Home
News

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,490-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ12 மாடலின் முந்தைய விலை ரூ.11,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1,520 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஒப்போ ஏ12 ஸ்மார்டபோனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ஏ12 ஸமார்ட்போன் மாடலில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கைரேகை சென்சார் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனில் 4320எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, 4 ஜி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Oppo A12 Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X