Home
News

ரூ.16,500 விலையில் 24GB ரேம்..1TB ஸ்டோரேஜ்.. 50MP கேமரா.. மிரட்டும் Oppo.. எந்த மாடல்?

ஒப்போ (Oppo) நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் சாதனமாக ஒப்போ ஏ2 (Oppo A2) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனை நிறுவனம் தரமான அம்சங்களுடன் மிகவும் குறைந்த விலையில் வெளியிட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ (Oppo) பிராண்டின் சமீபத்திய பட்ஜெட் மொபைல் (budget mobile) ஸ்மார்ட்போன் (smartphone) சாதனமாக சீனாவில் ஒப்போ ஏ2 (Oppo A2) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய Oppo A-சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 சிப்செட் உடன் (MediaTek Dimensity 6020) 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வரை கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.16,500 விலையில் 24GB ரேம்..1TB ஸ்டோரேஜ்.. 50MP கேமரா கொண்ட Oppo ..

Oppo A2 ஆனது 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் 6.72' இன்ச் LTPS LCD டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இது பின்புறத்தில் 50 மெகாபிக்சல் டூயல் கேமரா (dual camera phone) அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) ஆதரவுடன் 5,000mAh பேட்டரி (battery) மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ2 விலை (Oppo A2 Price):
இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் மாடல் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் (storage) உடன் வருகிறது. இந்த Oppo A2 இன் விலை CNY 1,699 என்று சீன ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இதன் விலை தோராயமாக ரூ. 16,500 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் மாடலின் விலை CNY 1,799 ஆகும்.

இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 20,000 ஆகும். இது தற்போது சீனாவில் ஐஸ் கிரிஸ்டல் வயலட் (Ice Crystal Violet), ஜிங்காய் பிளாக் (Jinghai Black) மற்றும் கிங்போ எமரால்டு (Qingbo Emerald) வண்ண விருப்பங்களில் Oppo ஸ்டோர் வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த புதிய போனின் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ2 சிறப்பம்சம் (Oppo A2 Specifications):
டூயல் சிம் (நானோ) Oppo A2 ஆனது 6.72' இன்ச் முழு HD+ கொண்ட 1,080 x 2,400 பிக்சல்கள் உடைய LTPS LCD டிஸ்பிளேவை 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் வழங்குகிறது. இது 391ppi பிக்சல் அடர்த்தி, 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடையது. இது 12GB LPDDR4X RAM மற்றும் மாலி ஜி57 எம்சி2 (Mali-G57 MC2) ஜிபியு (GPU) உடன் வருகிறது.

இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (MediaTek Dimensity 6020 SoC) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது விர்ச்சுவல் ரேம் (24GB Virtual RAM) அம்சத்தைப் பயன்படுத்தி 24 ஜிபி வரை கூடுதல் ரேம் விற்பதை வழங்குகிறது. இது 512ஜிபி UFS2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. புதிய Oppo A2, 50 + 2 மெகாபிக்சல் சென்சார் கொண்ட டூயல் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் சென்சாரை கொண்டுள்ளது.

ஒப்போ ஏ2 (Oppo A2) ஸ்மார்ட்போன் ஆனது 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான (33W SuperVOOC fast charging) ஆதரவுடன் 5,000mAh பேட்டரி (battery) மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 165.6x76x7.9mm அளவு மற்றும் 193 கிராம் எடையுடையது. இந்தியா உட்பட மற்ற சந்தைகளில் Oppo A2 கிடைக்கும் எப்போது கிடைக்கும் என்பது பற்றிய விவரங்களை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Oppo A2 with 8GB and 24GB virtual RAM 50MP camera and 5000mah battery launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X