Home
News

ஆர்டர் மேல் ஆர்டர்.. ரூ.8999 போதும்.. செம டிசைன்.. செம ஸ்பெக்ஸ்.. சலுகையுடன் விற்பனையாகும் Oppo A18..

OPPO A18: 2023 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியபோவதையடுத்து அனைத்து ஆன்லைன் (Online) வர்த்தக தளங்களும் அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகின்றனர். வருட கடைசி, பண்டிகை காலம், புதிய ஆண்டின் தொடக்கம் என்று மக்கள் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

அந்த ஆர்வத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள இகாமர்ஸ் தளங்கள் (e-Coomerce sites), புதிய யுக்திகளை பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் புகழ்பெற்ற அமேசான் (Amazon) தளம் ஓப்போ ஏ18 (Oppo A18) ஸ்மார்ட்போனிற்கு அறுமையான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. வெறும் ரூ. 8999-க்கு அட்வான்ஸ்டு அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை (Smartphone) அமேசான் விற்பனை செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்ன?

ஆர்டர் மேல் ஆர்டர்.. ரூ.8999 போதும்.. செம டிசைன்.. செம ஸ்பெக்ஸ்..

இந்த சலுகையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம் வாங்க. பட்ஜெட் விலைக்கு (Budget segment smartphones) இந்த ஓப்போ ஏ18 (Oppo A18) ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த டிஸ்பிளே உடன் வருகிறது என்றே கூறலாம். இது 720 x 1612 ரெசொல்யூஷன் (Resolution), 269 PPI பிக்சல் டென்சிடி (Pixel density) ஆகியவற்றுடன் பெரிய 6.56" இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவை (Display) கொண்டுள்ளது.

ஓப்போ ஏ18 ஸ்மார்ட்போன் (Oppo A18 Smartphone):

இந்த ஸ்மார்ட்போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh rate) அம்சம் உள்ளது. இது வாட்டர்-ட்ராப் நாட்ச் (Water-drop notch) கொண்ட பெசல்-லெஸ் (Bezel-less) டிசைன் உடன், இந்த ஓப்போ ஏ18 (Oppo A18) ஸ்மார்ட்போன் ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக மாறியுள்ளது. இதன் கேமரா அம்சத்தை பொருத்தவரை, ஒரு பட்ஜட் போனுக்கான தரத்தில் சிறப்பாகவே வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்பக்கத்தில் 8MP வைட்-ஆங்கிள் (wide-angle) ப்ரைமரி லென்ஸ் மற்றும் 2MP லென்ஸ் என இரண்டு கேமராக்கள் LED ஃப்ளாஷுடன் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த செல்ஃபி அனுபவத்திற்காக 5MP வைட்-ஆங்கிள் முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கேமராக்களும் 30fps-ல் Full HD வீடியோ ரெக்கார்டிங் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டர் மேல் ஆர்டர்.. ரூ.8999 போதும்.. செம டிசைன்.. செம ஸ்பெக்ஸ்..

சிறந்த செயல்பாட்டிற்காக மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) ப்ராசசர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ ஏ18 (Oppo A18) பட்ஜெட் விலைக்கு ஒரு சிறந்த டீல் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ரெட்மி 13சி ஸ்மார்ட்போனும் இதே ப்ராசசர் கொண்டு தான் செயல்படுகிறது.

இந்த போனின் மற்றொரு சிறப்பாக இருப்பது இதன் பேட்டரி அம்சம் தான். என்ன தான் இந்த ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இல்லை என்றாலும் கூட, இது 5000mAh பேட்டரி (Batter), டைப்-C (Type-C) USB போர்ட் ஆகியவை இந்த விலைக்கு பாராட்டத்தக்கது அம்சங்களாகும். இத்துடன் வரும் 10W சார்ஜரை பயன்படுத்தி 1 மணிநேரத்தில் முழுமையாக இந்த போனை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஓப்போ ஏ18 ஸ்மார்ட்போன் விலை (Oppo A18 Smartphone Price):

அதுமட்டுமின்றி, ஒரு முறை சார்ஜ் செய்தால் 11 முதல் 12 மணிநேரம் வரை அது நீடிக்குமாம். யெஸ் பேங்கின் டெபிட் மற்றும் க்ரெடிட் கார்ட் மூலம் இந்த Oppo A18 ஸ்மார்ட்போனை பர்சேஸ் செய்பவர்களுக்கு 1000 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்பட்டு, ரூ.8999 விலைக்கு விற்கப்படும் என்று அமேசான் (Amazon) அறிவித்துள்ளது. இதன் அசல் விலை ரூ.14,999 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஓப்போ ஏ18 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்டுகளில் வருகிறது. அதில் 4GB RAM + 64GB ROM ரூ. 9999 என்ற விலைக்கும், 4GB RAM + 128GB ROM வேரியண்ட் ரூ. 11,499 என்ற விலைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் வங்கி சலுகையுடன் இதன் விலையை இன்னும் கணிசமாக குறைக்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO A18 Glowing Black 4GB RAM 64GB Storage witj 6.56 Inch HD Display 5000 mAh Battery On Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X