Home
News

ChatGPT மினி.. ஆகஸ்ட் மாதத்தில் வரும் பெரிய மாற்றம்.. Google தலையில் இடியை இறக்கிய OpenAI நிறுவனம்!

கூகுள் நிறுவனத்திற்கும், ஜெமினை ஏஐ-க்கும் மிகப்பெரிய போட்டியாளராக திகழும் ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனமானது அதன் அடுத்த ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மாடல் (Artificial Intelligence Model - AI Model) ஆன சாட்ஜிபிடி 5 (ChatGPT 5) வெர்ஷனை 2025 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிடைக்கப்பட்ட அறிக்கையின்படி, சாட்ஜிபிடி 5 மாடல் ஆனது பேஸ் வேரியண்ட் (Base), நானோ வேரியண்ட் (Nano) மற்றும் மினி வேரியண்ட் (Mini) என மொத்தம் 3 வகைகளில் வெளியாகும். இது ஜிபிடி-சீரிஸ் மற்றும் ஓ-சீரிஸ் இரண்டையும் ஒன்றிணைத்து, சொந்த பகுத்தறிவு திறன் கொண்ட ஒருங்கிணைந்த மாடல் ஆக வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ChatGPT மினி.. ஆகஸ்ட் மாதத்தில் வரும் பெரிய மாற்றம்!

கடந்த ஆண்டில் இருந்தே, ஜிபிடி 5 மாடல் அறிமுகம் செய்யப்படாது மாறாக அது ஓரியன் என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்கிற தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அது உண்மை ஆகவில்லை. கடந்த பிப்ரவரியில் வந்த ஜிபிடி 4.5 மடலுக்கான குறியீட்டு பெயர் தான் ஓரியன் என்பது பின்னர் தெரிய வந்தது.

அதே மாதத்தில் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன சாம் ஆல்ட்மேன், எக்ஸ் தளம் வழியிலான ஒரு பதிவில் ஜிபிடி 5 மாடலுக்கான ரோட்மேப்பை பகிர்ந்து கொண்டார். அதன்படி ஜிபிடி 4.5 தான் கடைசி நான்-செயின்-ஆஃப்-டாட் மாடலாக (Non-chain-of-thought model) இருக்கும்.

மேலும் எதிர்கால ஜிபிடி-சீரிஸ் மாடல்கள் அனைத்தும் எப்போது நீண்ட நேரம் சிந்திக்க வேண்டும் மற்றும் சிந்திக்க வேண்டாம் (when to think for a long time or not) என்பதை இயல்பாகவே அறிந்து கொள்ளும் திறன் கொண்டவைகளாக இருக்கும் என்பதையும் ஓப்பன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் வெளிப்படுத்தி இருந்தார்.

கூடவே சாட்ஜிபிடி-யின் இலவச அடுக்கில் உள்ள பயனர்கள் ஸ்டாண்டர்ட் இன்டெலிஜெண்ட் செட்டிங்ஸ்-ன் கீழ் ஜிபிடி 5 க்கான அன்லிமிடெட் சாட் அக்செஸை பெறுவார்கள் என்றும், அதே நேரத்தில் பிளஸ் (Plus) மற்றும் ப்ரோ (Pro) சந்தாதாரர்கள் அதிக அளவிலான இன்டெலிஜென்ஸை பெறுவார்கள் என்றும் ஆல்ட்மேன் கூறி இருந்தார்.

மேலும் சாட்ஜிபிடி 5 மாடலானது வாய்ஸ், கேன்வாஸ், சேர்ச், டீப் ரிசேர்ச் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஒவ்வொரு ஓப்பன் ஏஐ டூலுக்குமான அணுகலை கொண்டிருக்கும் என்பதையும் உறுதிப்படுத்தி இருந்தார். இருப்பினும் அந்த நேரத்தில் ஜிபிடி 5 மாடலின் சாத்தியமான வெளியீட்டு தேதி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மிகவும் சமீபத்தில் தான் ஓப்பன்ஏஐ தொழில்நுட்ப ஊழியர் உறுப்பினர் ஆன அலெக்சாண்டர் வெய், ஒரு எக்ஸ் தள பதிவின் வழியாக "நாங்கள் விரைவில் ஜிபிடி 5 மாடலை வெளியிடுகிறோம்" என்று கூறி இருந்தார். தி வெர்ஜ் (The Verge) அறிக்கையின்படி, ஜிபிடி 5 மாடல் ஆனது அடுத்த மாதம் (2025 ஆகஸ்ட்) அறிமுகம் செய்யப்படலாம்.

தி வெர்ஜ்ஜின் சமீபத்திய அறிக்கை ஆனது, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் திட்டங்களை நன்கு அறிந்த பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இந்நிறுவனம் அதன் திட்டமிடப்பட்ட ஓப்பன் சோர்ஸ் மாடல்களை வெளியிட்ட பிறகு ஜிபிடி 5 மாடல் வெளியிடப்படும் என்பதை சுட்டிக்காட்டி உள்ளது

முன்னரே குறிப்பிட்டபடி ஜிபிடி 5 மாடல் ஆனது ஒரு நானோ மற்றும் ஒரு மினி மாறுபாட்டையும் பெறும் என்று கூறப்படுகிறது. இவற்றில் பேஸ் மாடல் மற்றும் மினி மாடல் ஆனது சாட்ஜிபிடி மற்றும் ஏபிஐ (API) ஆகிய இரண்டிலும் கிடைக்கும், அதே நேரத்தில் நானோ மாடல் ஆனது ஏபிஐ (API) வழியாக மட்டுமே கிடைக்கும் என்றும் தி வெர்ஜ் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OpenAI To Launch GPT 5 AI Model in Base Mini Nano Variants in August 2025 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X