அவ்ளோ தான் Google Gemini-ஐ முடிச்சு விட்டாங்க.. இனி இதை கிளிக் பண்ணா ChatGPT அந்நியன்-ஆ மாறிடும்!
புதிய எதிரியான டீப்சீக் ஏஐ (DeepSeek AI) கொடுக்கும் மண்டை குடைச்சல்களால் ஏற்கனவே அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கும் கூகுள் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் ஆன ஜெமினையின் (Google Gemini) கதையை முடித்துவிடும் படியாக.. பழைய எதிரியான சாட்ஜிபிடி-க்கு (ChatGPT) ஒரு அற்புதமான அப்டேட் கிடைத்துள்ளது. சாம் ஆல்ட்மேனை பொறுத்தவரை இதுவொரு "சூப்பர் பவர்" ஆகும்!
கடந்த வாரம் ஆபரேட்டர்-ஐ (Operator) அறிமுகப்படுத்திய வேகத்தில், ஓப்பன்ஏஐ நிறுவனமானது அதன் நெக்ஸ்ட்-ஜென் ஏஐ ஏஜென்ட் (Next Gen AI Agent) ஆன டீப் ரிசர்ச்சை (Deep Research) அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஏஐ ஏஜென்ட் ஆனது ஒப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்தி விரிவான ஆராய்ச்சிகளை செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த டீப் ரிசர்ச் ஏஐ ஏஜென்ட் ஆனது ஓப்பன்ஏஐ ஓ3 (OpenAI o3) மூலம் இயக்கப்படுகிறது என்பதும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் கூற்றுப்படி, இது நிதி, அறிவியல், கொள்கை & பொறியியல் போன்ற துறைகளில் இன்டென்சிவ் நாலேஜ் வொர்க்களை செய்பவர்களுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. இது முழுமையான மற்றும் நம்பகமான ஆராய்ச்சி தேகளை பூர்த்தி செய்யும். சந்தேகத்திற்கு இடமின்றி இது ஆராய்ச்சி நோக்கங்களை கொண்டவர்களின் பல நேரங்களை சேமிக்கும்!
ஓப்பன் ஏஐ-யின் டீப் ரிசர்ச் ஏஐ ஏஜென்ட்-ஐ எப்படி பயன்படுத்துவது? ரொம்ப சிம்பிள். சாட்ஜிபிடி-யில் உள்ள மெசேஜ் கம்போஸரில் இருந்து டீப் ரிசர்ச் என்பதை கிளிக் செய்யவும். உங்கள் கேள்விகளை உள்ளிடவும். உங்களுக்கு என்ன மாதிரியான பகுப்பாய்வு தேவை என்பதை தெளிவாக சாட்ஜிபிடி-க்கு தெரியப்படுத்துங்கள்.
கூடுதலாக சில பைல்கள் அல்லது ஸ்ப்ரெட்ஷீட்களை கூட நீங்கள் இணைக்கலாம். உங்கள் கோரிக்கையை சமர்ப்பித்தவுடன், எடுக்கப்பட்ட ஸ்டெப்ஸ் மற்றும் செயல்பாட்டின் போது பயன்படுத்தப்பட்ட சோர்ஸ்களை காட்ட ஒரு சைட்பார் தோன்றும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நீங்கள் கேட்டதை கொடுக்க, அதன் சிக்கல்தன்மையை பொறுத்து, இந்த ஏஐ ஏஜென்ட் ஆனது 5 முதல் 30 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்றும் ஓப்பன்ஏஐ குறிப்பிட்டுள்ளது
ஆராய்ச்சி முடிந்ததும் பயனர்கள் அதுகுறித்த அறிவிப்பை பெறுவார்கள், அதுவரை அவர்கள் மற்ற பணிகளை செய்யலாம். எல்லாம் முடிந்ததும் பைனல் ரிசல்ட் ஆனது உங்களுடைய சாட்-க்குள் ஒரு விரிவான அறிக்கையாக வழங்கப்படும். ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் கூற்றுப்படி, சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களுடன் விரிவான, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பதில்களை வழங்குவதில் டீப் ரிசர்ச் சிறந்து விளங்குகிறது.
ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வான சாம் ஆல்ட்மேன், இந்த மாடல் மெதுவாக இருந்தாலும், இதுபோன்ற பலவிதமான சிக்கலான, மதிப்புமிக்க பணிகளை செய்யக்கூடிய முதல் ஏஐ மாடல் இது தான் என்று கூறியுள்ளார். இது சாட்ஜிபிடி-க்கு ஒரு சூப்பர் பவர் கிடைத்ததை போல என்றும் கூறியுள்ளார்.
இதேபோல ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் விபி இன்ஜினியர் ஆன ஸ்ரீனிவாஸ் நாராயணன், இந்த புதிய மாடலானது, சிக்கலான அறிவுசார் பணிகளில் உதவ ஏஐ-ஐ பயன்படுத்துவதற்கான புதிய வழி என்று கூறியுள்ளார். டீப் ரிசர்ச் என்பது ஒரு நிபுணரின் ஆலோசனையைக் கேட்பது போன்றது என்றும் அவர் கூறுகிறார்.
கடந்த வாரம் அறிமுகமான ஆபரேட்டர்-க்கும் புதிய டீப் ரிசர்ச் ஏஐ ஏஜென்ட்-க்கு இடையே என்ன வித்தியாசம்? இரண்டிற்கும் இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால், படிவங்களை பூர்த்தி செய்தல், மளிகை பொருட்களை ஆர்டர் செய்தல் அல்லது மீம்களை உருவாக்குதல் போன்ற பலதரப்பட்ட பரவுஸர் செயல்பாடுகளில் - ஆபரேட்டர் ஆல் பணிபுரிய முடியும்.
ஆனால் ஏஐ ஏஜென்ட் ஆன டீப் ரிசர்ச் ஆல் அதை செய்ய முடியாது. டீப் ரிசர்ச் ஆனது இடைவெளியை குறைப்பதற்கான பகுத்தறிவு திறன்களை உருவாக்குகிறது, இது வேலை மற்றும் அன்றாட வாழ்வில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை சமாளிக்க அனுமதிக்கிறது. சீன ஏஐ மாடலான டீப்சீக் அதன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மலிவான விலை காரணமாக, அதிக கவனத்தை பெற்ற நேரத்தில் அதேபோன்ற பெயரின் கீழ் டீப் ரிசர்ச் வந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications