Home
News

இனிமே ChatGPT ஆட்டமே வேற.. ஒரு நாளுக்கு 2.5 பில்லியன் ப்ராம்ப்ட்கள்.. Google-க்கு போட்டியாக அசுர வளர்ச்சி!

ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது, அதன் சாட்ஜிபிடி (ChatGPT) ஒரு நாளுக்கு 2.5 பில்லியன் ப்ராம்ப்டுகளை கையாளுவதாக தெரிவித்துள்ளது. இதை கூகுள் சர்ச் (Google Search) போன்ற மிகப்பெரும் ஜாம்பானுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருந்தாலும், அதற்கு எதிராக எந்தவொரு நிறுவனமும் எட்டாத வளர்ச்சியை ஓப்பன்ஏஐ பதிவு செய்துவருகிறது. இது கூகுள் நிறுவனத்துக்கு போட்டியாக மாறுமா? ஜெமினி இதை கட்டுக்குள் வைக்குமா? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

* சாட்ஜிபிடி வளர்ச்சி
* பில்லியன்களில் ப்ராம்ட்கள்
* கூகுளுடன் ஒப்பீடு
* எதிர்காலம் எப்படி?

இனிமே ChatGPT ஆட்டமே வேற.. ஒரு நாளுக்கு 2.5 பில்லியன் ப்ராம்ப்ட்கள்!

சாட்ஜிபிடி வளர்ச்சி:
2022ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சாட்ஜிபிடி அறிமுகமானது. வெறும் 5 நாட்களில் 1 மில்லியன் யூசர்களை எட்டி தனி கவனம் பெற்றது. அதே வேகத்தில் சென்றதால் வெறும் 2 மாதங்களில் 100 மில்லியன் மாதாந்திர யூசர்களை எட்டியது. இந்த 2025ஆம் ஆண்ட்டின் ஏப்ரல் மாத கணக்கின்படி, 800 மில்லியன் வாராந்திர யூசர்களை சாட்ஜிபிடி எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் 1 பில்லியன் யூசர்களை எட்டுவதே சாட்ஜிபிடியின் நோக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, ஒட்டுமொத்தமாகவே எந்தவொரு புதிய ஆப்-பும் எட்டாத வளர்ச்சியை சாட்ஜிபிடி பதிவு செய்து வருகிறது. இப்போது, ஒரு நாளுக்கு 2.5 பில்லியன் ப்ராம்ப்ட்களை சாட்ஜிபிடி கையாளுவதாக ஓப்பன்ஏஐ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இனிமே ChatGPT ஆட்டமே வேற.. ஒரு நாளுக்கு 2.5 பில்லியன் ப்ராம்ப்ட்கள்!

பில்லியன்களில் ப்ராம்ட்கள்:
ஆக்ஸியோஸ் (Axios) நிறுவனத்துக்கு ஓப்பன்ஏஐ கொடுத்த தகவலின்படி, ஒரு நாளுக்கு 2.5 பில்லியன் ப்ராம்ப்டுகளை சாட்ஜிபிடி கையாளுகிறது. இது ஒட்டுமொத்தமாக உலகளவில் சாட்ஜிபிடிக்கு வரும் ப்ராம்ப்ட்களின் எண்ணிக்கையாகும். இதில் 330 மில்லியன் ப்ராம்ப்ட்கள் அந்த நிறுவனத்தின் தலைமையிடம் இருக்கும் அமெரிக்காவில் இருந்து வருகிறது.

2024ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், சாட்ஜிபிடி மூலம் தினமும் 1 பில்லியன் ப்ராம்ப்ட்கள் வருவதாக தெரிவித்திருந்தார். அடுத்த 8 மாதங்களில் இது அப்படியே டபுளாக மாறி இருக்கிறது. இது சாட்ஜிபிடியின் அசுர வளர்ச்சியை காட்டுகிறது. ஆனால், இது கூகுள் சர்ச்-க்கு முன் மிகவும் குறைவுதான்.

கூகுளுடன் ஒப்பீடு:
கூகுள் சர்ச் மூலம் ஒரு நாளைக்கு 14 முதல் 16 பில்லியன் தேடல்கள் செய்யப்படுகின்றன. உண்மையில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், இதுபோன்ற தினசரி புள்ளிவிவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும், ஆண்டுக்கு 5 டிரில்லியன் தேடல்களை கையாளுவதாக தகவல்கள் இருக்கின்றன. அதன்படி பார்த்தால், ஒரு நாளுக்கு 13.7 பில்லியன் கையாளப்படுகிறது.

இனிமே ChatGPT ஆட்டமே வேற.. ஒரு நாளுக்கு 2.5 பில்லியன் ப்ராம்ப்ட்கள்!

ஆனால், இதுவும் பழைய டேட்டாவாகும். ஆகவே, சமீபத்தில் 16 பில்லியன் தேடல்களை கூகுள் சர்ச் கையாள வாய்ப்புள்ளது. இதை சாட்ஜிபிடியுடன் ஒப்பிட்டால், கூகுள் சர்ச் மிகவும் உயரத்தில் இருக்கிறது. ஆனால், மொத்தமாக ஒப்பிடுவது சரியாக இருக்காது. ஏனென்றால், கூகுள் சர்ச் போல சாட்ஜிபிட்டியில் தேடல் போன்ற வினவல்கள் (search-like queries) அதிகம் கேட்கப்படுவதில்லை.

அதாவது, மொத்த எண்ணிக்கையில் 37.5 மில்லியன் இது கூகுள் சர்ச் போல இருக்கலாம். இருப்பினும், சாட்ஜிபிடியின் வளர்ச்சி மிகப்பெரும் அளவில் இருப்பதால், இதுவும் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. உண்மையில், கூகுள் நிறுவனம் இதற்கும் பல்வேறு திட்டங்களை ஏற்கனவே செய்துவிட்டது. கூகுள் ஜெமினி மற்றும் கூகிள் சர்ச்சில் ஏஐ மோட் (AI Mode) வைத்திருக்கிறது.

இனிமே ChatGPT ஆட்டமே வேற.. ஒரு நாளுக்கு 2.5 பில்லியன் ப்ராம்ப்ட்கள்!

எதிர்காலம் எப்படி?
சாட்ஜிபிடிக்கு போட்டோயாக ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஜெமினி ஏஐ சாட்பாடை கொண்டுவந்துவிட்டது. இதில் ஏகப்பட்ட அப்டேட்கள் வந்துவிட்டது. வீடியோ ஜெனரேஷன், இமேஜ் ஜெனரேஷன் போன்றவையும் இருக்கிறது. அதேபோல வருங்காலத்தில் வர இருக்கும் சாட்ஜிபிடி ஏஐ பிரவுசர்களுக்கு போட்டியாக ஏற்கனவே, கூகுள் சர்ச்சில் ஏஐ மோட் கொண்டுவந்துவிட்டது.

இந்த ஏஐ மோட் மூலம் வழக்கமாக செய்யும் தேடல்களை போலல்லாமல், ஏஐ உதவியுடன் சாட் செய்வதை போல தேடல்களை செய்ய முடிகிறது. ஆகவே, இது அப்கிரேட் செய்யப்படும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆகவே, சாட்ஜிபிடி மூலம் ஏஐ பிரவுசர் வந்தாலும், அதை கட்டுக்குள் கொண்டுவர கூகுள் நிறுவனமானது, ஏற்கனவே அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டது என்பதே உண்மையாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OpenAI Confirmed ChatGPT Handles 2.5 Billion Prompts Daily Will Grow To Rival Google Search
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X