Home
News

ப்ளீஸ் வெளிய போயிடாதீங்க.. Jio வழங்கும் கேஷ்பேக் ஆபர்.. எந்த பிளானில் எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும்?

ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்திய நாளில் இருந்து முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்திற்கு ஒரே தலைவலி தான். "இது கட்டுப்படி ஆகாது" என்று சில ஜியோ கஸ்டமர்கள் பிஎஸ்என்எல் (BSNL) சேவைக்குள் நுழைய தொடங்கின. ஏனென்றால் தற்போதைக்கு இந்தியாவில் மிகவும் மலிவான விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்களை (Cheapest Prepaid Plans) வழங்குவது பிஎஸ்என்எல் தான். இதன் விளைவாக சில தினங்களுக்கு முன்பாக.. கஸ்டமர்களின் கோபத்தை தணிக்க ஜியோ நிறுவனம் 3 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது.

இதற்கிடையில், ஜியோ ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ.50 கேஷ்பேக் ஆபரும் கிடைக்கிறது. ஆனால் இது ஒரே ஒரு ஜியோ திட்டத்தின் மீது மட்டுமே அனுக கிடைக்கிறது. அந்த திட்டத்தின் விலை ரூ.1028 ஆகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி என்ன? இதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ப்ளீஸ் வெளிய போயிடாதீங்க.. Jio வழங்கும் கேஷ்பேக் ஆபர்!

ஜியோ ரூ.1028 திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். முக்கிய நன்மைகளை பொறுத்தவரை, இது டெய்லி 2ஜிபி டேட்டா என மொத்தம் 168ஜிபி டேட்டாவை வழங்கும். மேலும் இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் வழங்கும்.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ரூ.50 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் 3 மாதங்களுக்கான ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவும் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். அறியாதோர்களுக்கு, ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவின் கீழ் 10 இலவச ஹோம் டெலிவரி உட்பட பல நன்மைகள் கிடைக்கும்

மேலும் ஜியோவின் ரூ.1098 திட்டத்தின் கீழ் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் போன்ற ஜியோ ஆப்ஸ் நன்மைகளும் கிடைக்கும். இதன்கீழ் கிடைக்கும் ஜியோ சினிமா சந்தாவில் ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema premium) கன்டென்ட்கள் அணுக கிடைக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ரூ.1098 ஆனது ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் வழங்கும். அதாவது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 5ஜி நெட்வொர்க் அறிமுகமான பகுதியல் இருந்தால் மற்றும் அவர்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 3 ஜியோ திட்டங்களின் விலைகள் என்ன? அவைகளின் விலை ரூ.329, ரூ.949 மற்றும் ரூ.1049 ஆகும். ஜியோவின் ரூ.329 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதலாக ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) நன்மையும் கிடைக்கும். உஇந்த திட்டத்தில் ஜியோவின் 5ஜி சலுகை எதுவும் இல்லை.

அடுத்ததாக ஜியோவின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டம் தான் 90 நாட்கள் அல்லது 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது. மேலும் இந்த திட்டம் ஜியோவின் 5ஜி வெல்கம் ஆபரையும் வழங்கும்.

கடைசியாக உள்ள ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதலாக ஜியோடிவி மொபைல் ஆப்ஸ் மூலம் சோனிலிவ் மற்றும்ஜீ5 ஆகிய ஓடிடி சந்தாக்களும் கிடைக்கும். இந்த திட்டத்துடன் ஜியோ அன்லிமிட்ட் 5ஜி சலுகையும் தொகுக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Only One Jio Plan Gives Rs 50 Cashback After Recharge Check Out Rs 1028 Offer Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X