Home
News

Google Chrome கதை முடிஞ்சது.. புதிய Browser.. Intelligent சேர்ச், மினிமல் Data, ChatGPT.. OpenAI அதிரடி!

ஏற்கனவே.. ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்ட்பிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) தொடர்பான வளர்ச்சி மற்றும் போட்டியில்.. ஒப்பன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி-ஐ சமாளிக்க முடியாமல் கூகுள் (Google) நிறுவனத்தின் ஜெமினி ஏஐ (Gemini AI) திணறி வருகிறது.

போதாக்குறைக்கு சாட்ஜிபிடி-4 (ChatGPT-4) மாடலை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த ஓரியன் ஏஐ (Orion AI) மாடல் 2024 டிசம்பரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கிடையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சைக்கு மேலும் ஒரு மண்டை குடைச்சலை கொடுத்துள்ளது ஓப்பன்ஏஐ நிறுவனம்.

Google Chrome கதை முடிஞ்சது.. OpenAI-யின் புதிய Browser!

ஓப்பன் ஏஐ நிறுவனமானது கூகுள் குரோம் ப்ரவுஸருக்கு (Google Chrome Browser) போட்டியாக தனது சொந்த இண்டர்நெட் ப்ரவுஸரை (Developing own Web Browser) உருவாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த உண்மையாகும் பட்சத்தில், கூகுள் க்ரோம் மட்டுமின்றி ஏற்கனவே உள்ள பல இண்டர்நெட் ப்ரவுஸர்களின் கதை முடியும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஏனென்றால், ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சொந்த இண்டர்நெட் ப்ரவுஸரில் சாட்ஜிபிடி போன்ற அட்வான்ஸ்டு லேங்குவேஜ் மாடல்கள் (Advanced language models) நேரடியாக ப்ரவுஸிங் எக்ஸ்பீரியன்ஸின் (Browsing experience) கீழ் ஒருங்கிணைக்கப்படும். மேலும் இன்டெலிஜென்ஸ் சேர்ச் மற்றும் அசிஸ்டென்ட் திறன்களையும் (Intelligent search and assistance capabilities) வழங்கும்.

கூடவே ஆட்டோமேடட் சம்மரைசேஷன் (Automated summarization), ரியல் டைம் டிரான்ஸ்லேஷன் (Real time translation) மற்றும் கான்டெக்ஸ்ட் அவேர் சேர்ச் (Context aware search) போன்ற அம்சங்கள் ஆனது மற்ற ப்ரவுஸர்களை விட ஓப்பன் ஏஐ-யின் ப்ரவுஸர் தனித்து நிற்பதை உறுதி செய்யும்.

எல்லாவற்றை விட முக்கியமான ஓப்பன் ஏஐ-யின் இண்டர்நெட் ப்ரவுஸர் ஆனது கூகுள் க்ரோம்மில் இருந்து தன்னை வேறுபடுத்தி கொள்ள.. முன்னெப்போதும் கிடைக்காத ப்ரைவஸி மற்றும் பெர்சனலைசேஷனை (Privacy and personalization) வலியுறுத்தும். இது யூஸர் டேட்டா (User data) பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய மேம்படுத்தப்பட்ட என்க்ரிப்ஷன் ப்ரோட்டோகால்களை (Enhanced Encryption Protocols) கொண்டிருக்கும்.

மேலும் மினிமம் டேட்டா கலெக்ஷன் (Minimal Data Collection) உடன் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இண்டர்நெட் ப்ரவுஸர் ஆனது பயனர்களின் ஒப்புதல் மற்றும் பயனர்களுக்கான வெளிப்படைத்தன்மையை (User consent and transparency) மையமாக கொண்டு, அத்தியாவசியமான யூசர் டேட்டாவை (Essential user data) மட்டுமே சேகரிக்கும் .

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, மொபைல் சந்தையில் கூகுள் நிறுவனத்திற்கு சவால் விடக்கூடிய சாம்சங் உடன் சேர்ந்து, சாம்சங் டிவைஸ்களில் ஏஐ அம்சங்களை ஒருங்கிணைப்பதற்கான பேச்சுவார்த்தையையும் ஓப்பன்ஏஐ நிறுவனம் நடத்தி வருகிறது. சாம்சங் உடனான ஒத்துழைப்பு சாத்தியமாகும் பட்சத்தில், மில்லியன் கணக்கான சாம்சங் பயனர்களின் டிவைஸ்களில் இருந்து கூகுள் அசிஸ்டண்ட் தூக்கப்படும்; அதற்கு பதிலாக சாட்ஜிபிடி மற்றும் பிற ஏஐ தொழில்நுட்பங்கள் சேர்க்கப்படும்.

டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஓரியன் ஏஐ மாடலை பொறுத்தவரை, இது சாட்ஜிபிடி 4 மாடலை விட 100 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றும், ஆரம்பத்தில் இது ஓப்பன்ஏஐ நிறுவனத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் (மைக்ரோசாஃப்ட்போன்ற) தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

புதிய ஓரியன் ஏஐ மாடலானது சாட்ஜிபிடி 4-யின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருந்தாலும் கூட இது சாட்ஜிபிடி 5 என்று அழைக்கப்பாடாமல் இருக்க ஒரு காரணம் உள்ளது. அது என்னவென்றால் ஜிபிடி-4 மற்றும் ஜிபிடி-3 ஆகிய ஏஐ மாடல்களை போல் இல்லாமல் இது வரையறுக்கப்பட்ட வெளியீட்டை காணும்; அதாவது பெரும்பாலும் கார்ப்பரேட் பயன்பாடுகளில் ஈடுபடுத்தப்படும்.

ஓரியன் ஏஐ மாடலின் அறிமுகம் அறிவிக்கப்பட்ட மறுநாளே கூகுள் நிறுவனமானது அதே டிசம்பர் 2024 இல் ஜெமினியின் லேட்டஸ்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அது கூகுள் ஜெமினி 2.0 (Google Gemini 2.0) என்று அழைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

More from GizBot

Best Mobiles in India

English summary
OpenAI Web Browser With Intelligent Search ChatGPT AI Features Against Google Chrome
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X