அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல்: சென்னை பிடித்திருக்கும் இடம் தெரியுமா?
குறிப்பாக 4எம்பி-க்கும் குறைவான வேகம் வழங்கிய நகரங்களில் அலகாபாத் இடம்பெற்றுள்ளது, மேலும் அலகாபாத் நகரின் சாரசரி இணைய வேகம் நொடிக்கு 3.5எம்பி-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி இந்தியாவில் முழுவதும் உள்ள 20 பெரும் நகரங்களில் 4ஜி டவுன்லோடு வேகங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஓபன்சிக்னல் சார்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இன்டர்நெட் உபயோகம் பொறுத்தவரை அதிகளவு வளர்ச்சியடைந்துள்ளது.

முதல் இடம்:
ஓபன்சிக்னல் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் நவி மும்பை சராசரியாக 8.72எம்பி (எம்பிபிஎஸ்) 4ஜி டவுன்லோடு வேகத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இரண்டாவது இடம்:
மும்பையை தொடர்ந்து அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது சென்னை, கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் 4.4எம்பி(எம்பிபிஎஸ்) வேகத்தில் இருந்து, தற்சமயம் 8.52எம்பி(எம்பிபிஎஸ்) வேகம் வழங்கியுள்ளது.

மூன்றாவது இடம்:
சென்னையை தொடந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது கொல்கத்தா, அதவாது கொல்கத்தாவில் சாரசரியாக நொடிக்கு 8.46எம்பி வேகம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குபின்பு பெங்களூரு நொடிக்கு 7.17 எம்.பி. வேகம் வழங்குகிறது.

அலகாபாத்:
குறிப்பாக 4எம்பி-க்கும் குறைவான வேகம் வழங்கிய நகரங்களில் அலகாபாத் இடம்பெற்றுள்ளது, மேலும் அலகாபாத் நகரின் சாரசரி இணைய வேகம் நொடிக்கு 3.5எம்பி-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ:
தற்சமயம் இந்தியாவில் இணையவேகம் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது, குறிப்பாக இந்தியாவில் பல மில்லியன் மக்கள் ஜியோவை அதிகமாக பயன்படுத்துகின்றனர். மேலும் எல்டிஇ சேவையை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா சற்து வளர்ச்சியடைந்துள்ளது.


4ஜி டேட்டா வேகம்:
இந்தியாவில் 4ஜி டேட்டா வேகம் நகரங்களில் டாப் 10 பட்டியலில் 6 நகரங்களில் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்தவையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications