Home
News

ஆன்லைன்ல பொருள் வாங்குறீங்களா? அப்போ கட்டாயம் நோ-காஸ்ட் EMI மட்டும் போடாதீங்க.. பெருகும் மறைமுக ஆபத்து..

இந்தியாவை பொறுத்தவரையில், இப்போது பல பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் (Online Shopping) செய்வதை பழக்கமாக கொண்டுள்ளனர். என்ன தான் நேரில் சென்று அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை சில்லறை விற்பனையாளர் கடைகளில் (Retailer shops) பார்வையிட்டு, அதன் தரத்தை (Quality) நேரில் சோதனை செய்து பார்த்தாலும், பலர் வீடு திரும்பிய பிறகு, அதே பொருளை ஆன்லைனில் தான் ஆர்டர் (Online Order) செய்கிறார்கள். இந்த வினோதமான பழக்கம் இப்போது இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என்று அனைவரிடமும் பெருகிவிட்டது. இதற்கான முக்கிய காரணம் இங்கு கிடைக்கும் சலுகை மற்றும் பேமெண்ட் விருப்பம் தான்.

ஆம், பொதுமக்களை பொறுத்தவரை, நேரடியாக கடைக்கு சென்று வாங்கும் பொருட்களை விட, ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்களின் விலை குறைவாக இருப்பதாக கருதுகிறார்கள். பல பொருட்கள் ஆன்லைன் மூலம் வாங்கும் பொழுது சலுகையுடன் விலை குறைவாக (Offer Price) கிடைக்கின்றன. இது மக்களை கவர்கிறது. மற்றொருபுறம், ஆன்லைனில் பொருட்களை வாங்கும் பொழுது வட்டியில்லா தவணை முறையில் (No cost EMI) கட்டணத்தை செலுத்த வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆன்லைன்ல பொருள் வாங்குறீங்களா? அப்போ நோ-காஸ்ட் EMI மட்டும் போடாதீங்க..

ஆன்லைன்ல பொருள் வாங்குறீங்களா? கண்டிப்பா இதை எல்லோரும் கவனிக்க வேண்டும்:

இதுவம் மக்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. ஒரு பொருளை முழுமையாக பணம் (Cash) கொடுத்து வாங்க விரும்பாதவர்கள், இப்போது அவற்றின் விலையை தவணை முறையில் (EMI) செலுத்தி பயன்பெறுகிறார்கள். தவணை முறை என்றாலே அதற்கென்று நிறுவனங்கள் சில வட்டியை (Intrest) வசூலிக்கின்றன. இது சிலருக்கு வீண் செலவாக தெரிந்த காரணத்தினால், EMI விருப்பம் (EMI Options) மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் (Customers) எண்ணிக்கை குறைய துவங்கியது.

இதை கவனித்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் நோ-காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) என்றழைக்கப்படும் வட்டியில்லா தவணை முறையை அறிமுகம் செய்தன. இந்த நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தின் மூலம், மக்கள் வட்டியே செலுத்தாமல், அவர்கள் வாங்கும் பொருளின் கட்டணத்தை தவணையாக செலுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதில் சில மறைமுக ஆபத்துகள் (Invisible Charges) நிறைந்திருப்பதாக நிதி சார்ந்த வல்லுநர்கள் (Financial experts) எச்சரிக்கிறார்கள்.

இதேபோல், இப்போது பெரும்பாலான ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் பை நாவ் பே லேட்டர் (Buy Now, Pay Later) என்ற விருப்பத்தை இப்போது அதிகமாக வழங்க துவங்கியுள்ளன. இந்த புதிய முறையின் மூலம், நீங்கள் ஒரு ரூபாய் பணம் கூட செலுத்தாமல், பொருட்களை ஆர்டர் (Order) செய்ய முடியும். இதற்கான கட்டணம் உங்களுடைய கிரெடிட் கார்ட் (Credit card) மூலம் பெறப்படும். இது விற்பனை முறை தற்போத இந்தியாவில் பெரியளவில் பெருகிவருகிறது.

கட்டாயம் நோ-காஸ்ட் EMI மட்டும் போடாதீங்க.. மறைமுகமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள்:

என்னதான் நீங்கள் நோ-காஸ்ட் இஎம்ஐ முறை போன்ற விருப்பங்களின் மூலம் பொருட்களை வாங்கினாலும், உங்களிடம் இருந்து மறைமுகமாக சில கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பதே உண்மையாக இருக்கிறது. இதை பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு இதை பற்றி தெரியாமல் இருக்கிறது. இந்த கட்டண முறைகளை வங்கிகள் (Banks) வழங்குவதில்லை. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களே (Online shopping sites) வழங்குகின்றன.

ஆகையால், நீங்கள் வாங்கும் பொருளின் விலை எதுவாக இருந்தாலும், அதற்கான வட்டியை நிறுவனங்கள் மறைமுகமாக சேர்த்தே வசூலிக்கின்றன. உங்கள் வட்டி தொகை போக மீது தொகை தான் உங்களுக்கு சலுகை தொகையாக வழங்கப்படுகிறது. இத்துடன் பிராசஸிங் ஃபீஸ் (Processing fees) என்று ரூ.99 முதல் ரூ. 300 வரை கட்டணங்கள் உங்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இதற்கும் 18% ஜிஎஸ்டி (GST) வரி வசூலிக்கப்படுகிறது.

உங்கள் வட்டி தொகை உடன் சேர்த்து பொருளின் விலை குறைக்கப்படுகிறதென்பதை தாண்டி, மறைமுகமாக பிராசஸிங் ஃபீஸ் மற்றும் மாதம் தோறும் ஜிஎஸ்டி கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதை 6 மாதம் வரை செலுத்தும் பொழுது, உண்மையில் வீண் செலவாக அமைகிறது.

Best Mobiles in India

English summary
Online Shopping Users Alert No EMI Cost Is Charging Invisible Charges From Customers Is It Good or Bad
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X