அடுத்தது நீங்க தான்.. Android போன் வைத்து இருப்பவர்களை பார்த்து கைகாட்டிய ChatGPT நிறுவனம்.. ஏன்?
சாட்ஜிபிடி (ChatGPT) என்கிற ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட்பாட்டை (Artificial Intelligence Chatbot) உருவாக்கிய நிறுவனமான ஓப்பன்ஏஐ (OpenAI), ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்தும் மக்களை பார்த்து "ஆண்ட்ராய்டு பயனர்களே, அடுத்தது உங்களுக்கு தான்" (Android users, You're next) என்று கூறியுள்ளது.
ஏனென்றால், ஓப்பன்ஏஐ நிறுவனமானது ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்கான சாட்ஜிபிடி ஆப்பை (ChatGPT App) அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஆப்பின் ஆண்ட்ராய்டு வெர்ஷன் (Android Version) கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உணர்த்தவே.. "ஆண்ட்ராய்டு பயனர்களே, அடுத்தது உங்களுக்கு தான்" என்று ஓப்பன்ஏஐ நிறுவனம் கூறியுள்ளது.

இந்த சாட்ஜிபிடி ஆப்பை இலவசமாக பயன்படுத்தலாமா? அல்லது சந்தா பணம் செலுத்த வேண்டுமா? இந்த ஆப்பை முற்றிலும் இலவசமாக (Free) பயன்படுத்தலாம் என்றும், இது பலவகையான டிவைஸ்களுக்கு இடையே உள்ள ஹிஸ்டரியை சிங்க் செய்யும் (Sync history Across Devices) என்றும் ஓப்பன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆப் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் ஓப்பன்-சோர்ஸ் ஸ்பீச்-ரிகக்னைசேஷன் சிஸ்டம் (Open-source Speech-recognition System) ஆன விஸ்பர் (Whisper) உடன் வருகிறது. அறியாதோர்களுக்கு விஸ்பர் என்பது சாட்ஜிபிடி உடன் ஸ்பீச்-டூ-டெக்ஸ்ட் (Speech-to-text) அடிப்படையிலான உரையாடல்களை நிகழ்த்த உதவும் ஒரு டூல் அல்லது அம்சமாகும்.
சாட்ஜிபிடி பிளஸ் (ChatGPT Plus) சந்தாதாரர்களாக இருந்தால் ஜிபிடி-4 வெர்ஷனில் (GPT-4 Version) உள்ள திறன்களுக்கான பிரத்யேக அணுகல் கிடைக்கும் என்றும் ஓப்பன்ஏஐ நிறுவனம் கூறியுள்ளது. அதாவது புதிய அம்சங்களுக்கான முன்கூட்டிய அணுகல் (Early access to features) மற்றும் விரைவான ரெஸ்பான்ஸ் டைம் (Faster response times) போன்ற முன்னுரிமை அம்சங்கள் கிடைக்கும்.
அறியாதோர்களுக்கு ஜிபிடி 4 என்பது ஒரு சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மாடல் (Powerful artificial intelligence model) ஆகும். இது மிகவும் பிரபலமான ஜெனரேட்டிவ் ஏஐ டூல் (Generative AI Tool) ஆன சாட்ஜிபிடி-யின் லேட்டஸ்ட் வெர்ஷன் (Latest Version) ஆகும்.
சாட்ஜிபிடி ஆப் வழியாக என்னென்ன கிடைக்கும்? உடனடி பதில்கள் (Instant answers) கிடைக்கும். விளம்பரங்கள் அல்லது பல வகையான முடிவுகளை பெறாமல் துல்லியமான தகவலை வழங்கும். மேலும் நல்ல ஆலோசனைகளும் (Tailored advice) கிடைக்கும். சமையல், பயணத் திட்டங்கள் அல்லது சிந்தனைமிக்க மெசேஜ்களை உருவாக்குதல் போன்றவைகளை வழங்கும்.
கிரியேடிவ் இன்ஸபிரேஷன் (Creative inspiration) ஆக இருக்கும். கிஃப்ட் யோசனைகள், அவுட்லைன் ப்ரெசன்ட்டேஷன் அல்லது கவிதை எழுதுவது போன்றவைகளை செய்யும். தொழில்முறை உதவிகளையும் (Professional input) செய்யும். யோசனை மற்றும் கருத்தாக்கத்தில் உதவி செய்து உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கும்.
கடைசியாக, பலவகையான கற்றல்களை நிகழ்த்துவதற்கான வாய்ப்பாகவும் (Learning opportunities) இருக்கும். அதாவது புதிய மொழிகள் (New languages), நவீன வரலாறு (Modern history) மற்றும் பலவற்றை ஆராயவும், உங்களுடைய சொந்த கற்கும் வேகத்தின் கீழ் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் சாட்ஜிபிடி ஆப் உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








