ஒப்போ ஏ3எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.!
ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது
ஒப்போ நிறுவனம் தற்சமயம் தனது ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது, அதன்படி இந்த 2ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை ரூ.7,990-விலையில் வாங்க முடியும். அதேபோல் 3ஜிபி ரேம்
கொண்ட ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே
ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதா மற்றும் சிவப்பு நிற வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

ஸ்னாப்டிராகன் 450
ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

மெமரி
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனில் 4230எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications