20 வருஷ உழைப்பு போச்சு.. Google Search-க்கு குட்பை! ChatGPT Search அறிமுகம்.. OpenAI-ன் அட்வான்ஸ்டு அம்சங்கள்!
அங்கே தொட்டு இங்கே தொட்டு.. கடைசியில் ஒப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது கூகுள் (Google) நிறுவனத்தின் அடிமடியிலேயே கைவைத்து உள்ளது. சில நாட்களுக்கு முன்னர், சாட்ஜிபிடி-4 வெர்ஷனை (ChatGPT-4 Version) விட 100 மடங்கு சக்திவாய்ந்த ஓரியன் ஏஐ (Orion AI) ஆனது டிசம்பர் 2024 இல் அறிமுகமாகும் என்று கூறி கூகுளையும், அதன் ஜெனெரேட்டிவ் சாட்பாட் ஆன ஜெமினி ஏஐ-ஐயும் பரபரப்பாக்கி விட்டுருந்தது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் கூகுள் சேர்ச்சிற்கு போட்டியாக, ஓப்பன்ஏஐ நிறுவனம் அதன் சாட்ஜிபிடி சேர்ச்-ஐ (ChatGPT Search) அறிமுகம் செய்துள்ளது. சாட்ஜிபிடி சேர்ச்-ன் அறிமுகமானது, சேர்ச் அட்வெர்டைசிங் (Search Advertising) உலகில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும் மற்றும் இது கடந்த 2 தசாப்தங்களாக சேர்ச் எஞ்சின் (Search Engine) துறையை "ஆட்சி செய்துவரும்" கூகுள் சேர்ச்சை (Google Search) ஒரு வழி செய்யும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

ஏனென்றால் சாட்ஜிபிடி சேர்ச் ஆனது ரியல்டைம் வெப் சேர்ச் (Real-time web search) மற்றும் நியூஸ் & டேட்டா வழங்குநர்களுடனான (News and data providers) கூட்டாண்மையின் கீழ் ஒவ்வொரு நிமிடங்களுக்குமான நியூஸ், வெதர், ஸ்டாக் கோட்ஸ், ஸ்போர்ட்ஸ் ஸ்கோர் மற்றும் பலவற்றை வழங்கும் திறனை கொண்டுள்ளது. மேலும் இந்த சாட்ஜிபிடி சேர்ச் ஆனது, அதன் மேம்பட்ட கான்வெர்சேஷனல் ஏஐ திறன்களுடன் (Advanced conversational AI capabilities), வேகமான, துல்லியமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேர்ச் ரிஸல்ட்களையும் வழங்கும்.
கூகுள் சேர்ச்சின் ஆதிக்கத்திற்கு சவால்விடும் அளவிற்கு சாட்ஜிபிடி சேர்ச்சிடம் இன்னொரு சிறப்பம்சம் உள்ளது. சாட்ஜிபிடி சேர்ச் மாடல் ஆனது எளிமையான லிங்க்களுக்கு (Simple Links) பதிலாக நுணுக்கமான பதில்களை வழங்குவதால், இது பயனர் ஈடுபாடு (User engagement) அதிகரிக்கும். இதன் மூலம் பிராண்டுகளுக்கான விளம்பர தொடர்பு (Ad relevance) அதிகரிக்கும்.
மேலும் சாட்ஜிபிடி சேர்ச் வழங்கும் உரையாடல் மாதிரியான ரிசல்ட்ளுக்குள் (Conversational results), தத்தம் விளம்பரங்களை வைக்க பிராண்டுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடும் வழங்கப்படும். இதன் மூலம் சேர்ச் அட்வெர்டைஸ்மென்ட் ஆர்ஓஐ (Search advertising ROI) ஆனது மறுவரையறை செய்யப்படும் வாய்ப்புகளும், கூகுளின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
விளம்பரம் செய்யும் பிராண்டுகளுக்கு, பெர்சனலைசேஷன் டூல்களை (Personalization tools) வழங்குவதன் மூலம் புதிய வழிகளில் பார்வையாளர்களுடன் இணைவதற்கான வாய்ப்பை சாட்ஜிபிடி சேர்ச் உருவாக்கி கொடுக்கிறது. இந்திய விளம்பரதாரர்களுக்கு இந்த புதிய விருப்பம் மிகவும் சுவாரசியமாக தோன்றும் பட்சத்தில்.. கூகுள் சேர்ச்சிற்கு பெரிய சிக்கல் காத்திருக்கிறது என்று அர்த்தம்!
ஓரியன் ஏஐ மாடலின் அறிமுகத்தை பொருத்தவரை இது சாட்ஜிபிடி 4 மாடலை விட 100 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றும், இது 2024 ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சாட்ஜிபிடி 5 என்கிற பெயருக்கு பதிலாக இது ஓரியன் ஏஐ என்கிற பெயரின்கீழ் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏனென்றால் (ஆரம்ப கட்டங்களில்) ஓரியன் ஏஐ ஆனது ஓப்பன்ஏஐ நிறுவனத்துடன் உடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் (மைக்ரோசாப்ட் போன்ற) தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும். இந்த அணுகுமுறை, ஓப்பன்ஏஐ-யின் முந்தைய வெளியீடுகளான ஜிபிடி-4 மற்றும் ஜிபிடி-3 ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.
இதில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே சாட்ஜிபிடி-3 மற்றும் சாட்ஜிபிடி-4 ஆனதுஅனைவராலும் அணுகப்பட்டது போல, ஓரியன் ஏஐ-ஐ அணுக முடியாது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது ஓரியன் ஏஐ மாடல் வரையறுக்கப்பட்ட வெளியீட்டை காணும். இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், கார்ப்பரேட் பயன்பாடுகளில் தரவை சேகரிக்கபயன்படுத்தப்படலாம். ஆகமொத்தம் கூகுள் சேர்ச் உடன் சேர்த்து ஜெமினி ஏஐ-க்கும் ஒரு "ஆப்பு" பார்சல் செய்யப்பட்டுள்ளது!


Click it and Unblock the Notifications