படம் மற்றும் வீடியோ ஆதரவுக்கு என ஒப்போ ஏ57 (2022) ஸ்மார்ட்போனில் 13 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா ஆதரவோடு வருகிறது. அதேபோல் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுகளுக்கு என இந்த சாதனத்தின் முன்புறத்தில் 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு
ஒப்போ ஏ57 (2022) ஸ்மார்ட்போனானது 64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது. 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது. இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

சமீபத்திய டேப்லெடாக ஒப்போ பேட் ஏர்
சமீபத்தில் நிறுவனம் ஒப்போ பேட் ஏர் சாதனத்தை அறிமுகம் செய்தது. Oppo Pad Air ஸ்மார்ட்போனானது நிறுவனத்தின் சமீபத்திய டேப்லெட் ஆக இருக்கிறது. அசல் ஒப்போ பேட்-க்கு பிறகு தொடரின் இரண்டாவது புதிய சாதனமாக இருக்கிறது. இந்த ஒப்போ டேப்லெட் ஆனது 10.36 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 6.94மிமீ மெல்லிய வடிவமைப்பு ஆதரவோடு வருகிறது. ஒப்போ பேட் ஏர் மட்டுமின்றி சீன நிறுவனம் ஒப்போ என்கோ ஆர் சாதனத்தை ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ பேட் ஏர் மற்றும் என்கோ ஆர் ஆகிய இரண்டும் தற்போது சீனாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999