நாயகன் மீண்டும் வரார்.. கெத்தாக வந்த Opera One Browser
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட்ராய்டு ( Android ) போன்களின் விற்பனை சூடு பிடித்த காலத்தில் ஒபேரா மினி பிரவுசர் ( Opera Mini Browser ) அதன் பயனர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது. சொல்லப்போனால், அப்போதெல்லாம் ஆண்ட்ராய்டு போன் வாங்கிய உடனேயே முதலில் டவுன்லோட் செய்வது ஒபேரா மினி பிரவுசராகத்தான் இருக்கும்.
அப்படி அனைவரது ஃபேவரைட்டாக இருந்த ஒபேரா பிரவுசரின் புதிய மாஸான வெர்ஷனாக ஒபேரா ஒன் பிரவுசர் (Opera One Browser ) வெளியாகி இருக்கிறது. ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) தொழில்நுட்பத்துடன் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளது. இப்போதெல்லாம் கூகுள் குரோம் (Google Chrome), பயர்பாக்ஸ் (Firefox) மைக்ரோசாஃப்ட் எட்ஜ் (Microsoft Edge) பிரவுசர்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முக்கியமாக கூகுள் குரோம் உலகளவில் முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் பயனர்களின் தேவைக்கு ஏற்ப கூகுள் நிறுவனம் கொடுத்த அடுத்தடுத்த அப்டேட்களே. முதலில் கூகுள் குரோமை பயன்படுத்த இந்தியர்களுக்கு சற்று கடினமாகவே இருந்தது என்றே கூற வேண்டும். இதனால் மக்கள் மற்று பிரவுசர்களையே தேடிச் சென்று டவுன்லோட் செய்வதை வாடிக்கையாக வைத்து வந்தனர்.
அப்படி கூகுள் குரோமுக்கு மாற்றாக இந்தியர்கள் தேடிச் சென்றது ஒபேரா மினி பிரவுசரைத்தான். இந்த பிரவுசரின் யூசர் இன்டர்பேஸ் (User Interface) அவ்வளவு எளிமையாக இருக்கும். கூகுள் குரோமில் டவுன்லோட் செய்த போட்டோக்களையும், வீடியோக்களயும் எங்கே என்று நீண்ட நேரம் தேடி வேண்டி இருந்த காலத்தில், ஒபேரா மினியில் எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.
இப்படி பல்வேறு அம்சங்களை கொண்டிருந்த ஒபேரா நாளடைவில் பின்னடைவை சந்தித்தது. இதனால் பிரவுசரில் செய்திகளை படிக்கும் அம்சத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே ஒபேரா கொண்டு வந்தது. இருப்பினும், கூகுள் குரோம், பயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்களின் அப்டேட்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தது.
ஆனாலும், இந்த பிரவுசரை இன்னும் பலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பதற்காக ஒபேரா நிறுவனம் அதன் மாஸ் வெர்ஷனாக ஒபேரா ஒன் என்னும் (Opera One) புதிய பிரவுசரை உலகம் முழுவதும் களமிறக்கி உள்ளது. முன்னணி பிரவுசர்களில் உள்ளது போலவே டேப் க்ரூப்பிங் கான்செப்டுடன் (Tab Grouping Concept) வெளியாகி உள்ளது.
இந்த பிரவுசரை விண்டோஸ் (Windows) மேக்ஓஎஸ் (MacOS), லினக்ஸ் (Linux) ஆகியவற்றில் டிஃபால்ட் (Default) பிரவுசராக பயன்படுத்திக் கொள்ளவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ஒபேரா ஒன் பிரவுசர் ஏஐ (AI ) அடிப்படையில் செயல்படும் என்பதால், பயனர்களுக்கு புதிய பிரவுசிங் அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் முதன்மை பிரவுசராக ஒபேரா ஒன் வளரும் என்று ஒபேரா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிரவுசருடன் ஒபேரா விட்ட இடத்தை மீண்டும் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








