Home
News

இவ்ளோ நாள் எங்கப்பா இருந்த.. 300GB டேட்டாவுடன் Amazon Prime இலவசம்.. தெறிக்கவிடும் 2 Vodafone Idea பிளான்கள்!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, அதன் வாடிக்கையாளர்களுக்கு பல நான்-ஸ்டாப் ஹீரோ திட்டங்களை (Non-Stop Hero Plans) வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டங்களில், சில திட்டங்களில் மட்டுமே அமேசான் பிரைம் ஒடிடி-க்கான (Amazon Prime OTT) இலவச சந்தா கிடைக்கிறது .

நாம் இங்கே பேசும் திட்டங்களின் விலை விஐ ரூ.696 பிளான் மற்றும் ரூ.996 பிளான் ஆகும். விஐ நான்-ஸ்டாப் ஹீரோ திட்டங்களின் பிரிவின் கீழ், பயனர்களுக்கு அமேசான் பிரைம் அணுகலை வழங்கும் திட்டங்கள் - இந்த இரண்டு திட்டங்கள் மட்டுமே ஆகும்.

வோடபோன் ஐடியா: 300GB டேட்டாவுடன் Amazon Prime இலவசம்!

இந்த திட்டங்களுமே வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) வழங்குகின்றன. இந்த திட்டங்களின் கீழ் கிடைக்கும் டேட்டா 28 நாட்களுக்கு 300 ஜிபி என வரையறுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த திட்டங்களுக்கும் இடையே ரூ.300 விலை வித்தியாசம் இருக்க காரணம் - வேலிடிட்டி தான்.

ரூ.696 மதிப்புள்ள வோடபோன் ஐடியா நான்-ஸ்டாப் ஹீரோ திட்டமானது 56 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிட்ட் டேட்டா (300ஜிபி / 28 நாட்கள்) உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மையை பொறுத்தவரை 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா இலவசமாக கிடைக்கும்.

அமேசான் பிரைம் லைட் வழியாக நீங்கள் எச்டி (720p) தரத்தில் ஓடிடி கன்டென்ட்களை பார்க்கலாம் மற்றும் அமேசான் வழியாக இலவச ஒரு நாள் டெலிவரிகளையும் பெறலாம். 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டுள்ள பயனர்கள், நாடு முழுவதும் பல நகரங்களில் இந்த திட்டத்தின் மூலம் 5ஜி டேட்டா கனெக்டிவிட்டியையும் பெற முடியும்

மறுகையில் உள்ள வோடபோன் ஐடியா ரூ.996 திட்டமானது 84 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிட்ட் டேட்டா (300ஜிபி / 28 நாட்கள்) உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மையை பொறுத்தவரை 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா இலவசமாக கிடைக்கும்.

மேலே குறிப்பிட்டபடியே அமேசான் பிரைம் லைட் வழியாக நீங்கள் எச்டி (720p) தரத்தில் ஓடிடி கன்டென்ட்களை பார்க்கலாம்; அமேசான் வழியாக இலவச ஒரு நாள் டெலிவரிகளையும் (Free one day delivery) பெறலாம்; 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டு இருந்தால் 5ஜி டேட்டா கனெக்டிவிட்டியையும் பெறலாம்

இதேபோல வோடபோன் ஐடியாவிடம் ரூ.649 மதிப்புள்ள ப்ரீபெய்ட் நான்-ஸ்டாப் ஹீரோ திட்டமும் உள்ளது. இது 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டிலும் வரம்பற்ற டேட்டாவுடன் வருகிறது இருப்பினும், அதிவேக டேட்டா 300ஜிபி ஆக வரையறுக்கப்பட்டு உள்ளது. ரூ.649 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள் ஆகும்.

டேட்டா நன்மையை தவிர்த்து, மற்ற நன்மைகளை பொறுத்தவரை இது வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்ஸ் ஆகியவைகளையும் வழங்கும். இந்த திட்டத்தில் ஓடிடி (OTT) போன்ற எந்த கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை. அடுத்தாக வோடபோன் ஐடியாவிடம் ரூ.979 ப்ரீபெய்ட் நான்-ஸ்டாப் ஹீரோ திட்டம் உள்ளது

இது 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. மேலும் இது வரம்பற்ற டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய முக்கிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதிவேக டேட்டாவும் 300ஜிபி என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட ஓடிடி சந்தா ஒன்றும் உள்ளது. அது விஐ மூவீஸ் அண்ட் டிவி (Vi Movies & TV) சந்தா ஆகும்.

Best Mobiles in India

English summary
Only 2 Vodafone Idea Non Stop Hero Plans Rs 696 Rs 996 Offering Free Amazon Prime Up to 84 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X