ஆன்லைன் மூலம் டிவி பிரிட்ஜ் செல்போன் வாங்கலாம்: ஏப்.,20 முதல் தொடக்கம்- எப்படி ஆர்டர் செய்யலாம்?

|

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் அமேசான், பிளிப்ஃகார்ட், ஸ்நாப்டீல் போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் விற்பனையைத் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கை

கொரோனா பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கை

கொரோனா பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். அதேபோல் ஏப்ரல் 20 ஆம் தேதியில் இருந்து சில தளர்வுகள் விதிக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். இந்த தளர்வுகளில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் சேவை நிறுவனங்கள்

அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் சேவை நிறுவனங்கள்

இந்த தளர்வுகளில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட, ஆன்லைன் சேவை நிறுவனங்கள் வாயிலாக, மொபைல் போன், டிவி, பிரிஜ் போன்ற பொருட்களை வாங்கலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதை பார்க்கலாம்

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதை பார்க்கலாம்

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதை பார்க்கலாம். மத்திய அரசு தளர்வுகள் அறிவித்துள்ள துறையில் எலெக்ட்ரானிக் துறையும் உள்ளது. இதையடுத்து மொபைல் போன், டிவி, பிரிஜ், லேப்டாப் போன்ற பொருட்கள் விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆம் தேதி முதல் வாங்கலாம்

20 ஆம் தேதி முதல் வாங்கலாம்

இதை ஆன்லைன் சேவை நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற டெலிவரி நிறுவனங்களில் இருந்து 20 ஆம் தேதி முதல் வாங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அந்தந்த உள்ளூர், நகர அதிகாரிகளிடம் அனுமதி

அந்தந்த உள்ளூர், நகர அதிகாரிகளிடம் அனுமதி

இதில் அந்தப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்கு அந்தந்த உள்ளூர், நகர அதிகாரிகளிடம் முறையாக நிறுவனங்களின் முகவர்கள் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உணவு, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள்

உணவு, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள்

அதேபோல் முன்னதாக உணவு, மருந்துப்பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தளர்வுகளின் மூலம் தற்போது இதற்கும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஊழியர்களின் உடல் வெப்பநிலையைக் காட்டும்

ஊழியர்களின் உடல் வெப்பநிலையைக் காட்டும்

சொமேட்டா அதன் விநியோக ஊழியர்களின் உடல் வெப்பநிலையைக் காட்டும் வகையில் பயன்பாடு ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த வெப்பநிலை பயன்பாடானது யாருக்கேனும் காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் அதை காண்பிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உணவகத்தில் உள்ள ஊழியர்களின் வெப்பநிலையை அனைவருக்கும் காண்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்டர் செய்த பொருட்கள் வீடு தேடி வரும்

ஆர்டர் செய்த பொருட்கள் வீடு தேடி வரும்

ஆன்லைன் சேவை நிறுவனங்களின் வேன்கள் இயங்குவதற்கு அனுமதி கிடைத்தால், ஆர்டர் செய்த பொருட்கள், தாமதமின்றி, மக்களின் வீடு தேடி வரும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொருட்களை டெலிவரி செய்யும் போது லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட வாய்ப்புள்ளது.

பாதுகாப்பு, நலன் ஆகியவற்றில் முக்கியத்துவம்

பாதுகாப்பு, நலன் ஆகியவற்றில் முக்கியத்துவம்

இதையடுத்து அவர்களின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றில் முக்கியத்துவம் செலுத்துவது அவசியம் எனவும் கண்டிப்பாக சமூக விலகலைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

source: indianexpress.com

Best Mobiles in India

English summary
online shopping start from flipkart, amazon,snapdeal in india!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X