Jio மிரட்டல்.. மாசத்துக்கு ரூ.250 போதும்.. டெய்லி 2.5GB டேட்டா உட்பட.. 365 நாட்களுக்கும் ஜாம் ஜாம்னு நன்மைகள்!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிடம் "இது போன்ற" திட்டங்கள் இருக்கும் வரையிலாக.. ஏர்டெல், வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற போட்டியாளர்களால்.. "ஒன்றுமே செய்ய முடியாது! மாதந்தோறும் வெறும் ரூ.250-க்கு இவ்ளோ நன்மைகள் கிடைச்சா யார் வேற கம்பெனிக்கு ஜம்ப் அடிப்பா?
அதென்ன திட்டம்? நாம் இங்கே விரிவாக பார்க்கவுள்ளது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை (Jio Rs.2999 Prepaid Recharge Plan) பற்றித்தான். தினமும் 2.5ஜிபி ஹைஸ்பீட் டேட்டாவை தவிர்த்து.. இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டத்தின் வேலிடிட்டி என்ன? இதோ விவரங்கள்:

ஜியோ ரூ.2999 திட்டத்தின் விரிவான நன்மைகள்: இந்த திட்டம் 1 ஆண்டு என்கிற வேலிடிட்டி (1 Year Validity) உடன் வருகிறது. இன்னும் சரியாக சொல்லே வேண்டுமென்றால் 365 நாட்கள் (365 Days Validity) ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் கீழ் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். ஆக, மொத்தமாக இது 912.5ஜிபி டேட்டாவை வழங்கும்.
ஒருவேளை டெய்லி டேட்டா லிமிட் (2.5ஜிபி) தீர்ந்துவிட்டால், அதன் பிறகு இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64கேபிபிஎஸ் (64Kbps) ஆக குறைக்கப்படும். டேட்டாவை தவிர்த்து, செல்லுபடியாகும் முழு காலத்திற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் (Dialy 100 Free SMS ) நன்மைகளும் கிடைக்கும்.

ரூ.2999-ன் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, ஜியோ டிவி (Jio TV) , ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ க்ளவுட் (Jio Cloud) ஆப்களுக்கான இலவச சந்தாக்கள் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் தகுதியான (அதாவது 5ஜி போன் வைத்து இருக்கும்; 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதியில் இருக்கும்) ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, அன்லிமிடெட் 5ஜி டேட்டா பலனும் (Unlimited 5G Data Benefit) கிடைக்கும்.
ஒட்டுமொத்தமாக ரூ.2999 திட்டமானது மாதந்தோறும் ரூ.250 (ரூ.2999 / 12 = ரூ.249.91 பைசா) என்கிற செலவின் கீழ் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், இலவச 5ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் இருக்கும் ஒரேவொரு குறை என்னவென்றால்.. இதன்கீழ் கிடக்கம் இலவச ஜியோ சினிமா சந்தாவில் ஜியோ சினிமா பிரீமியம் (Jio Cinema Permium) சேர்க்கப்படவில்லை; அதுவும் சேர்க்கப்பட்டால்.. இது இன்னும் சிறப்பான ஒரு திட்டமாக மாறும்!

ஜியோ ரீசார்ஜ்களில் அறிவிக்கப்பட்டுள்ள சமீபத்திய சலுகைகளை பொறுத்தவரை ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் ரீசார்ஜின் மீது 18ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ரூ.1198-ன் மொத்த டேட்டாவானது 168ஜிபி-லில் இருந்து 186ஜிபி ஆக அதிகரித்துள்ளது. இலவசமாக கிடைக்கும் 18ஜிபி டேட்டாவானது, மை ஜியோ ஆப் வழியாக மூன்று 6ஜிபி டேட்டா வவுச்சர்களாக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்ட்ரா டேட்டா தவிர்த்து ரூ.1198-ன் கீழ் 84 நாட்களுக்கு டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், 3 மாதங்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, 84 நாட்களுக்கு அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் சந்தா, 84 நாட்களுக்கு ஜியோசினிமா பிரீமியம் சந்தா கிடைக்கும்.
இதேபோல ஜியோவின் ரூ.866 ரீசார்ஜ் மீது ரூ.50 கேஷ்பேக் மற்றும் ரூ.600 மதிப்புள்ள 3 மாதங்களுக்கான ஸ்விக்கி ஒன் லைட்டிற்கான இலவச சந்தாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








