அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: கேப் விடாமல் அடிக்கும் Oppo.. லெதர் பேனல் உடன் A17!

|

Oppo நிறுவனம் சமீபத்தில் Oppo A17 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கிறது. Oppo A16 ஸ்மார்ட்போனின் வாரிசாக Oppo A17 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் பெரிய அளவிலான டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6.56 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் சிப்செட், டூயல் ரியர் கேமரா, விர்ச்சுவல் ரேம் மற்றும் 5000mAh பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

6.56 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவு..

6.56 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவு..

Oppo A17 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் தனித்துவமான கேமரா வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது லெதர் டெக்ஸ்ச்சர் ஃபினிஷ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி கேமரா ஆதரவு இடம்பெற்றிருக்கிறது. இதில் HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.56 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 100 சதவீதம் DCI-P3 வண்ண வரம்பு ஆகிய ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

ஹீலியோ ஜி35 சிப்செட் ஆதரவு..

ஹீலியோ ஜி35 சிப்செட் ஆதரவு..

Oppo A17 ஸ்மார்ட்போனாது ஒப்போ ஏ16 போன்றே ஹீலியோ ஜி35 சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஒப்போ ஏ17 ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் நினைவகத்தை 1டிபி வரை விரிவாக்கம் செய்யலாம்.

புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

Oppo A17 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் உடன் வருகிறது.

செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 5 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5000mAh பேட்டரி ஆதரவு..

5000mAh பேட்டரி ஆதரவு..

இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது. இதில் IPX4 ஸ்பிளாஸ் எதிர்ப்பு, AI போர்ட்ரெய்ட், அல்ட்ரா-வால்யூம் மோட் மற்றும் மைக்ரோ USB போர்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1.1 ஆதரவு இதில் இருக்கிறது.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை..

விலை மற்றும் கிடைக்கும் தன்மை..

Oppo A17 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது தற்போது மலேசிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Oppo A17 ஸ்மார்ட்போன் மலேசியாவில் RM599 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.10,611 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது மலேசியாவின் ஒப்போவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாக வாங்குவதற்கு கிடைக்கிறது. இது லேக் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்தியா மற்றும் உலகளாவிய அறிமுகம் குறித்த அறிவிப்பை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Microlens ஆதரவு கொண்ட முதல் ஸ்மார்ட்போன்..

Microlens ஆதரவு கொண்ட முதல் ஸ்மார்ட்போன்..

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ எஃப்21எஸ் ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. Microlens ஆதரவு கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக Oppo F21s Pro Series வெளியாகி இருக்கிறது.

Oppo F21s Pro தொடரில் 4ஜி மற்றும் 5ஜி ஆதரவு என்ற இரண்டு ஆப்ஷன் இருக்கிறது. Oppo F21s Pro ஆனது இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகமாகி இருக்கிறது.

குவால்காம் SoC சிப்செட்கள் ஆதரவு..

குவால்காம் SoC சிப்செட்கள் ஆதரவு..

15x மற்றும் 30x மேக்னிஃபிகேஷன் திறன் கொண்ட மைக்ரோ லென்ஸ் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

மைக்ரோலென்ஸ் ஆதரவோடு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். 6.43-இன்ச் முழு-எச்டி+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் SoC சிப்செட்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.

Oppo F21s Pro 5G, Oppo F21s Pro விலை விவரங்கள்..

Oppo F21s Pro 5G, Oppo F21s Pro விலை விவரங்கள்..

Oppo F21s Pro 5G, Oppo F21s Pro ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்து பார்க்கையில், Oppo F21s 5G இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.25,999 எனவும் Oppo F21s Pro இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.22,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது டான் லைட் கோல்ட் மற்றும் ஸ்டார்லைட் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Oppo A17 Launched at Budget Price With 50MP Primary Camera, Leather Back Panel and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X