அதிவேக 4ஜி டவுன்லோடு: நம்ம ஊருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
மேலும் இரவு நேரங்களில் டவுன்லோடு வேகம் பகலை விட 4.5 மடங்கு அதிகமாக இருக்கிறது என்றும், பின்பு இந்தியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமான 4ஜி டவுன்லோடு வேகங்களை அனுபவிக்கின்றனர்.
இந்தியாவில் ஸ்மார்ட்போனிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்,குறிப்பாக 4ஜி இன்டர்நெட் தான் அதிகளவு பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் அதிவேக டவுன்லோடு வேகத்தை அனுபவித்து வரும் நகரங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.

லண்டனை சேர்ந்த ஒபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் அதிவேக டவுன்லோடு வேகத்தைஅனுபவித்து வரும் நகரங்களில் பட்டியலில் மும்பை முதல் இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக நவி மும்பை பகுதியில் வசிப்போர் அதிகவேக டவுன்லோடு வேகத்தை அனுபவித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மும்பை
மும்பையில் 4ஜி டவுன்லோடு வேகம் சராசரியாக 8.1Mbps ஆக இருந்ததாக சமீபத்தில் மேற்கொள்ப்பட்ட ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடியோ மற்றும் கோப்புகளை குறிப்பிட்ட நிமிடங்களில் டவுன்லோடு செய்ய முடியும்.

அலகாபாத்
மேலும் ஒபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் மிகக்குறைந்த டேட்டா பெறும் நகரமாக அலகாபாத் இருக்கிறது என்றும், அலகாபாத் அதிகபட்ச டேட்டா வேகம் சராசரியாக 4Mbps ஆக இருக்கிறது என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி அடிப்படையில்
குறிப்பாக இந்தியாவின் 20நகரங்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகாலை 4மணிக்கு சராசரியாக 16.8Mbps டவுன்லோடு வேகம் பெற்றிருக்கின்றனர் என ஆய்வில் தகவல் வெளிவந்துள்ளது. பின்பு தினசரி அடிப்படையில்
டேட்டா வேகம் சராசரியாக 6Mbps ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு நேரங்களில் டவுன்லோடு வேகம்
மேலும் இரவு நேரங்களில் டவுன்லோடு வேகம் பகலை விட 4.5 மடங்கு அதிகமாக இருக்கிறது என்றும், பின்பு இந்தியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமான 4ஜி டவுன்லோடு வேகங்களை அனுபவிக்கின்றனர்.

சீரான டேட்டா வேகம்
இந்தியாவில் எப்போதும் சீரான டேட்டா வேகம் வழங்கிய நகரங்கள் பட்டியலில் ஐதராபத் முதலிடம் பிடித்துள்ளது,ஆனால் அலகாபாத்தில் டேட்டா வேகம் சீரற்று இருக்கிறது.

சென்னை:
ஒபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நகரம் எதுவென்றால் நம்மசென்னை தான், சென்னையில் அதிகபட்ச டேட்டா வேகம் சராசரியாக 7.8Mbps ஆக இருக்கிறது என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications