கம்மி காசுக்கு 5G Mobile வாங்க முடியாதுனு யார்யா சொன்னா? வந்தாச்சு Oppo-வின் புது ஸ்மார்ட்போன்!
சமீபத்தில் வெளியான லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் உள்ள பெரும்பாலான போன்களில் 5G வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் சந்தையில் 5ஜி சாதனங்கள் பெருகிவிட்டது. அதே சமயம், 5ஜி போன்களின் விலையும் அதிகமாகவுள்ளது. குறைந்த விலையில் 5ஜி போனே கிடைக்காதா? என்று ஏங்கியவர்களுக்கு இது குட் நியூஸ்.
கம்மி காசுக்கு யாரும் நல்ல அம்சத்துடன் 5ஜி சுவையை சுவைக்க ஒரு போன் ரெடி செஞ்சு தரைமட்டங்களா? என்று ஏங்கிய மொபைல் பிரியர்களுக்கு, இந்த மாதத்தின் மிக சிறந்த குட் நியூஸ் ஆக ஒப்போ நிறுவனம் ஒரு புதிய 5ஜி சாதனத்தை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனை நிறுவனம் Oppo A1 5G என்ற பெயரில் அதன் சொந்த நாடான சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

இது அடுத்தபடியாக, வரும் ஏப்ரல் 17ம் தேதி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தைக்குள் கால் பதிப்பதற்கு முன்பாக, இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை விபரம் மற்றும் முக்கியமான சிறப்பம்ச தகவல்கள் இப்போது நமக்கு கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். பட்ஜெட் விலையில் OPPO A1 5G போனில் என்னவெல்லாம் இருக்கிறது? இதோ..
OPPO A1 5G ஆனது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் கூடிய 2412 X 1080 பிக்சல்கள் தெளிவுத்திறன் கொண்ட 240Hz டச் சாம்பிளிங் வீதம் உடைய 6.72' இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் வருகிறது. அட்ரினோ 619 ஜிபியு உடன் இது இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோன் ColorOS 13 உடன் Android 13 இல் இயங்குகிறது.
OPPO A1 5G ஆனது 8GB LPDDR4x ரேம் மற்றும் 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது மைக்ரோ SD உடன் 1TB வரை விரிவாக்கக்கூடியது. இணைப்பு அம்சங்களில் 5G, 4G VoLTE, Wi-Fi 6 802.11, ப்ளூடூத் 5.2, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் போன்றவற்றை வழங்குகிறது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இதில் உள்ளது.

கேமரா பற்றி பார்க்கையில், இந்த OPPO A1 5G போன் ஆனது பின்புறத்தில் டூயல் கேமராக்களைக் கொண்டுள்ளது. இதில் LED ஃபிளாஷ் கொண்ட 50MP பிரைமரி சென்சார் மற்றும் 2MP மோனோ போர்ட்ரெய்ட் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 8MP ஸ்னாப்பரை கொண்டுள்ளது. இறுதியாக இது 67W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. OPPO A1 5G விலை பற்றி இப்போது பார்க்கலாமா?
OPPO A1 5G ஸ்மார்ட்போன் சாதனம் 12GB ரேம் + 256GB மாடலின் விலை RMB 1999 ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 23,900 என்ற விலையில் வருகிறது. இந்த போன் ஓஷன் ப்ளூ, சாண்ட்ஸ்டோன் பிளாக் மற்றும் கேபீரியா ஆரஞ்சு வண்ணங்களில் வருகிறது. இந்தியாவில் அடுத்த வாரம் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் இந்த OPPO A1 5G சாதனம் ரூ.20,000 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications