Home
News

இந்தியாவில் மொபைல் டவுன்லோட் வேகம் அதிகரிப்பு: Ookla வெளியிட்ட முக்கியத் தகவல்.!

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டது. கூடிய விரைவில் இந்நிறுவனங்கள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்க உள்ளன. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனமும் இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு சதவீதம்?

இந்நிலையில் இந்தியாவில் மொபைல் டவுன்லோட் வேகம் சுமார் 115 சதவீதம் அதிகரித்து இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு ஆக்டோபல் மாதம் 5ஜி சேவை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மொபைல் டவுன்லோட் வேகம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மொபைல் டவுன்லோட் வேகம் அதிகரிப்பு: Ookla தகவல்.!

அதேபோல் கடந்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13.87Mbps ஆக இருந்த மொபைல் டவுன்லோட் வேகம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29.85Mbps ஆக அதிகரித்து உள்ளது. குறிப்பாக இந்தியாவில் மொபைல் டவுன்லோட் வேகம் பற்றி தகவல்களை ஊக்லா (Ookla) எனும் ஆய்வு அறிக்கை நிறுவனம் வெளியிட்டு இருக்கும் நெட்வொர்க் இண்டெலிஜன்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி பற்றிய அறிக்கையில் இடம்பெற்று உள்ளது.

69-வது இடம்

இதுதவிர சர்வதேச ஸ்பீடு-டெஸ்ட் இண்டெக்ஸ்-இல் இந்தியா 49 இடங்கள் முன்னேறி தற்சமயம் 69-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 118-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 69-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்பீடு-டெஸ்ட் இண்டெக்ஸ்-இல் மெக்சிகோ, ரஷ்யா மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்திய வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவில் மொபைல் டவுன்லோட் வேகம் அதிகரிப்பு: Ookla தகவல்.!

ஊக்லா அறிக்கையின்படி 5ஜி சேவை அறிமுகம் செய்த பின்பு ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் எல்இடி வேகம் வளர்ச்சி அடைந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களின் புதிய நெட்வொர்க் கட்டமைப்புக்கு மேற்கொண்டு இருக்கும் முதலீடுகள் அதிக பலன் கொடுக்க துவங்கி இருக்கிறது.

குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் மீடியன் 5ஜி டவுன்லோட் வேகத்தில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தன. ஆனால் தற்போது 5ஜி மீடியன் வேகம் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அதிகரித்து இருக்கிறது. அதிலும் தற்போது ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற பகுதிகளில் 200Mbps வேகம் சீராக கிடைக்கிறது. கொல்கத்தாவில் 500Mbps வரையிலான டேட்டா வேகம் கிடைக்கிறது என அந்த ஊக்லா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொபைல் டவுன்லோட் வேகம் அதிகரிப்பு: Ookla தகவல்.!

இருந்தபோதிலும் பல்வேறு நகரங்களில் இன்டர்நெட் வேகம் மெதுவாகத் தான் இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவை மற்றும் அடுத்த ஆண்டு 5ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்என்எல்

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுக்க சுமார் 1 லட்சம் பகுதிகளில் 4ஜி சேவையை வெளியிட இருக்கிறது. பின்பு இதற்காக ஒரு லட்சம் பகுதிகளில் டிசிஎல் உபகரணங்களைப் பயன்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் அனுமதி பெற்று இருக்கிறது.

இந்தியாவில் மொபைல் டவுன்லோட் வேகம் அதிகரிப்பு: Ookla தகவல்.!

உள்நாட்டுத் தொழில்நுட்பம்

டிசிஎஸ் நிறுவனம் நீண்ட காலமாகவே பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவனங்களின் கூட்டணியில் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க் பயன்படுத்த இருக்கிறது. அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனம் 4ஜி வெளியீட்டிற்கு இவ்வாறு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ookla announces 115 percent increase in mobile internet speed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X