Home
News

இன்னும் 13 நாள் தான் இருக்கு.. Aadhaar-ல் மறக்காம இதை செஞ்சிடுங்க.. இல்லன்னா சிக்கல் ஆயிடும்..

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக மாற்றம் செய்ய கடைசி 13 நாட்கள் மட்டுமே உள்ளன. குறிப்பாக இதற்கான கடைசி அவகாசம் நெருங்கி வருகிறது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது ஆதார் அட்டையில் பிறந்த தேதி, முகவரி போன்ற பல்வேறு தகவல்கள் இருக்கும். குறிப்பாக இதில் உள்ள தகவல்கள் தவறாக இருந்தால் அரசு தொடங்கும் முக்கியமான திட்டங்களை மக்கள் பயன்படுத்த முடியாமல் போகிறது.

எனவே அதார் அட்டையில் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் உங்களின் ஆதார் கார்டு பழையது என்றால் இப்போது அதை புதுப்பிக்க வேண்டும். அதாவது ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள், 2016-இன் படி தனிநபர்கள் தங்களின் ஆதார் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு பத்து (10) வருடங்களுக்கும் ஒருமுறை தங்களது அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

 இன்னும் 13 நாள் தான் இருக்கு.. Aadhaar-ல் மறக்காம இதை செஞ்சிடுங்க..

இதுதவிர ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்கள், சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி வருகிறது. அதுவும் மத்திய, மாநில அரசு சேவைகளைப் பெற ஆதார் அட்டை தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது. இந்த நிலையில்தான் ஆதார் அட்டையில் மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

குறிப்பாக ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க வரும் செப்டம்பர் 14-தான் கடைசி தேதி என்று கூறப்படுகிறது. முன்னதாக வெளியான அறிவிப்பில் மார்ச் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதற்குப்பிறகு இதற்கான அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது புதிய இறுதி நாள் செப்டம்பர் 14ம் தேதியாக மாற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று தேவையான விவரங்களைக் கொடுத்து இலவசமாக தற்போது ஆதார் புதுப்பிக்க முடியும். குறிப்பாக இந்த இணையதளம் மூலம் தான் இலவசமாகத் திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14 வரை உள்ளது என்பதை நினைவில் கொள்ள.

அதேசமயம் ஆதாரில் பெயர், பிறந்த தேதி முகவரி மற்றும் பிற விவரங்களை ஆன்லைனில் அதாவது UIDAI இணையதளம் மூலம் அப்டேட் செய்து கொள்ள முடியும். ஆனால் உங்கள் ஆதார் கார்டில் உள்ள போட்டோவை ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியாது. சரி இப்போது ஆதார் அட்டையில் போட்டோ அப்டேட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆதார் அட்டையில் உங்கள் போட்டோவை அப்டேட் செய்ய வேண்டுமானால் அதற்கு நீங்கள் ஆதார் சேவை மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். முதலில் அதாவது https://uidai.gov.in/en/ என்ற இந்த யூஐடிஏஐ (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த தளத்தில் முகப்பு பக்கத்தில் ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தை (Aadhaar Enrolment Form) பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து பிரிண்ட்-அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.

 இன்னும் 13 நாள் தான் இருக்கு.. Aadhaar-ல் மறக்காம இதை செஞ்சிடுங்க..

நீங்கள் பிரிண்ட் எடுத்த அந்த படிவத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவும். அடுத்து அந்த படிவத்தை உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஆதார் சேவை மையத்தில் சென்று, ஆதார் சேவை மைய அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அடுத்து ஆதார் சேவை மையத்தில் உங்களது பயோமெட்ரிக் விவரங்களை அளிக்க வேண்டும். அனைத்து விவரங்களைச் சரியாக அளித்த பின்பு ஆதார் சேவை மைய அதிகாரி உங்களை அங்கேயே புகைப்படம் எடுத்துக் கொள்வார். குறிப்பாக இந்த சேவைக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இப்போது உங்களது ஆதார் அட்டையில் போட்டோவை மாற்றுவதற்கான செயல்முறை முடிந்துவிட்டது. மேலும் உங்களுக்கு ஒரு யூஆர்என் (URN) எண் அதற்கான ஒப்புதல் படிவத்துடன் அளிக்கப்படும். இதைக் கொண்டு உங்களுக்குச் சேவையின் நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Only 13 days left to update Aadhaar details. Here's how to do it
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X