Home
News

AI-க்கு மாறும் அரசாங்கம்.. OpenAI இறக்கிய ChatGPT Gov.. தேசிய பாதுகாப்பு முக்கியமாச்சே.. இது எதுக்கு இப்போது?

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிட்டி அரசு (ChatGPT Gov) களமிறங்கி இருக்கிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் செயற்கை நுண்ணறிவுக்கு மாறிவரும் நேரத்தில் உலகளாவிய தலைமை கொண்ட அமெரிக்கா அதன் பாதுகாப்பை பலப்படுத்த இந்த முடிவை எடுத்துள்ளது.

இது வருங்காலங்களில் மற்ற நாடுகளின் தேசிய பாதுகாப்பிலும் செயற்கை நுண்ணறிவு நுழைய இது வழிவகை செய்துள்ளது. இதனால், என்னென்ன மாறப்போகிறது. அமெரிக்காவின் அரசு நிறுவனங்களில் சாட்ஜிபிடி என்ன செய்யப்போகிறது. ஓப்பன்ஏஐ சிபிஓ (OpenAI CPO) இதுகுறித்த என்ன சொல்லி இருக்கிறார் உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

AI-க்கு மாறும் அரசாங்கம்.. OpenAI இறக்கிய ChatGPT Gov.. என்ன புதுசா?

சாட்ஜிபிடி வருகைக்கு பிறகு கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற அமெரிக்காவின் டெக் ஜாம்பான்களும் செயற்கை நுண்ணறிவில் முழு கவனம் செலுத்த தொடங்கிவிட்டன. ஆரம்பத்தில் சாட்டிங், கோடிங் போன்ற தகவல் தொழில்நுட்பத்தில் கால் வைத்த ஏஐ சாட்பாட்கள் இப்போது, இமேஜ், வீடியோ போன்றவற்றிலும் கால் பாதிக்க தொடங்கிவிட்டன.

இது அனைத்து துறைகளிலும் மெல்ல மெல்ல ஆதிகத்தை செலுத்தும் என்பது தொழில்நுட்ப வல்லுநர்களின் கணிப்பாக இருக்கிறது. இதனால் சைபர் செக்யூரிட்டிக்கு கூடுதலாக திட்டங்களையும், நிதிகளையும் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் இருக்கின்றன. இப்போது, அமெரிக்கா வழக்கம்போல முன்கூட்டியே திட்டத்தை தொடங்கிவிட்டது.

ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியை தேசிய பாதுகாப்பில் இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகவே, சைபர் செக்யூரிட்டியை முக்கியமாக கொண்ட அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஏஜென்சிகளில் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் ChatGPT Gov வெர்ஷனை பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. இதில் பல்வேறு ஏஜென்சிகள் இடம்பெற்றுள்ளன.

சர்வதேச ஆயுதப் போக்குவரத்து விதிமுறைகள் - ஐடிஆர் (International Traffic in Arms Regulations - ITAR), குற்றவியல் நீதி தகவல் சேவைகள் - சிஜேஐஎஸ் (Criminal Justice Information Services - CJIS), பாதுாப்பு துறையின் கீழ் செயல்படும் இம்பாக்ட் லெவல் 5 - ஐஎல்5 (Impact Level 5 - IL5) மற்றும் பெடரல் ஆர்ஏஎம்பி (FedRAMP) ஆகிய ஏஜென்சிகள் இதை பயன்படுத்தப் போகின்றன.

இந்த ஏஜென்சிகள் பயன்படுத்தும் டேட்டாக்கள் அவற்றின் மைக்ரோசாப்ட் அசூர் கமர்சியல் கிளவுட் (Microsoft Azure Commercial Cloud) ஸ்டோரேஜில் சேமிக்கப்படும். இதனால், டேட்டா பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. ஆகவே, ChatGPT Gov வெர்ஷனில் பிரைவசி, செக்யூரிட்டி மற்றும் இணக்கம் ஆகியவை அந்தந்த ஏஜென்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இதுகுறித்த ஓபன்ஏஐ சிபிஓ கெவின் வையில் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், சாட்ஜிபிடியின் புது வெர்ஷனான ChatGPT Gov-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அமெரிக்காவின் அரசாங்க ஏஜென்சிகள், இதை மைக்ரோசாப்ட் அசூர் அல்லது அரசுக்கு சொந்தமான கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் பயன்படுத்தலாம். இதன் பங்கீடு பொதுத்துறையில் அமெரிக்காவின் உலகலாவிய தலைமையை தொடர செய்ய இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு தொடர்பாக சிக்கலான சவால்களுக்கு இது பக்கபலமாக இருக்கும். பொதுமக்களின் நலன், உள்கட்டமைப்பு போன்றவற்றில் தேசிய பாதுகாப்பை இது மேம்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறார். உண்மையில், செயற்கை நுண்ணறிவு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்பட்டும் என்பதை சீனாவின் டீப்சீக் (DeepSeek) காண்பித்துவிட்டது. சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளியிருக்கிறது.

இதனால், அமெரிக்கா தொழில்நுட்ப நிறுவனங்களிள் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. ஆகவே, உலக நாடுகளுக்கு இடையேயான போட்டியானது ஏஐ அடிப்படையிலும் தொடங்கி இருப்பதை இது நமக்கு காட்டுகிறது. ஆகவே, வளர்ந்து வரும் நாடுகளும் வரும் காலங்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் முழு கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. இது இந்தியாவுக்கும் பொருந்தும்.

(Image Credit: Adobe Stock)

More from GizBot

Best Mobiles in India

English summary
OpenAI Launched ChatGPT Gov For US Government Agencies To Strengthening National Security
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X