Aadhaar அட்டை வச்சிருந்தா அலெர்ட்.. இன்னும் 9 நாள் தான் டைம் இருக்கு.. இல்லன்னா சிக்கல் தான்..
ஆதார் அட்டை (Aadhaar card) இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெற இந்த ஆதார் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த ஆதார் அட்டை என்பது முக்கியமானது. இந்நிலையில் ஆதார் அப்டேட் (Aadhaar Update) செய்ய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது அதார் அப்பேட் செய்ய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்கு பிறகு உங்கள் ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்றுவதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நீங்கள் இதுவரை உங்களது ஆதார் கார்டை அப்டேட் செய்யவில்லை என்றால், உடனடியாக அதைச் செய்வது நல்லது.

ஏனெனில் இந்திய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 10 ஆண்டுகள் பழமையான ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என ஒரு விதிமுறையை தற்போது உருவாக்கியுள்ளது. அதேபோல் ஆதார் அப்டேட் செய்வதற்கான காலக்கெடு இதற்கு முன்பு 3 முறை நீட்டிக்கப்பட்டது.
ஆனால் அது வரும் ஜூன் 14ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. எனவே வரும் ஜூன் 14ஆம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களை அப்டேட் செய்ய விரும்பினால் செலவின்றி செய்யலாம். ஆனால் ஜூன் 14 தேதிக்குப் பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆதார் அட்டையை அப்டேட் செய்யும் எளிமையான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

வழிமுறை-1: ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் மை ஆதார் (my aadhaar) என்பதை கிளிக் செய்த பின்பு கீழே தோன்றும் மெனுவில் இருந்து உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் (அப்டேட் செய்யவும்) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-2: அடுத்து ஆதார் எண் மற்றும் கேப்சாக சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்ட பிறகு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பின்பு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இந்த ஓடிபி உதவியுடன் உள்நுழைய முடியும். அடுத்து முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பாருங்கள்.
வழிமுறை-3: இந்த சுயவிவரங்களில் எந்த தவறும் இல்லாமல் சரியாக இருந்தால் என்னுடைய விவரங்கள் சரியாக இருக்கின்றன என்பதை கிளிக் செய்யவும். ஒருவேளை தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.இதற்காக நீங்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். அதாவது வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். இதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்யுங்கள்.

வழிமுறை-4: அதன்பின்பு உங்களது அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள், அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் கண்டிப்பாக 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிமுறை-5: அதேபோல் அடையாள அட்டையும் முகவரி ஆவணமும் JPEG, PNG or PDF ஃபார்மட்டில் இருத்தல் வேண்டும். இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் ஒன்று வரும். மேலும் ஒரு யுனிக் அப்டேட் ரெஃபரன்ஸ் நம்பர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும். இதை வைத்து உங்களது விவரங்கள் அப்டேட் ஆனதைக் எளிமையாகக் கண்காணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








