Home
News

உலக இன்டர்நெட் ஸ்பீட் ரேங்கிங்கில் இந்தியா எந்த இடம்? சீனா எந்த இடம்? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!

நெட்வொர்க் இன்டெலிஜென்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி இன்சைட்களை (network intelligence and connectivity insights) வழங்கும் நிறுவனமான Ookla மூலம் நவம்பர் 2022-க்கான இன்டர்நெட் ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் (Internet Speedtest Global Index) இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்பீட்டெஸ்ட் ரேங்கிங் (Speedtest ranking) பட்டியலில் இந்தியா என்ன இடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம்.

Ookla's Speedtest Global Index என்றால் என்ன?
Ookla's Speedtest Global Index ஆனது மாதாந்திர அடிப்படையில் உலகம் முழுவதும் மொபைல் மற்றும் நிலையான பிராட்பேண்ட் வேகத்தைத் தரவரிசைப்படுத்துகிறது. உலகளாவிய குறியீட்டிற்கான தரவு ஒவ்வொரு மாதமும் ஸ்பீட்டெஸ்ட்டைப் பயன்படுத்தி, மக்கள் தங்கள் இணைய செயல்திறனைச் சோதிக்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் சோதனைகளில் இருந்து வருகிறது. நிலையான பிராட்பேண்ட் மொபைல் வைஃபை முடிவுகளும் இதில் அடங்கும்.

உலக இன்டர்நெட் ஸ்பீட் ரேங்கிங்கில் இந்தியா எந்த இடம்? சீனா எந்த இடம்?

முந்தைய மாதத்திற்கான முடிவுகள் மாத நடுப்பகுதியில் அப்டேட் செய்யப்படும். அப்படி புதிப்பிக்கப்பட்ட நவம்பர் 2022-க்கான புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை Ookla தற்போது வெளியிட்டுள்ளது. ஓக்லாவின் கூற்றுப்படி, நவம்பர் மாதத்தில், இந்தியா 18.26 Mbps சராசரி மொபைல் பதிவிறக்க வேகத்தைப் (median mobile download speed) பதிவு செய்துள்ளது. இது கடந்த அக்டோபர் 2022 இல் பதிவு செய்யப்பட்ட 16.50 Mbps ஐ விட சிறந்தது. இதன் மூலம், இந்தியா அதன் உலகளாவிய தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.

இதன் மூலம், இந்தியா 113 இடத்தில இருந்து 105 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த சராசரி நிலையான பிராட்பேண்ட் வேகத்தில் (median fixed broadband speed) உலக அளவில் தரவரிசையில் இந்தியா ஒரு இடத்தைக் குறைத்து, அக்டோபரில் 79வது இடத்தில் இருந்து இப்போது 80வது இடத்திற்கு நகர்ந்துள்ளது. நிலையான சராசரி பதிவிறக்க வேகத்தில் இந்தியாவின் செயல்திறன் அக்டோபரில் 48.78 ஆக இருந்து நவம்பரில் 49.09 Mbps ஆக சிறிது அதிகரித்துள்ளது.

நவம்பர் ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸின் (Speedtest global index) படி, உலகளாவிய சராசரி மொபைல் வேகத்திற்கான தரவரிசையில் கத்தார் முன்னணியில் 1வது இடத்தில் உள்ளது. அதேசமயம், செனகல் உலகளவில் தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறியுள்ளது. நிலையான பிராட்பேண்ட் பதிவிறக்க வேகத்தில், சிலி முதலிடத்தில் உள்ளது. மேலும் பாலஸ்தீனம் மற்றும் பூட்டான் உலகளவு தரவரிசையில் 14 இடங்களை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக இன்டர்நெட் ஸ்பீட் ரேங்கிங்கில் இந்தியா எந்த இடம்? சீனா எந்த இடம்?

இந்தியாவில் 5G அக்டோபரில் அறிமுகமானது, அக்டோபரில் மொபைல் மற்றும் நிலையான பிராட்பேண்ட் பதிவிறக்க வேகத்தில் இந்தியா 13 நகரங்களில் அதிக பட்சமாக பதிவு செய்தது. இந்தியா அதிக சராசரி மொபைல் பதிவிறக்க வேகத்தை பதிவு செய்துள்ளது. இது செப்டம்பரில் 13.87 Mbps இலிருந்து அக்டோபரில் 16.50 Mbps வரை உயர்ந்துள்ளது. ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) இரண்டும் அக்டோபர் 2022 இல் இந்தியாவில் 5G சேவையை அறிமுகம் செய்தன.

இந்த இரு நிறுவனங்களும் நாடு முழுவதும் தங்கள் தடத்தைச் சீராக வளர்த்து வருகின்றன. ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) நாடு முழுவதும் சுமார் 13 நகரங்களில் கிடைக்கிறது. இந்த 5ஜி பட்டியலில் சிம்லா சமீபத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) சேவை தற்போது பீட்டாவின் கீழ் கிடைக்கிறது. பீட்டா 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது. அடுத்த காலாண்டிற்குள் இந்த 2 நிறுவனங்களும் இன்னும் அதிகமான இடங்களில் தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளன.

இறுதியில், நவம்பர் மாத புள்ளிகளை வைத்து பார்க்கையில் இந்தியா உலக தரவரிசையில், மொபைல் பதிவிறக்க வேகத்தின் அடிப்படையில் 105 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த பட்டியலில் சீன 6வது இடத்திலும், பாக்கிஸ்தான் 114வது இடத்திலும் உள்ளது. அதேபோல், பிராட்பேண்ட் வேகத்தின் உலக அளவு தரவரிசையில் இந்தியா 80வது இடத்திலும், சீனா 2வது இடத்திலும் மற்றும் பாக்கிஸ்தான் 150வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Ookla Internet Speedtest Global Index For November 2022 Got Released Which Place For India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X