விலை அதிகரிப்பு: ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் விலை என்ன தெரியுமா?

|

ஒப்போ தனது நுழைவு நிலை ஸ்மார்ட்போனான ஒப்போ ஏ54 சாதனத்தின் விலையை அதிகரித்து அறிவித்துள்ளது. ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ரூ.1000 அதிகரிக்கப்பட்டுள்ளதாக 91 மொபைல் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த புதிய விலையானது நாட்டின் அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் ஜூலை 15 முதல் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் விலை

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் விலை

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் விலை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்ட்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு தற்போது ரூ.1000 விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிரிஸ்டல் பிளாக், ஸ்டாரி ப்ளூ மற்றும் மூன்லைட் கோல்ட் கலர் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது.

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தோடு வருகிறது. அதேபோல் 90.5 சதவீத டிஸ்ப்ளே டூ பாடி விகிதத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. மேலும் இதில் அட்ரினோ 619 ஜிபீயூ, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்போடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது.

குவாட் ரியர் கேமரா அமைப்பு

குவாட் ரியர் கேமரா அமைப்பு

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் முன்பக்கத்தின் மேல் இடது மூலையில் 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

அதேபோல் ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது. மேலும் பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இணைப்பு ஆதரவுகளாக 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.1 மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்ட் வசதியோடு வருகிறது. ஒப்போ ஏ54 அம்சங்களை பொறுத்தவரையில் இதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதே என்றே கூறலாம்.

Best Mobiles in India

English summary
Oppo A54 5G Smartphone Price Hike in India: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X